Published:Updated:

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

கிஃப்ட்ஸ்எம்.ஆர்.ஷோபனா, படங்கள்: பா.காளிமுத்து

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

கிஃப்ட்ஸ்எம்.ஆர்.ஷோபனா, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

ம் வீட்டுத் திருமணத்துக்கு வந்து வாழ்த்தும் விருந்தினர்களுக்குத் தாம்பூலம் அளிப்பது சம்பிரதாயம். இது விருந்தினர்களை மகிழ்விக்க மெனக்கெடும் விசேஷ வீட்டினரின் மனதைச் சொல்லும் ஒரு வழிமுறையாகவும் அமைகிறது. திருமண வேலைகளுக்கிடையே, இதற்கு நேரம் செலவழிப்பது சிரமம் என்றாலும், ஏனோதானோவென ஒரு பரிசைத் தந்துவிட முடியாதே. இதற்காகவே யோசித்து, பிரத்யேகமாகப் பரிசுப்பொருள்கள் தயாரித்துத் தருகிறார், சென்னையில் ‘தரு கிஃப்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் சுசித்ரா.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

“நான் பிறந்தது சென்னைதான். பி.காம் முடிச்சுட்டு ஐ.டி நிறுவனத்துல வேலை பார்த்துட்டே எம்.பி.ஏ படிச்சுட்டிருந்தேன். அப்போ என் சகோதரிதான், இந்த ஐடியாவைச் சொன்னாங்க. `கல்யாணம், பண்டிகை, விழாக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்களுக்கு ஸ்வீட்ஸ் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுக்க நினைக்கிறவங்களுக்கு, அவற்றை நீ பிசினஸா செய்து தரலாமே?’னு கேட்டாங்க. அந்நேரம் எனக்கு ஐ.டி வேலை கொஞ்சம் அலுப்பைத் தந்துட்டிருக்க, `சரி, பிசினஸ் செஞ்சுதான் பார்ப்போமே’னு களத்துல இறங்கினேன். 2013-ல் இந்த பிசினஸை ஆரம்பிச்சேன்.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்களின் குடும்ப விசேஷங்களுக்குப் பரிசுகள் ஏற்பாடு செய்து தந்தேன். ஏதாச்சும் வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சப்போதான், ‘டேஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ (தமிழ்நாட்டின் தனிச்சுவை) என்கிற கான்செப்ட்டை உருவாக்கினேன். தமிழ்நாட்டுல ஒவ்வோர் ஊரும் ஒவ்வொரு வகையான பலகாரத்துக்குப் பெயர்பெற்றது. திருநெல்வேலி அல்வா, வில்லிபுத்தூர் பால்கோவா, காவேரிப்பட்டணம் தட்டுவடை, நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ், கீழக்கரை தொதல், திருநெல்வேலி தேங்காய்ப்பால் தேன்குழல், சாத்தூர் காராசேவ்... இப்படி ஒவ்வோர் ஊர் பேரையும் மணக்கவெச்சு அங்கெல்லாம் ஸ்பெஷலா ருசிச்சிட்டிருக்கிற இனிப்புகளையும் பலகாரங்களையும், அந்தந்த ஊர்களில் இருந்தே வரவெச்சு, அவற்றையெல்லாம் ஒரே கிஃப்ட் பேக்கிங்கில் ரெடி பண்ணினேன். இந்த ஐடியாவும் ருசியும் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதனாலதான், நான் பெருசா இதுவரை எந்த மார்க்கெட்டிங் யுக்திகளும் பயன்படுத்தலைன்னாலும் நண்பர்கள், உறவினர்கள் தந்த ஃபீட்பேக்கே நல்ல விளம்பரமா அமைஞ்சிருக்கு, ஆர்டர்கள் அமோகமா இருக்கு’’ எனும்போது சந்தோஷம் சுசித்ரா குரலில்.

இந்த வித்தியாச பிசினஸ் கான்செப்டைப் பாராட்டி, ‘விஷனரி உமன்’ஸ் சர்க்கிள்’ அமைப்பு இவருக்கு ‘இன்னோவேட்டிவ் அவார்டு’ வழங்கியுள்ளது. ‘சரி, நிறுவனத்துக்கு ஏன் ‘தரு கிஃப்ட்ஸ்’னு பெயர் வெச்சீங்கனு இன்னும் சொல்லலையே’ என்றதும், உற்சாகமாகிறார் சுசித்ரா.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரின் சுவையால், ‘நெல்லை அல்வா’ தனித்துவம் பெறுகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு, வடஇந்தியரால் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் மாலை நேரத்தில் அல்வா விற்பனை செய்யப்பட்டதால், ‘இருட்டுக் கடை அல்வா’ என்று பெயர் பெற்றது. இப்போதும் மாலை நேரத்தில் சிறிய பல்பு வெளிச்சத்தில் அல்வா விற்பனை செய்கிறார்கள். கடையின் இருட்டும் மாறவில்லை.சுவையும் மாறவில்லை!

‘` ‘தரு’ன்னா மரம்னு அர்த்தம். ஒரு மரத்தின் எந்தப் பாகமும் வீணாகிறது இல்லை. இலை, பூ, காய், கனி, மரம்னு எல்லாமே நமக்குப் பயன்படும். அப்படித்தான் நான் ஒருங்கிணைக்கிற இந்த கிஃப்ட்ஸும். பனை ஓலை பேக்கிங், துணிப்பை பேக்கிங்னு இதில் நான் பயன்படுத்துற எல்லா பொருள்களுமே மறுபயன்பாட்டுக்கு உகந்ததுதான்.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

‘ஏழைகளின் முந்திரி’ என்ற பெயர் நிலக்கடலைக்கு உண்டு. கிராமங்களில் நிலக்கடலையை வறுத்து, அதோடு வெல்லத்தைக்கடித்துச் சாப்பிடுவார்கள். அப்பழக்கம், கடலை மிட்டாய் என்கிற சத்துள்ள புது வகை பண்டமாக மாறியது. புரதச் சத்துள்ள நிலக்கடலையையும், கால்சியம் சத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து, உருவாக்கப்படும் மொறுமொறு கடலை மிட்டாய் தயாரிப்பில் கோவில்பட்டி  நகரம்தான் கொடிகட்டி பறக்கிறது.

எதிலும்் ஒரு பாரம்பர்ய டச் இருக்கணும்னு விரும்புவேன். பிறந்த நாள் விழாக்களுக்கான ரிட்டர்ன் கிஃப்ட்டுகளுக்கு, பாரம்பர்ய பொம்மைகள் தயாரிக்கிற சென்னாபட்டணத்துல இருந்து பொம்மைகள் வரவைக்கிறது அதற்கு ஓர் உதாரணம்.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

தூத்துக்குடி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடலோரக் கிராமங்களின் பெயர்கள், உணவுகள், பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் போர்ச்சுகீசியர்களின் தாக்கம் தவிர்க்க முடியாதது. அந்த வகைதான் மக்ரூன். இந்த இனிப்புப் பண்டம், வாயில் வைத்த உடனே கரைந்து சுவை நரம்புகளைத் தூண்டும். இதற்கு போர்ச்சுகீசிய மொழியில் ‘முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு’ என்று அர்த்தம்.

சில திருமணங்களில் பரிசை வாங்கிட்டுப்போன விருந்தினர்கள், என் நம்பர் வாங்கி, போன் பண்ணி பாராட்டுவாங்க. நாம சரியான பாதையிலதான் போயிட்டு இருக்கோம்கிறதுக்கு சான்றா இதுபோன்ற அங்கீகாரங்கள் அப்பப்போ கிடைக்கிறது உற்சாகமா இருக்கு’’ என்று சொல்லும் சுசித்ராவிடம், `இந்தத் தளத்தில் வேறு என்ன புது முயற்சிகள் செய்ய வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று கேட்டோம்.

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

தமிழ்நாட்டு கீழக்கரைக்கு எளிதில் கடல் தாண்டி வந்துவிட்டது யாழ்ப்பாணத்து பாரம்பர்ய தமிழ் இனிப்பு ‘தொதல்’.  ஆரோக்கியத்துக்கு அவசியமான அனைத்துச்  சத்துகளும் கொண்ட, பனை வெல்லம் சேர்த்துத் தயாரிக்கும் இப்பண்டத்தை, ‘கறுப்பு அல்வா’ என்றே அழைக்கிறார்கள் கீழக்கரைவாசிகள்.

‘’ ‘டேஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ மாதிரியே, ‘சவுத் இண்டியன் ஸ்பெஷல்’னு சமீபத்துல ஒரு கான்செப்டை அறிமுகப்படுத்தியிருக்கேன். இதுல, கேரளாவில் கிடைக்கிற காரா மிக்ஸர், மைசூர் ஸ்பெஷல் தட்டுவடை போன்ற வெளிமாநிலப் பலகாரங்களை வரவழைச்சு பேக் செய்றேன். பண்டிகை நாள்கள்ல, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்குக் கொடுக்கிற ஸ்வீட் பேக்குகளுக்கு இந்த ஐடியா நல்லா
வொர்க்அவுட் ஆச்சு. திருமணங்களுக்கான ரிட்டர்ன் கிஃப்ட்ஸை, ரூபாய் 150-ல் இருந்து ரூபாய் 1,250 வரை கஸ்டமர்களின் தேவையைப் பொறுத்து செஞ்சு தர்றேன். ‘டேஸ்ட் ஆஃப் தமிழ்நாடு’ ஸ்வீட் பேக்குக்கு ஒரு வாரம் முன்னாடி ஆர்டர் கொடுத்தா போதும். ‘சவுத் இண்டியன் ஸ்பெஷல்’ ஸ்வீட் பேக்குக்கு 15 நாள்களுக்கு முன்பாவது சொல்லிடணும். இந்தத் துறையில் சவால்னு பார்த்தா, நேரம்தான். ஏன்னா, ஒவ்வோர் ஊர்ல இருந்தும் இனிப்புகளை, பொருள்களை வரவழைச்சு, அதை பேக் செஞ்சு, குறித்த நாளில் டெலிவரி செய்யணும். ஆனா, இந்த த்ரில் பிடிச்சிருக்கு” - இனிப்பாகச் சிரிக்கிறார் சுசித்ரா!