
- சொல்கிறார் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
* உணவில் உப்பு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
* உலகின் முதல் வணிகப்பொருள் உப்புதான்.
* கல் உப்பை ‘கடல் தங்கம்’, ‘சமுத்திர ஸ்வர்ணம்’, ‘ஜலமாணிக்கம்’ என்றும் கொண்டாடுகிறார்கள்.
* உப்பை மண்பானை மற்றும் பீங்கான் ஜாடியில்தான் வைக்க வேண்டும். மற்ற உலோகங்களுடன் உப்பு வேதிவினை புரியும்.
* உப்பை மகாலட்சுமியாகப் பார்ப்பதால், இன்றும் கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமை தோறும் வீதிகளில் உப்பு விற்கிறார்கள்.

* உப்பு நம் உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ளும்; இதயம் சீராகச் செயல்பட உதவும்.
* அதிகம் உப்பு சேர்த்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆயுள் குறையும் என்கின்றன ஆய்வுகள்.
* கல் உப்பில் இயற்கையாகவே அயோடின் இருக்கிறது. அது நம் உடலுக்கு போதும்.
* கல் உப்பைத் துணியில் முடிந்து வெந்நீரில் தொட்டு, உடலின் வலியுள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
* கறுக்கிய உமித்தூள், தூளாக்கிய கல் உப்பு இரண்டையும் சம அளவு சேர்த்து பல் பொடியாகப் பயன்படுத்தி வந்தால், ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் ஆடுதல் போன்றவை சரியாகும்.
* பாதத்தில் ஆணி அல்லது முள் குத்தி விட்டால், துணியில் சுற்றிய கல் உப்பை சூடான நல்லெண்ணெயில் தொட்டு எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம். காயத்தில் சீழ் பிடிக்காது; புரையோடாது. இதை ‘சுட்டிகை’ என்போம்.

* அரை கிராம் கல் உப்பு சாப்பிட்டால் பசி உண்டாகும். 15 - 20 கிராம் கல் உப்பை தண்ணீரில் கரைத்துக் குடிக்க பேதியாகி கீழ்க்குடல் சுத்தமாகும்; குடல் கிருமிகள் வெளியேறும். 35 - 40 கிராம் கல் உப்பைக் கரைத்துக்கொடுத்தால் வயிற்றிலிலுள்ள அனைத்தும் வாந்தியாக வெளியேறும். விஷமருந்தியவர்களுக்கான முதலுதவி இது.
* இந்துப்பை தினசரி சமையலில் சேர்க்கச் சொல்லி சித்த மருத்துவ நூல்கள் அறிவுறுத்த வில்லை. அதை, மருத்துவத்தில் சில சூரணங்களில் பயன்படுத்துகிறோம். இந்துப் பில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகம் மற்றும் இதய நலனுக்கு நல்லதல்ல. எனவே மருத்துவ ஆலோசனை இன்றி இந்துப்பைப் பயன்படுத்தாதீர்கள்.
* உப்புக் கரைசலை ஆசன வாய் வழியாக, மலக்குடலில் செலுத்தினால் (பீச்சு எனிமா), மலக்குடலில் தங்கியுள்ள கழிவுகள் முழு வதும் வெளியேறிவிடும். இதை சித்த மருத் துவர் அல்லது இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.