Published:Updated:

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்கள் புரதச்சத்தை அதிகரித்துக்கொள்ள என்னதான் வழி?

புரதச்சத்து நிறைந்த உணவுகள்
News
புரதச்சத்து நிறைந்த உணவுகள் ( freepik )

நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். சைவ உணவுக்காரர்கள் கீழ்க்காணும் வழிகளில் புரதத்தின் அளவை அதிகரிக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்கள் புரதச்சத்தை அதிகரித்துக்கொள்ள என்னதான் வழி?

நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். சைவ உணவுக்காரர்கள் கீழ்க்காணும் வழிகளில் புரதத்தின் அளவை அதிகரிக்கலாம்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்
News
புரதச்சத்து நிறைந்த உணவுகள் ( freepik )

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்துக் குறைபாடு மிகவும் சகஜமாக இருப்பதைக் கேள்விப் படுகிறோம். அவர்கள் சைவ உணவுகளிலேயே புரதச்சத்தை அதிகரித்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

 ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். அதாவது ஹார்மோன்கள் சீராக இருக்க, தசைகளின் ஆரோக்கியத்துக்கு, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க, திசுக்கள், செல்களின் வளர்ச்சிக்கு, காயங்கள் ஆறுவதற்கு, உடலின் பிஹெச் அளவை சரியாக வைத்துக்கொள்ள, உடலின் நீர்ச்சத்தை சரியாக வைத்துக்கொள்ள, உடலியக்கத்துக்கான ஆற்றலை அளிக்க... இப்படி பல வேலைகளுக்கும் புரதச்சத்து இன்றியமையாததாகிறது.

சைவ உணவுக்காரர்கள் கீழ்க்காணும் வழிகளில் புரதத்தின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். சாம்பார் வைக்கும்போது அதை நீர்க்கத் தயாரிக்காமல் கெட்டியாகச் செய்யுங்கள். அதற்கேற்றபடி பருப்பின் அளவை அதிகரியுங்கள்.

வாரம் ஒருநாளாவது பருப்பு வகைகளை உபயோகித்துச் செய்கிற அடை, பெசரட், கடலைமாவு சில்லா, பருப்பு தோசை எனப் பருப்பு உபயோகித்துச் செய்யும் உணவுகளைச் சாப்பிடுவதை வழக்கப் படுத்துங்கள். சைவம்தான்... ஆனாலும், முட்டை மட்டும் ஓகே என்பவர்கள், பிடிக்காத காய்கறிகளைச் சமைக்கும்போது (உதாரணத்துக்கு அவரைக்காய் பொரியல்) அதில் முட்டை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். முடிந்தவரை இப்படிச் செய்யும்போது சூடாகச் சாப்பிடுவதுதான் சுவையாக இருக்கும்.

தினமும் உணவில் ஏதேனும் ஒருவகையில் சீட்ஸ், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். சாலட், புட்டிங் என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். சோயா உணவுகளான டோஃபு, டெம்பே போன்றவற்றைச் சாப்பிடலாம்.

சைவ புரதம் உணவுகள்
சைவ புரதம் உணவுகள்

காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றுடன் கறுப்பு கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றைச் சேர்க்கலாம். பனீர், ராஜ்மா, டோஃபு போன்றவை சேர்த்து கட்லட் செய்து சாப்பிடலாம். தால் சூப் குடிக்கலாம். பயத்தம்பருப்பு சேர்த்துச் செய்கிற சாலட், பீன்ஸ் சாலட் சாப்பிடலாம். சாட் பிரியர்கள், டோக்ளா அல்லது காண்ட்விச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.