Published:Updated:

குல்ஃபி வண்டி வந்தாச்சு!

அன்னம் செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி

ள்ளிரவு வேளையில் நம் சாலைகளில் கலகல மணியோசை யுடன் வலம்வரும் சுவை வண்டி அது.  அந்த வண்டியிலிருக்கும் பானையில் மறைந்துகிடக்கும் குல்ஃபிக்காக நாம் காத்திருந்த காலங்களை மறக்க முடியுமா?  இப்போது குல்ஃபி வண்டிகள் குறைந்துபோய், ஹோட்டல்கள், விருந்துகளில் டெசர்ட்டாக குல்ஃபி பரிமாறப்படுகிறது. அதோடு, விதவிதமான குல்ஃபி களுக்கென்றே கடைகளும் முளைக்கத் தொடங்கி விட்டன.

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

சம்மரில் குல்ஃபி இல்லாமலா? இதோ... குழந்தைகள் விரும்பிச் சுவைக்கும் வகையில் குல்ஃபி - பாப்சிகல் ரெசிப்பிகளை ஜில் படங்களுடன் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

கேசர் பாதாம் குல்பி

தேவையானவை:

 காய்ச்சாத பால் - 200 மில்லி
 சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன்
 பாதாம் - 15
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 குங்குமப்பூ - 2 சிட்டிகை
 கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். பத்து பாதாமை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். மீதமுள்ள ஐந்து பாதாமைத் துருவவும். ஊறவைத்த பாதாமுடன் சிறிதளவு பால் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை, அரைத்த பாதாம் விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கார்ன்ஃப்ளார் கரைசல் ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, கைவிடாமல் கிளறி இறக்கவும். சூடாக இருக்கும்போதே பாதாம் துருவல், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

கார்ன்ஃப்ளாருக்குப் பதிலாகப் பால் பவுடர் அல்லது கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

பலாப்பழ குல்ஃபி

தேவையானவை:

 காய்ச்சாத பால் - அரை லிட்டர்
 பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன்
 பிரவுன் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்
 கொட்டை நீக்கிய பலாச்சுளைகள் (பெரியது) - 3 (பொடியாக நறுக்கவும்)

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். பால் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கரைக்கவும். பாதியளவு பலாச்சுளையுடன் தேவையான அளவு பால் சேர்த்து அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை சுண்டக் காய்ச்சவும். அதனுடன் கார்ன்ஃப்ளார் கரைசல் ஊற்றி, பிரவுன் சுகர் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை நன்றாகப் பளபளப்பாக வந்தவுடன் இறக்கவும். அதில் பால் பவுடர் கரைசல் சேர்த்துக் கலந்து ஆறவிடவும்.  நன்கு ஆறியதும் பலாப்பழ விழுது,  மீதமுள்ள பலாப்பழத் துண்டுகள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

மோல்டு இல்லாதவர்கள் சிறிய கிண்ணம் அல்லது டம்ளர்களில் ஊற்றி செட் செய்யலாம்.

மேங்கோ குல்ஃபி

தேவையானவை:

 காய்ச்சாத பால் - ஒரு கப்
 கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
 சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
 பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மாம்பழ விழுது - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 குங்குமப்பூ - சிறிதளவு
 பிஸ்தா - 10 (பொடியாக நறுக்கவும்)

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பால் பவுடர் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து இறக்கி ஆறவிடவும். சிறிதளவு பிஸ்தாவைத் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும். மாம்பழ விழுதுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஆறிய பாலுடன் மாம்பழ விழுது, பிஸ்தா சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீசரில்  8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும். மேலே சிறிதளவு பிஸ்தா, குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

மாம்பழ விழுதின் கலரைப் பொறுத்து குல்ஃபியின் கலர் மாறுபடும்.

கேசர் பிஸ்தா குல்ஃபி

தேவையானவை:

 காய்ச்சாத பால் - 3 கப் (750 மில்லி)
 சர்க்கரை - 80 கிராம்
 உடைத்த பிஸ்தா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
 குங்குமப்பூ - சிறிதளவு
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
 கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

பால் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். அதனுடன் பால் பவுடர் கரைசல், பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும்  இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

பால் பவுடருக்குப் பதிலாக கார்ன்ஃப்ளார் சேர்த்துக்கொள்ளலாம்.

சாக்லேட் குல்ஃபி

தேவையானவை:

 சாக்லேட் துருவல், கண்டன்ஸ்டு மில்க் - தலா கால் கப்
 கோவா - அரை கப்
 காய்ச்சாத பால் - அரை லிட்டர்
 சாக்கோ சிப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

அலங்கரிப்பதற்குச் சிறிதளவு சாக்லேட் துருவலைத் தனியாக எடுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கெட்டியாகக் காய்ச்சவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், கோவா சேர்த்துக் கிளறவும். பிறகு மீதமுள்ள சாக்லேட் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி குல்ஃபியை மெதுவாக வெளியே எடுக்கவும். சாக்லேட் துருவலால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் பாதாம், பிஸ்தா, சர்க்கரை  சேர்க்கலாம். கண்டன்ஸ்டு மில்க், கோவாவில் சர்க்கரை உள்ளதால், சர்க்கரையைப் பார்த்துச் சேர்க்கவும். மோல்டில் ஊற்றுவதற்கு முன் பிளெண்டரில் அடித்து ஊற்றினால் குல்ஃபி நன்றாக செட் ஆகும்.

ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் பாப்சிகல்

தேவையானவை:

 ஸ்ட்ராபெர்ரி - 100 கிராம்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 புளிப்பில்லாத தயிர் - 100 மில்லி
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரியுடன் தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். தயிருடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கடையவும். பாப்சிகல் மோல்டில் முதலில் கால் பங்கு அளவு ஸ்ட்ராபெர்ரி விழுதை ஊற்றவும். அதன்மீது முக்கால் அளவு வரை தயிர்க் கலவையை ஊற்றவும். அதன் மேலே மீண்டும் ஸ்ட்ராபெர்ரி விழுதை ஊற்றி மூடவும். இதை ஃப்ரீசரில்  8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

ஸ்ட்ராபெர்ரி விழுதுக்குப் பதிலாக மாம்பழ விழுது சேர்த்து மேங்கோ - யோகர்ட் பாப்சிகல் செய்யலாம். தேன், சர்க்கரையை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி கிடைக்காவிட்டால் ஸ்ட்ராபெர்ரி சிரப் சேர்க்கலாம்.

சேமியா பாப்சிகல்

தேவையானவை:

 காய்ச்சாத பால் - அரை லிட்டர்
 சர்க்கரை - 60 கிராம்
 சேமியா - 50 கிராம்
 ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
 பால் பவுடர் - 2 டீஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

பால் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்துக் கரைக்கவும். வெறும் வாணலியில் சேமியாவைச் சேர்த்துக் கருகாமல் வறுக்கவும். அதனுடன் மீதமுள்ள பால் சேர்த்து வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள், பால் பவுடர் கலவை சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் இதை பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

பால் பவுடருக்குப் பதிலாக கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

போர்பான் பாப்சிகல்

தேவையானவை:

 கொழுப்பு நீக்காத பால் - 500 மில்லி
 பால் பவுடர், சர்க்கரை  - தலா 6 டீஸ்பூன்
 போர்பான் பிஸ்கட் - 12 (சிறிய துண்டுகளாக்கவும்)
 வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

பால் பவுடருடன் சர்க்கரை, சிறிதளவு பால் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சி ஆறவிடவும். அதனுடன் பால் பவுடர் கரைசல், எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பாப்சிகல் மோல்டுகளில் முக்கால் அளவுக்கு பிஸ்கட் துண்டுகளைப் போடவும். அதன் மீது பால் கலவையை ஊற்றி மூடவும். இதை ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

பால் பவுடருக்குப் பதிலாக கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

நுங்கு பாப்சிகல்

தேவையானவை:

 நுங்கு - 8 (தோல் நீக்கவும்)
 காய்ச்சாத பால் - 2 கப்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - சில துளிகள்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

இரண்டு நுங்குகளைச் சிறிய துண்டுகளாக்கவும். மீதமுள்ள நுங்குகளை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். பால் வெதுவெதுப்பாக இருக்கும்போது அரைத்த நுங்கு விழுது,  நுங்குத் துண்டுகள், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து ஆறவிடவும். இதை மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்

குறிப்பு:

வெனிலா எசென்ஸுக்குப் பதிலாக ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். விரும்பினால் சாரைப்பருப்பு சேர்க்கலாம். பாலை நன்றாகக் காய்ச்சினால்தான் பாப்சிகல் மிருதுவாக இருக்கும்.

வெனிலா பாப்சிகல்

தேவையானவை:

 காய்ச்சாத பால் - அரை லிட்டர்
 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
 ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - சில துளிகள்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிப் பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும்.  அதனுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் ஃப்ரெஷ் க்ரீம்,  வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்க்கலாம். பாலை பிளெண்டரில் அடித்து ஊற்றினால் பாப்சிகல் க்ரீமியாக வரும்.

கஸ்டர்ட் டூட்டி ஃப்ரூட்டி பாப்சிகல்

தேவையானவை:

 காய்ச்சாத பால் - அரை லிட்டர்
 சர்க்கரை - கால் கப்
 வெனிலா கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 டூட்டி ஃப்ரூட்டி - 3 டீஸ்பூன்
 தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்

குல்ஃபி  வண்டி வந்தாச்சு!

செய்முறை:

கஸ்டர்ட் பவுடருடன் தண்ணீர் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து கஸ்டர்ட் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறி இறக்கி ஆறவிடவும் (கிளறுவதை நிறுத்திவிட்டால் கஸ்டர்ட் பவுடர் கட்டிகள் ஆகிவிடும்). பாப்சிகல் மோல்டுகளில் முதலில் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டியை சேர்க்கவும். அதன் மீது கஸ்டர்ட் கலவையை ஊற்றி மூடவும். இதை ஃப்ரீசரில் 8 முதல் 12 மணி நேரம் வரை வைக்கவும். செட் ஆனதும் ஃப்ரிட்ஜைவிட்டு வெளியே எடுத்து, குழாய்த் தண்ணீரில் காட்டி பாப்சிகலை மெதுவாக வெளியே எடுக்கவும்

குறிப்பு:

டூட்டி ஃப்ரூட்டிக்குப் பதிலாக ஜெல்லித் துண்டுகளைச் சேர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு