பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கைடு!

பீட்ரூட் பொரியலில் பொட்டுக் கடலை, காய்ந்த வரமிளகாய், பூண்டு பல் சேர்த்துச் அரைத்து சேர்க்க மிகச் சுவையாக இருக்கும்.

பொங்கல் தாளிக்கும்போது இஞ்சியைப் பொடியாகத் துருவியோ, மெல்லியதாக சீவியோ போட்டால் யாரும் கீழே எடுத்து போடாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

கிச்சன் கைடு!

முருங்கைக்கீரையின் இளம் காம்புகளைத் தூக்கிப்போடாமல், அவற்றை தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, அதில் ரசம் செய்ய, மிக சுவையாகவும் சத்துள்ள உணவாகவும் இருக்கும்.

தோசைக்கு அரைக்கும்போது அரை கப் முழு பாசிப்பயறு ஊறவைத்து, சேர்த்து அரைத்தால் தோசை ருசியாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

- ஜெ.சந்திரா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு