Published:Updated:

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டுமா?

காலை உணவு
News
காலை உணவு ( Image by mcthrissur from Pixabay )

பசிக்கிறதோ இல்லையோ... ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் இடையில் எதையாவது சாப்பிட வேண்டும் என்று பழகியவர்கள், அதன் தொடர்ச்சியாக அதிக நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளாவதையும் பார்க்கலாம்.

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

 ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதையடுத்து மதியத்துக்கும் மாலைக்குமான இடைவெளியில் சூடாக காபியோ, டீயோ குடிப்பார்கள் அவர்கள். இரவு உணவையும் சற்று முன்னதாகவே முடித்துக் கொள்வார்கள்.

காலங்காலமாக அப்படியே பழகியவர்களுக்கு அது இயல்பானதாக மாறியிருக்கும். அவர்களது உடலும் அதை ஏற்றுக்கொண்டு பழகியிருக்கும். அவர்களுக்கு காலை உணவைத் தவிர்ப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது.

இன்னும் சிலருக்கு மதிய உணவு வரை பசியே எடுக்காது. அவர்கள் இடையில் எதையும் சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதிய உணவுக்குத் தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். காலை உணவோ, இரவு உணவோ ஒரு பொருட்டாக இருக்காது. அப்படிப் பழகியவர்களுக்கும் அது ஓகேதான்.

எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியபடி உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி காலை உணவைத் தவிர்ப்பதில் எந்த அசௌர்கயமும் இல்லாத, நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்கிற, மதிய உணவையும், மாலை நேர ஸ்னாக்ஸையும், இரவு உணவையும் ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

food
food

பசிக்கிறதோ இல்லையோ... ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் இடையில் எதையாவது சாப்பிட வேண்டும் என்று பழகியவர்கள், அதன் தொடர்ச்சியாக அதிக நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளாவதையும் பார்க்கலாம்.

எனவே காலை உணவைத் தவிர்ப்பதா, கூடாதா என்பது அவரவர் தேவை, உடல்நலம் மற்றும் பழக்கத்தைப் பொறுத்தது. உங்கள் விஷயத்தில் உங்கள் உடல் எதை ஏற்றுக்கொள்கிறதோ, அதையே பின்பற்றலாம். இதுதான் சரி, இது தவறு என இதில் வரையறை ஏதுமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.