Published:Updated:

உங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா?! Exclusive Deal

உங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா?! Exclusive Deal
உங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா?! Exclusive Deal

பல முன்னேற்றங்களைக் கண்டுள்ள நம் நாடு, நமது பாரம்பரிய பண்டங்களை இன்னும் நினைவில் கொண்டிருக்கிறதா என்று கேட்டால் அதற்கு பதிலில்லை... இதனால் நமக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு நமது பண்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் சூப்பர்மார்க்கெட், மால் என மாறி வர, நாமும் அங்கு கிடைக்கும் பீட்சா, பர்கர், குளிர் பானங்களுக்கு அடிமையாகி வருகிறோம். இவை நம் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றனவா என்பதும் கேள்விக்குறியே!

உங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா?! Exclusive Deal

பெரியவர்களை விட குழந்தைகள் தான் பெரும்பாலும் இந்த ஜங்க் ஃபுட்ஸுக்கு அடிமையாக்கப்படுகின்றனர். கண்கவர் பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்யப்பட்ட பண்டங்களை விரும்பும் குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளைப் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். நமது பாரம்பரிய பண்டங்களில் தற்போதிருக்கும் பண்டங்களைக் காட்டிலும் பல மடங்கு சத்துக்கள் இருக்கின்றன. நமது ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் பாசிப்பயிறு உருண்டை, எள்ளு உருண்டை, இலந்தை வடை, நெய் பிஸ்கெட்... இதில் சில.

இது போன்ற பண்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஊரிலும் ஸ்பெஷலாக கிடைக்கப்படுவது. இதன் செய்முறை தெரிந்தால், அதனை நாம் அன்றாடம் வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு தினமும் பள்ளிகளுக்கும் கொடுத்து விடலாம். ஆனால், இதை அத்தனையும் ஒரே ஆள் செய்யவும் முடியாது. தினமும் ஒரே மாதிரியான தின்பண்டங்களை உண்ண குழந்தைகளும் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு தினமும் பல வகையான, அதே நேரம் அவர்களுக்கு விருப்பமான பண்டங்களைக் கொடுக்க வேண்டும். அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். 

மருத்துவக் குணங்கள் நிறைந்த பண்டங்களின் அருமையை இப்போதிருக்கும் சந்ததியினர்கள் தெரிந்துக் கொள்ள விரும்புவதில்லை.  இதனிடையே, நமது கலாச்சார பண்டங்களின் முக்கியத்துவத்தையும், அதனின் பயன்களையும் இந்தக் காலகட்டத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முழு முயற்சியில் இறங்கி உள்ளது ‘நேட்டிவ் ஸ்பெஷல்’. அவர்களது ஏழு நாள் பேக்கில் உள்ள சத்தான பண்டங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டியாகும். பெரியவர்களும் தங்களுக்கு விருப்பமான பண்டங்களை ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் ஸ்பெஷலான பண்டங்கள் அனைத்தும் ஒரே  இடத்தில் கிடைக்கும் வகையில் ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ பெற்றோர்களது வேலையை சுலபமாக்கியுள்ளது. குழந்தைகளுக்கான ஸ்பெஷல் பண்டங்கள், தீபாவளி பண்டிகைக்கான பண்டங்கள், பார்ட்டிக்கான ஆர்டர்கள், வீட்டுக்கு தேவையான தேன், ஊறுகாய், பனம் சர்க்கரை, கருப்பட்டி வெல்லம், நவதானிய சத்து மாவு உள்ளிட்ட பல வகையான பாரம்பரிய பண்டங்களை  ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ இணையதளம் நமக்குத் தருகிறது.

"மொழி, கலை, இலக்கியம் ஆகியவை நம் பண்பாட்டுச் சங்கிலித் தொடர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது உணவுக்கு கலாச்சாரமும் முக்கியம். தித்திக்கும் சுவை, மருத்துவ குணம் என அனைத்து அம்சங்களும் இருந்தும் நமது உணவுப் பண்டங்கள் தனக்கான இடத்தினை இன்று மெல்ல இழந்து வருகின்றன. எனவே இதனை மீட்கும் நோக்கில், சத்தான, சுவையான நம்ம ஊர்ப் பண்டங்களை, அதனின் புகழ்பெற்ற ஊர்களில் இருந்து மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம். தொடர்ச்சியாக நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களை வெளிக்கொணர்வதே எங்கள் நோக்கம்" என்கின்றனர் நேட்டிவ் ஸ்பெஷல் நிறுவனத்தார்.

இது தவிர, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்யும் வசதியையும் ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ வழங்குகிறது. இதனால் நம்மூர் தரமான பண்டங்களை உடனே பெற, நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தை அணுகவும். விகடன் வாசகர்கள், 'NSDVIKATAN' என்ற கூப்பனை பயன்படுத்தி சிறப்பு சலுகையை பெற்றுக் கொள்ளலாம். 

பின் செல்ல