Published:Updated:

ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...
பிரீமியம் ஸ்டோரி
ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

ஓல்டு இஸ் கோல்டு ஆர்.வைதேகி, படங்கள் : கரிஷ்மா ஹரி, எஸ்.ஹதிஜத் ஆரிஃபா

ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

ஓல்டு இஸ் கோல்டு ஆர்.வைதேகி, படங்கள் : கரிஷ்மா ஹரி, எஸ்.ஹதிஜத் ஆரிஃபா

Published:Updated:
ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...
பிரீமியம் ஸ்டோரி
ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

`ஆட்டுக்கல், அம்மி, இயந்திரம்’ என்கிற பெயரில் வித்தியாச மான காட்சியுடன் களைக் கட்டியிருந்தது அந்த உணவுத் திருவிழா.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள `தளிகை’ ரெஸ்டாரன்ட்டில் மூன்றாம் ஆண்டுக் கொண்டாட்டமாக நடந்த அந்த ஒருநாள் காட்சியில், பாரம்பர்ய உணவுக் கருவிகள் அணிவகுத்து நின்றன.

பாட்டி, அம்மா, குழந்தைகள் என மூன்று தலைமுறைகளால் நிறைந்திருந்தது அரங்கு.

காபிக்கொட்டை அரைக்கும் மெஷினைப் பார்த்த சில பாட்டிகளுக்கு, நாஸ்டால்ஜியா நினைவுகள்...

அம்மிக் கல்லையும் ஆட்டுரலையும் பார்த்த அம்மாக்களுக்கோ, மழலை நாள் ஞாபகங்கள்...

இவையெல்லாம் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு ஏராளமான கேள்விகள்!

``அந்தக் காலத்துல அன்னன்னிக்கு காபிக்கொட்டையை வறுத்து, இந்த மெஷின்ல அரைச்சு, உடனே டிகாக்‌ஷன் போட்டுக் குடிப்போம். காபி வாசனை தெருக்கோடி வரைக்கும் மணக்கும். உங்கம்மா காலத்துல டிகாக்‌ஷனைக்கூட ஃப்ரிட்ஜ்ல வெச்சுப் பயன்படுத்துறாங்க. உங்க காலத்துல இன்ஸ்டன்ட் காபி வந்தாச்சு’’ - நினைவுகளை அசைபோட்டபடியே காபிக்கொட்டைகளை மெஷினில் அரைத்து மீண்டும் தன் காலத்துக்குள் நுழைந்து மகிழ்ந்தனர் பாட்டிகள்.

``நாங்க எல்லோரும் குழந்தைங்களா இருந்தபோது வாரத்துல ஒருநாள், ரெண்டு நாள்தான் இட்லியோ, தோசையோ கிடைக்கும். இன்னிக்கு உங்களுக்கெல்லாம் மூணு வேளையும் தோசை கிடைக்குது. இதுதான் ஆட்டுக்கல்... இதுல இப்படி அரிசியையும் உளுந்தையும் போட்டு அரைப்பாங்க அம்மம்மா. பக்கத்துல உட்கார்ந்து கதை கேட்டுக்கிட்டே நான் மாவு தள்ளிவிடுவேன்...’’ - அம்மா சொன்னதை ஆச்சர்யத்துடன் பார்த்த அந்தக் குழந்தை, பதிலுக்குக் கேட்டதுதான் ஹைலைட்.

ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

``இட்லி மாவை இப்படித்தான் ரெடி பண்ணுவாங்களா? அப்போ  அண்ணாச்சிக் கடையில பாக்கெட்டுல வாங்குவியே அதுகூட இப்படித்தான் வருதா?’’ - கிரைண்டர்கூட அறியாத இந்தத் தலைமுறைக் குழந்தையின் கேள்வி, அம்மாக்களை நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும்.

உலக்கையில் நெல் குத்துவது, அரவை இயந்திரத்தில் மஞ்சளும் மிளகாயும் அரைப்பது, சேவை நாழியில் இடியாப்பம் செய்வது, பயணத்தின்போது பயன்படுத்திய ருக்மணி குக்கர் எனப் பாரம்பர்ய உணவுத் தயாரிப்பு முறைகள் அந்தக் காலத்து சமையல் கருவிகளை வைத்தே டெமோவுடன் விளக்கப்பட்டன.

``என் பாட்டியும் அம்மாவும் மாமியாரும் இந்தக் கருவிகளை உபயோகிச்சு சமைச்சதைப் பார்த்து வளர்ந்திருக்கேன். சம்படம்னு சொல்ற அந்தக் காலத்து கன்டெயினர்களையும், தாம்பாளம்னு சொல்ற தட்டுகளையும், அன்னக்கூடையையும், இலுப்பச்சட்டியை யும், ரசம் வைக்கிற மூக்குவாளியையும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். பெரும்பாலும் எல்லாமே பித்தளைப் பாத்திரங்கள்தாம். பித்தளைக்கு சூடு தாங்கிற தன்மை உண்டுங்கிறதுதான் காரணம்.

அந்தக் காலத்துல கடுகு, உளுந்துனு எந்த மளிகைச்சாமான் வாங்கினாலும் அதுக்கேத்த சல்லடையில போட்டுச் சலிப்பாங்க. கல்லும் மண்ணும் தூசியும் தானா வந்துடும். உளுந்தைச் சல்லடையில போட்டு சலிக்கும்போது சைஸ்வாரியா அது பிரியும். முதல்தர உளுந்தை அப்பளம் செய்யவும், அடுத்ததை பொடி பண்ணவும் தனியா பிரிச்சு வைப்பாங்க.

இதெல்லாம் இந்தத் தலைமுறையில யாருக்கும் தெரியறதில்லை. தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னினுகூடச் சொல்லத் தெரியலை. வொயிட் சட்னி, ரெட் சட்னினு சொல்லிப் பழகிட்டாங்க. என்ன சாப்பிடுறாங்க, அது எப்படித் தயாராகுதுனுகூடத் தெரியாம இருக்கிறவங்களுக்குப் பாரம்பர்யத்தைக் கொஞ்சம் காட்டணும்னு ஆசைப்பட்டோம். `எல்லாமே மாறிப்போச்சு’னு புலம்பிட் டிருக்கிற பெரியவங்களுக்கு, கொஞ்சம் மலரும் நினைவுகளை அசைபோடவைக்கிற முயற்சியாகவும் இதை ப்ளான் பண்ணினோம். இது எல்லாத்தையும்விட, இந்த முறைகள்ல சமைக்கிறதால ருசி எவ்வளவு அதிகமாகும், ஆரோக்கியம் எப்படி மேம்படும்னும் காட்ட நினைச்சோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில்...

உதாரணத்துக்கு, மிக்ஸியில சட்னி அரைக்கும்போது அதன் சூடு காரணமா சீக்கிரம் கெட்டுப்போகும். அம்மியில அரைக்கும்போது அது சீக்கிரத்துல கெட்டுப் போகாது. இயந்திரத்துல மஞ்சள்பொடியும் மிளகாய்ப்பொடியும் அரைக்கும்போது கெமிக்கலோ, செயற்கை கலரோ இல்லாததால ஆரோக்கியம் பாதிக்கப்படுமோங்கிற பயம் தேவையில்லை. ஒருபக்கம் `அந்தக் காலத்து காபி மாதிரி வருமா!’னு புலம்பிக்கிட்டே இன்னொருபக்கம் காபி மேக்கர்ல காபி கலந்து குடிக்கிறோம்.

காபிக்கொட்டை மெஷின்ல அப்பப்ப அரைச்சு ஃப்ரெஷ்ஷா டிகாக்‌ஷன் தயாரிச்சு காபி குடிக்கிற சுவையெல்லாம் இந்தத் தலைமுறையினர் மிஸ் பண்ணிட்டிருக் காங்களேனு வருத்தமா இருக்கு. நேரமின்மையைக் காரணம் காட்டி இப்படி எல்லா நல்ல விஷயங்களையும் மிஸ் பண்ணிட்டிருக்கோம். நேரமின்மைங்கிறது நிஜம்தான். ஆனாலும், வாரத்துல ஒரு நாளோ, மாசத்துல ஒரு நாளோ இந்தப் பாரம்பர்ய முறை சமையலையும் முயற்சி செய்யலாம். ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் பின்னணியில எவ்வளவு மெனக்கெடல் இருக்குங்கிறதையும் சொல்ல நினைச்சோம். செய்தோம்... வந்திருந்தவர்களில் ஒருத்தர் பாரம்பர்யத்தை நோக்கித் திரும்பினால்கூட மகிழ்ச்சிதான்’’ என்கிறார் தளிகை ரெஸ் டாரன்ட்டின் நிர்வாகி நளினா கண்ணன்.

பழையன புகுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism