Published:Updated:

35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

இது சுவை வரம் கு.ஆனந்தராஜ், படங்கள் : செ.விவேகானந்தன்

35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

இது சுவை வரம் கு.ஆனந்தராஜ், படங்கள் : செ.விவேகானந்தன்

Published:Updated:
35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

“சமையல் கலை... இதை நான் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டதோடு, பல்லாயிரக் கணக்கான பெண்களுக்கும் கத்துக் கொடுத்திருக்கேன். அந்தப் பெண்களெல்லாம் என் கண்முன்னே நல்ல நிலைக்கு வளர்ந்து வந்ததைப் பார்த்து ஆனந்தப்பட்டிருக்கேன்” - பூரிப்பும் நெகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சியாமளா சிவராமன். சமையல் கலை வல்லுநரான இவர், பேக்கரி உணவுப் பொருள்கள் தயாரிப்பில் புகழ்பெற்றவர். சமையல் கலையில் ஆயிரமாயிரம் பெண்களைத் தொழில்முனைவோர்களாக உருவாக்கியவர்.

“பிறந்து வளர்ந்ததெல்லாம் இலங்கை, கொழும்புவில். எங்க பூர்வீகத் தொழிலே கேட்டரிங்தான். அதனால சின்ன வயசுலயிருந்தே நல்லா சமைப்பேன். காலேஜ் படிக்க சென்னை வந்து, கல்யாணமாகி, பையன் பிறந்துனு இங்கேயே செட்டில் ஆகிட்டேன். பேக்கரி ரெசிப்பிகள் உள்ளிட்ட பல வகையான உணவுகளையும் செய்து, அக்கம்பக்கத்தினருக்குக் கொடுப்பேன். ஒருமுறை என் பையனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு நானே கேக் செய்ய, பலரும், ‘எங்க வீட்டு நிகழ்ச்சிக்கும் செய்து கொடுங்க’னு கேட்டாங்க” என்பவர், 1981-ம் ஆண்டு முதல் முழு நேரமாக குக்கரி பிசினஸுடன் பயிற்சி வகுப்புகளையும் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

“அந்த 1980-களில், சில கடைகள்லதான் கேக் போன்ற பேக்கரி உணவுகள் கிடைக்கும். அதனால வீட்டிலேயே கேக் செய்யவும், அதை பிசினஸா செய்யவும் பெண்களுக்கு விருப்பமும் வாய்ப்பும் இருந்தது. அப்போ வெளிநாடுகளில் ஃபேமஸாக இருந்த க்ரீம் கேக்ஸ், பஃப்ஸ், பீட்சா, பர்கர், வெரைட்டியான நான்-வெஜ் உணவுகளையெல்லாம் நான் செய்யக் கத்துக்கிட்டு, பலருக்கும் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன். இப்போ மாதிரி யூடியூப் வசதியெல்லாம் அப்போ இல்லை. நிறைய ஹோட்டல்களுக்குப் போய் சாப்பிட்டுப் பார்த்துதான் பலதரப்பட்ட ரெசிப்பிகளையும் செய்யக் கத்துக்கிட்டேன்.

35 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன்! - சியாமளா சிவராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயிற்சி மற்றும் தயாரிப்பில் மைதாவுக்குப் பதிலாக கோதுமை மாவும் வனஸ்பதிக்குப் பதிலாக வெண்ணெயும்தான் பயன்படுத்துவேன்; கத்துக்கிறவங்ககிட்டயும் அதைத்தான் பயன்படுத்த வலியுறுத்துவேன். பயிற்சியுடன் ஆர்டர் எடுத்தும் சேல்ஸ் பண்ணிட்டு இருந்தேன். முதன்முதலா சென்னையில பேக்கரி உணவுப் பொருள் களுக்கான கண்காட்சியை நடத்தினேன். அதில், என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்ட பெண்கள் ஸ்டால் போடுவாங்க. அதன் மூலமாக அவங்களுக்கு நிறைய கஸ்டமர்களின் அறிமுகம் கிடைச்சு பிசினஸ் வளர்ச்சியடையும். இப்படி 11 வருஷங்கள் கண்காட்சி நடத்தியதில், நிறைய பெண்கள் தொழில்முனைவோர்களான முன்னேறி னாங்க’’ என்று சியாமளா சொல்லும் லிஸ்ட்டில், பல பிரபலங்களும் அடக்கம்.

‘`ஒருமுறை  உணவுக் காட்சிக்கு அப்போ தைய தமிழக கவர்னர் குரானாவும் அவரின் மனைவி இந்திராவும் பார்வையாளர்களாக வந்திருந்தாங்க. கிளம்பிச் செல்லும்போது, ‘எனக்கும் பயிற்சி கொடுங்க’னு இந்திரா கேட்டாங்க. ராஜ்பவனிலேயே அவங்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். இப்படி, இயக்குநர் தரின் மனைவி, முன்னணி நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் நீதிபதிகளின் மனைவிகளுக்கும் பயிற்சி கொடுத்திருக்கேன்” என்பவரிடம் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல். இந்த இடைப்பட்ட காலத்தில் கேட்டரிங் அண்டு நியூட்ரிஷியன் துறைப் பேராசிரியராகப் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறார் சியாமளா.

‘`முப்பது வருஷம் பரபரப்பா குக்கரி தொழில்ல கவனம் செலுத்தினேன். நான் கண்கூடாகப் பார்த்த உண்மை... நாளுக்கு நாள் தேவை அதிகமாகிட்டே வர்ற துறையாக இது இருக்கு. இன்றைய இளம் தலைமுறையினர் பேக்கரி உணவுப் பொருள்களை அதிகமா விரும்புறாங்க;  வரவேற்பும் அதிகரிச்சுட்டேதான் இருக்கு. களமிறங்கத் தயாரா பெண்களே?” - நம்பிக்கை கொடுக்கிறார் சீனியர் சமையல் கலைஞர் சியாமளா.

அனுபவம் பெருமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism