Published:Updated:

Doctor Vikatan: ஆறு மாதங்களில் திருமணம்... அதற்குள் எடையைக் குறைக்க முடியுமா?

திருமணம் (Representational Image)
News
திருமணம் (Representational Image)

திருமணம் நெருங்குவதால் அவசரமாக எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் தவறான டயட் முறை எதையும் பின்பற்றாதீர்கள். அப்படிப்பட்ட டயட் முறை ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, உங்கள் எனர்ஜி லெவலை குறைத்து, தசையிழப்புக்கு காரணமாகும்

Published:Updated:

Doctor Vikatan: ஆறு மாதங்களில் திருமணம்... அதற்குள் எடையைக் குறைக்க முடியுமா?

திருமணம் நெருங்குவதால் அவசரமாக எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் தவறான டயட் முறை எதையும் பின்பற்றாதீர்கள். அப்படிப்பட்ட டயட் முறை ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, உங்கள் எனர்ஜி லெவலை குறைத்து, தசையிழப்புக்கு காரணமாகும்

திருமணம் (Representational Image)
News
திருமணம் (Representational Image)

எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. பி.எம்.ஐ அளவைவிட உடல் எடை அதிகமாக இருக்கிறது. சருமமும் பொலிவின்றி இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் இதையெல்லாம் சரி செய்ய முடியுமா? நான் என்ன செய்ய வேண்டும்?

  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

திருமணமாகவுள்ள உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! ஆறு மாதங்களில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எடைக்குறைப்புக்குத் திட்டமிட இதுதான் சரியான நேரம். இப்போதிலிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், திருமணத்துக்குள் உங்களால் எடையைக் குறைக்க முடியும்.

திருமணம் நெருங்குவதால் அவசரமாக எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் தவறான டயட் முறை எதையும் பின்பற்றாதீர்கள். அப்படிப்பட்ட டயட் முறை ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி, உங்கள் எனர்ஜி லெவலை குறைத்து, தசையிழப்புக்கு காரணமாகும் என்பதால் கவனமாக இருங்கள்.

தினமும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர்ச்சத்து வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் சருமத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். குடல் இயக்கத்தைச் சீராக்கும். எனர்ஜியும் குறையாமலிருக்கும்.

இனிப்புச்சத்தை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள். வெள்ளைச் சர்க்கரை, ஐஸ்க்ரீம், சாக்லேட், கோலா பானங்கள், செயற்கை ஜூஸ் போன்றவற்றை முடிந்த அளவுக்குத் தவிருங்கள்.

Weight loss (Representational Image)
Weight loss (Representational Image)
Photo by Ketut Subiyanto from Pexels

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுக்கு மாறுங்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பழுப்பு அரிசி, பொரிக்காத காய்கறிகள், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை போன்றவற்றுக்குப் பழகுங்கள். கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்ப்பது என்பது உங்களை களைப்படையச் செய்யும். எரிச்சலை உண்டாக்கும். எனவே ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உடலுக்கு அவசியம். மணநாளுக்குத் தயாராகும் நீங்கள் மனநலனிலும் கவனமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

அதிகப்படியான உப்பை தவிர்க்கவும். உப்புச்சத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதால் உடல் உப்புசம் ஏற்பட்டு, திருமண நாள் புகைப்படங்களில் மோசமாகப் பிரதிபலிக்கும். திருமண புகைப்பட ஆல்பம் என்பது வாழ்நாளுக்கான பொக்கிஷம். அதில் நீங்கள் சிறப்பாகக் காட்சியளிக்க வேண்டாமா? உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, அசைவ உணவுகள், அப்பளம், ஊறுகாய், சாஸ் வகைகள், கெட்ச்சப் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது.

உணவில் புரதச்சத்து, காய்கறிகள், பழங்கள், ஆரோக்கியமான கொழுப்பு- இவை பிரதான பங்கு வகிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலை உணவுக்கு முட்டை, நட்ஸ், சீட்ஸ், அடை, பெசரட்டு, பனீர், டோஃபு எடுத்துக் கொள்ளலாம்.

பிரதான உணவுக்கு பருப்பு, காய்கறிகள், ஃபிளாக்ஸ் சீட்ஸ் பொடி கலந்த மோர் அல்லது அசைவம், காய்கறி, ரசம் அல்லது மோருடன் சிறிது சாதமோ, ரொட்டியோ அல்லது மீன், காய்கறிகள், சீட்ஸ் கலவை அல்லது சாலட், நட்ஸ், சீட்ஸ் அல்லது காய்கறிகள் கலந்த கிச்சடி, சாலட், கீரை, பருப்பு ரசம் போன்றவற்றை எடுக்கலாம். வெறும் சாலட் அல்லது சூப்பை கூட ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Diet
Diet

இவற்றையெல்லாம் பின்பற்றுவதோடு, ஸ்ட்ரெஸ் இல்லாமல இருக்கப் பழகுங்கள். நல்ல தூக்கமும் அமைதியான மனநிலையும் இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.