Published:Updated:

பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா! உண்மை என்ன? |Doubt of Common Man

பிரியாணி
News
பிரியாணி

சில நாள்களாக ’பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்’ என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?

Published:Updated:

பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா! உண்மை என்ன? |Doubt of Common Man

சில நாள்களாக ’பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்’ என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?

பிரியாணி
News
பிரியாணி
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் ராம் கண்ணன் என்ற வாசகர், "பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா! உண்மை என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இன்றைய காலகட்டத்தில் அதிகம் விரும்பப்படும் உணவு எதுவென்று கேட்டால் பிரியாணி என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். இறைச்சிகள் மட்டுமன்றி, காய்கறிகளைச் சேர்த்து சமைக்கும் வெஜிடபிள் பிரியாணியும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அதனுடன் சேர்த்துக் கொடுக்கப்படும் ரைத்தா, கத்தரிக்காய், தால்சா என இந்த காம்பினேசன் பலருக்கும் பிடித்த ஒன்று.

இப்படியிருக்கையில் சில நாள்களாக, ’பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்’ என சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவிவருகிறது. இதையொட்டி சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து நம் வாசகர் கேட்ட கேள்விக்கான பதிலை, சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

"பிரியாணி சாப்பிடால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படும். பிரியாணிகளில் சேர்க்கப்படும் பொருள்களால் இந்தப் பிரச்னைகள் வரலாம். வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடும்போது உடலில் பாதிப்புகள் வராது. சிலர் தினமும் மூன்று வேளையும் அதை மட்டுமே சாப்பிடும்போது இரத்தக் குழாய்களில் அடைப்பு, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது முற்றிலும் வதந்திதான்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!