Published:Updated:

''சமைக்க இனி சிரமப்படத்தேவையில்லை!'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி

''சமைக்க இனி சிரமப்படத்தேவையில்லை!'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி
News
''சமைக்க இனி சிரமப்படத்தேவையில்லை!'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி

''சமைக்க இனி சிரமப்படத்தேவையில்லை!'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் இன்றைய தலைமுறையினர், அன்றாடம் அவசர கதியில் இயங்குவதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் டார்கெட்டுக்காக ஓடுவதும் நித்தம் நடக்கும் காட்சியாகிவிட்டது. பணிச் சுமை உண்டாக்கும் மன அழுத்தம், இவர்களை ஒரு கொதிப்போடுதான் வைத்துள்ளது. இதன் விளைவு, ஆரோக்கியமான உணவை மறந்து கடைகளில் இன்ஸ்டன்டாக கிடைக்கும் உணவை வாங்கி உண்ணவைக்கிறது. இதற்குத் தீர்வாக, நமக்குப் பிடித்த உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட வழிசெய்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த அஞ்சலி. 

“நான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் 11 வருஷங்களா வேலை பார்த்துட்டிருந்தேன். என் கணவர் பிரவீன்குமார் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். எங்க பையன் பேரு, அயான். அவன் பிறக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லாரையும்போல அவசர அவசரமா வேலைக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். ஐ.டி வேலையில் இருக்கும் பலரும் சாப்பாட்டைப் பத்தி கேர் பண்ணிக்கிறதேயில்ல. எப்பவும் வேலையைப் பற்றியே திங்க் பண்ணிட்டிருப்பாங்க. ரெடிமேட் ஃபுட் வாங்கிச் சாப்பிடுவாங்க. இப்போ, அந்த கல்சர் எல்லார்கிட்டேயுமே பரவிட்டிருக்கு. காரணம், சென்னையின் டிராஃபிக்கு பயந்தே காலையில் சீக்கிரமா வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கு. வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரவும் நைட் ஆகிடுது. இதனால், வீட்டில் பிடிச்ச உணவை சமைச்சு சாப்பிட முடியறதில்லை. 

பத்து வருஷத்துக்கும் மேலே ஐ.டியிலிருந்து பெற்ற அனுபவத்தில் இதை பர்சனலா உணர்ந்தேன். என் பையனும் டி.வியில் பார்க்கும் ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளை விரும்பி கேட்க ஆரம்பிச்சான். என்ன பண்ணலாம்னு யோசிச்சு, மார்க்கெட்ல தேடித் தேடி ஆரோக்கியமான பொருள்களை வாங்கி வந்தேன். பாஸ்தா, நூடுல்ஸ் என வீட்டிலேயே செய்ய ஆரம்பிச்சேன். அதை என் பையன் விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சதும், இதை எல்லார்கிட்டயும் கொண்டுபோய்ச் சேர்க்கலாமேனு தோணுச்சு. கணவரிடம் சொல்லி, ஓ.கே வாங்கினேன். ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சில நிமிடங்களில் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் 'ஆசம் செஃப்' (Awesome Chef) உருவானது இப்படித்தான்'' என்று புன்னகைக்கிறார் அஞ்சலி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இது 'ரெடி டு குக்' கான்செப்ட்தான். தாய் ஸ்டைல் பெனட் நூடுல்ஸ், சீஸ் மஷ்ரூம் ராப்ஸ், நவாபி வெஜ் பிரியாணி, ஆல்ப்ஃரெடோ சிக்கன் பாஸ்தா எனப் பெரிய பெரிய ரெஸ்ட்டாரென்டுகளில் கிடைக்கும் வெரைட்டியான உணவுகளை வீட்டிலேயே ரெடி பண்ணி சாப்பிட முடியும். இந்த டிஷ்களைத் தயாரிப்பதற்கான பொருள்கள், சாதாரண பலசரக்கு கடைகளில் கிடைக்காது. தரமானதா வாங்கணும்னா நான்கு கடைகள் ஏறி இறங்கணும். எல்லாருக்கும் இதுக்கான நேரம் இருக்காது. அதனால், நாங்களே எல்லாப் பொருள்களையும் பர்சேஸ் பண்ணி, ஒரு பாக்ஸில் வெச்சு ஆர்டர் பண்றவங்களுக்கு அனுப்பிவைப்போம். இதைவெச்சு ஃபேமிலியோடு சேர்ந்து வீட்டில் சமைச்சு சாப்பிடும்போது ஹைகிளாஸ் ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் கிடைக்கும். அதோடு, குழந்தைகளே அவங்களுக்குப் புடிச்ச உணவை தயார் பண்ணிக்கலாம். பேரன்ட்ஸும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்குப் போய்ட்டு வரலாம்”.என்கிற அஞ்சலி, இப்போது ஐ.டி வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த பிசினஸில் கால் ஊன்றியிருக்கிறார். 

“எனக்கு என்ன தோணுதோ அதை இந்த வேலையில் செஞ்சுக்க முடியுது. சாப்பாட்டைப் பத்தி கேர் பண்ணிக்காமல் இருக்கிறவங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவையும் கொடுக்க முடியுதுன்னு நினைக்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு” எனப் புன்னகையோடு சொல்கிறார் அஞ்சலி.