Published:Updated:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா? | Doubt of Common Man

சமையல் எண்ணெய்
News
சமையல் எண்ணெய்

நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

Published:Updated:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா? | Doubt of Common Man

நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமையல் எண்ணெய்
News
சமையல் எண்ணெய்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர், " நாம் பயன்படுத்தும் எண்ணெய் பொருட்கள் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

சமையலில் முக்கியப்பொருள் எண்ணெய். எண்ணெய்யின் தன்மை பொறுத்து உணவின் சுவையே மாறும். ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிட்டத்தட்ட 40 கலோரிகள் வரை கொண்டது. நம் ஊர் சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட பலதரப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், நாம் சமையலில் தினசரிப் பயன்படுத்தும் இந்த எண்ணெய்க்கு எக்ஸ்பயரி தேதி உண்டா என என்றைக்காவது யோசித்திருக்கிறோமா. நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்

நம் வாசகரின் கேள்வியை 'தமிழ்நாடு ஆயில் அண்ட் சீட்ஸ் அசோசியேசனிடம்' முன்வைத்தோம். அவர்கள் கூறியதாவது, “மற்ற சமையல் பொருட்களைப் போல எண்ணெய்க்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. பொதுவாக எண்ணெய் உற்பத்தி தேதியில் இருந்து 6 முதல் 9 மாதம் வரை நன்றாக இருக்கும். ஒரு வருட காலம் வரை கூடக் கெடாமல் இருக்கும். அது எண்ணெய்யின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்தது. நீங்கள் எண்ணெய் வாங்கும்போதே அந்த பாக்கெட்டின் பின்புறம் அதன் காலாவதித் தேதி போடப்பட்டிருக்கும். அதனைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.

எண்ணெய்க்கு நிறமும் மனமும் மிகவும் முக்கியம். நிறமும் அல்லது மனம் இரண்டில் ஏதாவது ஒன்றில் மாற்றம் தெரிந்தாலும் அந்த எண்ணெய் பயன்படுத்தத் தகுதியற்றது என அர்த்தம். அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.” என்று கூறினார்.

சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்

மேலும், எண்ணெய்களை எப்படி வைத்திருக்கிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைச் சரியாக மூடாமல் வைத்திருப்பார்கள். மேலும் சிலர், பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் கேஸ் அடுப்புக்கு அருகிலேயே எண்ணெய்களை வைத்திருப்பார்கள். ஆனால், அப்படி வைத்திருக்கக் கூடாது. எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைப் பயன்படுத்தி முடித்தவுடன் காற்றும் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். அதோடு காற்றோட்டமான இடங்களிலும் எண்ணெய்யை வைக்க வேண்டும். நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி அல்லது சூடான இடங்களிலோ எண்ணெய்யை வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு சரியான முறையில் வைத்திருந்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய்யை நம்மால் பயன்படுத்த முடியும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man