Published:Updated:

இரட்டை விரி விதிப்பை எதிர்த்து உணவகங்கள் பந்த்!

இரட்டை விரி விதிப்பை எதிர்த்து உணவகங்கள் பந்த்!
இரட்டை விரி விதிப்பை எதிர்த்து உணவகங்கள் பந்த்!

வேலூர்: மத்திய அரசு விதித்துள்ள சேவை வரிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் பந்த் நடத்துகின்றன.

வேலூரில் இன்று  தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உணவக வாடிக்கையாளர்கள் தாங்கள் உண்ணும் உணவின் மீது விற்பனை வரி செலுத்துகிறார்கள். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் மத்திய அரசு சேவையை வரியை விதித்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள உணவக வாடிக்கையாளர்கள் மீது இந்த இரட்டை வரி சுமை மேலும் விழும்.

இது தொடர்பாக கடந்த 15ஆம் தேதி மும்பையில் அனைத்து ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாடு தழுவிய பந்த் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஓட்டல் உணவின் மீது முழுமையான விற்பனை வரி விதிக்கும் அதிகாரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதே விற்பனை நடவடிக்கை தேவை என வகைப்படுத்தி மத்திய அரசு சேவை வரி விதித்துள்ளது.

தெளிவாக கூறவேண்டுமெனில் ரூ.100க்கு உணவு உண்ணும் வாடிக்கையாளர்கள் ரூ.140 வரி செலுத்த வேண்டும். இவ்வாறு இரட்டை வரி விதிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இதற்கு கட்டணம் தெரிவிக்கும் வகையில் வருகின்ற 29ஆம் தேதியன்று ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் மெஸ்கள் அனைத்தையும் மூடுவதென முடிவெடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த பந்த் நடைபெறும்.

இவ்வாறு வெங்கடசுப்பு  தெரிவித்தார்.

கே.ஏ.சசிகுமார்