Published:Updated:

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

கலக்கல் கர்நாடக ரெசிப்பிகள்!ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

பிரீமியம் ஸ்டோரி

“சோஷியல் மீடியாவில் என் ரெசிப்பிகளை நான் போஸ்ட் செய்யக் கற்றுக்கொண்டபோது, எனக்கு வயது அறுபது’’ என்று சிரிக்கும் சித்ரா ராமச்சந்திரன், பெங்களூரில் வசிக்கிறவர். ‘சித்ரா அம்மா’ஸ் கிச்சன்’ வலைப்பூவைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிர்வகிப்பவர்.

‘`பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும், நான் பிறந்து, வளர்ந்தது மைசூரில். எங்கள் வீட்டுச் சமையலில் தமிழ்நாடு, கர்நாடகம் என இரண்டு மாநில ரெசிப்பிகளுக்கும் இடமுண்டு.

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

12 வயதில் நான் சமைக்க ஆரம்பித்தேன். என் சொந்த அத்தையே எனக்கு மாமியாராக, திருமணத்துக்குப் பின் நான் பெங்களூருக்கு வந்த பிறகு, அவரே எனக்குச் சமையல் குருவானார். என் கணவருக்கு உணவில் உப்பு, புளி, காரம் எல்லாம் கச்சிதமாக இருக்க வேண்டும். இப்படித்தான் என் சமையல் மெருகேறியது.

என் மூன்று குழந்தைகளும் சிறகு முளைத்து தத்தம் குடும்பங்களை அமைத்துக் கொண்ட பின், எனக்குத் தனிமைப் பொழுதுகள் நிறைய கிடைத்தன. அதை விரட்ட, `உங்கள் சமையல் முறையை வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்’ என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். பல பத்திரிகைகளிலும் என் சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கிற அளவுக்கு, எழுத்தில் எனக்கு ஆர்வமும் தேர்ச்சியும் உண்டு. கன்னடத்தில் நான்கைந்து புத்தகங்களும் வெளியாகியிருக்கின்றன. எனவே, ரெசிப்பிகளை எழுதும்போது அது சம்பந்தப்பட்ட என் நினைவுகளையும் வேடிக்கைச் சம்பவங்களையும் சேர்த்து எழுதும் எண்ணம் பிறந்தது. இப்படியாக  2008-ம் வருடம் ‘சித்ரா அம்மா’ஸ் கிச்சன்’ (chitra-ammas-kitchen.blogspot.in) பிறந்தது’’ என்கிறவர், அந்த அனுபவத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

‘`அதுவரை கை அளவையும் கண் அளவையும் நம்பி, சமைத்துக்கொண்டிருந்த எனக்கு ஸ்பூனிலும் கப்பிலும் சமையல் பொருள்களுக்கு அளவு சொல்வது  புதுமை யாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ரெசிப்பிகளை நான் எழுதிக் கொடுக்க, அதை  ‘திப்ஸ்’ (Dibs) என்ற பெயரில் என் மகள் திவ்யா பிளாகில் போஸ்ட் செய்ய ஆரம்பித்தாள்.  என் 60 வயதில், மெள்ள மெள்ள நானும் சுயமாக போஸ்ட் செய்யக் கற்றுக் கொண்டேன். என் சமையல்களை எல்லாம் என் கணவர் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொடுக்க, பிளாக் போஸ்ட்டுகள்  நல்ல வரவேற்பைப் பெற்றன. கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது  புரிந்தது’’ என்கிற சித்ரா, இங்கே டேஸ்ட்டி கர்நாடகா ஸ்பெஷல் ரெசிப்பிகளை அவள் கிச்சன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

1 ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

பெங்களூரில் மழை சீஸனில் ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் செய்யப்படும் தோசை.

காளு தோசை

தேவையானவை:

 அரிசி - 3 கப்
 உளுத்தம்பருப்பு - ஒரு கப்
 அவல் - 4 டேபிள்ஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 வெந்தயம் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை  - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

2 ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

விருப்பமான கலந்த சாதத்தை (பாத்) தோசையின் உள்ளே வைத்து மடித்துத் தருவதே பாத் தோசை.

பாத் தோசை

தேவையானவை:

 மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், குடமிளகாய் - தலா அரை கப்
 பொடியாக நறுக்கிய தக்காளி - 2 கப்
 மெல்லியதாக நறுக்கிய கேரட் - அரை கப்
 உரித்த பச்சைப் பட்டாணி - அரை கப்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள்  - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 விருப்பமான கலந்த சாதம் - ஒரு கப்
 உப்பு - ஒரு டீஸ்பூன் 

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

3 ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

மேற்புறம் மொறுமொறுப்பாகவும், உள்புறம் மிருதுவாகவும் இருக்கும் நொறுக்குத் தீனி.

மொசரு கோடுபளே

தேவையானவை:

 அரிசி மாவு -  2 கப்
 தண்ணீர் ஊற்றிக் கடைந்த தயிர்  - 2 கப்
 தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - கொத்தமல்லித்தழை விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

4 ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

உடுப்பியில் மிகப் பிரபலமான காலைச் சிற்றுண்டி; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு.

பட்டு

தேவையானவை:

 தோசை மாவு - ஒரு கப்
 ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
 பெருங்காயத்தூள்  - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை

5 ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

அரிசி மாவுடன் வெங்காயம் சேர்த்துச் செய்யப்படும் பிரபலமான கர்நாடக உணவு.

அக்கி ரொட்டி

தேவையானவை:

 அரிசி மாவு - 2 கப்
 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 உப்பு - அரை டீஸ்பூன்

 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு