Published:Updated:

Doctor Vikatan: அசைவ உணவை சாப்பிட மறுக்கும் குழந்தை... அந்தப் பழக்கம் தொடருமா?

குழந்தை
News
குழந்தை

சிறு குழந்தைகள் புதிய உணவை சாப்பிடப் பழகுவதற்கு முன் குறைந்தது ஏழெட்டு முறையாவது அதைச் சாப்பிட மறுக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. உதாரணத்துக்கு வேகவைத்த முட்டையைக் குழந்தை சாப்பிட மறுக்கலாம். அந்த வாசனை குழந்தைக்குப் பிடிக்காமலிருக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: அசைவ உணவை சாப்பிட மறுக்கும் குழந்தை... அந்தப் பழக்கம் தொடருமா?

சிறு குழந்தைகள் புதிய உணவை சாப்பிடப் பழகுவதற்கு முன் குறைந்தது ஏழெட்டு முறையாவது அதைச் சாப்பிட மறுக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. உதாரணத்துக்கு வேகவைத்த முட்டையைக் குழந்தை சாப்பிட மறுக்கலாம். அந்த வாசனை குழந்தைக்குப் பிடிக்காமலிருக்கலாம்.

குழந்தை
News
குழந்தை

என் குழந்தைக்கு 2 வயதாகிறது. அவனுக்கு அசைவ உணவுகள் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறான். முட்டை, சிக்கன், மீன் என எதுவுமே அவனுக்குப் பிடிப்பதில்லை. இந்த வயதில் கொடுத்துப் பழக்காவிட்டால், அவன் வளர்ந்த பிறகு சாப்பிட வைப்பது கஷ்டம் என்கிறார்கள். அப்படியா? குழந்தைக்கு எந்த வயதில் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம்?

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஒன்பது மாதம் என்பது குழந்தைக்கு அசைவ உணவுகளைப் பழக்குவதற்கு ஏற்ற பருவம்தான். ஆனால் அந்த உணவுகளை நீங்கள் எந்தப் பதத்தில் கொடுக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதாவது மிகவும் மென்மையான பக்குவத்தில் குழந்தைக்கு அசைவ உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

Egg
Egg

குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் கொடுத்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. குழந்தை ஓர் உணவை சாப்பிட மறுத்தால் அந்த உணவின் ஃப்ளேவர், செய்முறை என எதையாவது மாற்றிக் கொடுத்துப் பார்க்கலாம்.

சிறு குழந்தைகள் புதிய உணவை சாப்பிடப் பழகுவதற்கு முன், குறைந்தது ஏழெட்டு முறையாவது அதைச் சாப்பிட மறுக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, குழந்தை ஓர் உணவை சாப்பிட மறுத்தால் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. சில நாள்கள் சாப்பிடலாம், சில நாள்கள் சாப்பிட மறுக்கலாம்.

முதல் வேலையாக நீங்கள் கொடுக்கும் உணவின் செய்முறையை மாற்றிப் பாருங்கள். உதாரணத்துக்கு வேகவைத்த முட்டையை குழந்தை சாப்பிட மறுக்கலாம். அந்த வாசனை குழந்தைக்குப் பிடிக்காமலிருக்கலாம். எனவே, அதற்குப் பதில் அதில் சிறிது மசாலா சேர்த்தோ, சீஸ் சேர்த்து ஆம்லட்டாகவோ, பொடிமாஸ் போன்றோ செய்து கொடுத்துப் பார்க்கலாம். அனைத்துவகை அசைவ உணவுளுக்கும் இந்த முறை உதவும். முயற்சி செய்து பாருங்கள்.

food choices
food choices

தவிர, குழந்தையின் சுவை சாய்ஸ் என்பது அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் குழந்தை ஓர் உணவை சாப்பிட மறுப்பதால், அது காலம் முழுவதும் அந்த உணவை சாப்பிடாது என அர்த்தமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.