புழுங்கல் அரிசி மாவு

புழுங்கலரிசி மாவு தயாரிக்கும் முறை: அரை கிலோ இட்லி புழுங்கலரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். அதில் பாதியளவு அரிசியை ரவை பதத்துக்கும், மீதமுள்ள அரிசியை நைஸாகவும் அரைத்தெடுத்துச் சிறிதளவு உப்பு போட்டுக் கரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு வாரம் வரை கெடாது. இந்த மாவைப் பயன்படுத்தி விதவிதமான பலகாரங்களைச் சமைக்கலாம்.

மசாலா கொழுக்கட்டை

தேவை: * நைஸாக அரைத்த புழுங்கலரிசி மாவு - ஒரு கப் * பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா ஒரு கப் * கேரட் துருவல் – ஒரு கப் * இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * கொத்தமல்லித்தழை – சிறிதளவு * எண்ணெய் - 3 டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வேகவைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தட்டை

தேவை: * நைஸாக அரைத்த புழுங்கலரிசி மாவு - ஒரு கப் * பொட்டுக்கடலை மாவு - கால் கப் * சூடான தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, தேங்காய் எண்ணெய், மிளகு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தட்டு வடை

தேவை: * தட்டை - 10 கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப் * உப்பு - தேவையான அளவு.

அரைக்க: * தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - ஒன்று * கொத்தமல்லித்தழை - சிறிதளவு * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துத் தண்ணீர்விட்டு மிக்ஸியில் சட்னியாக அரைத்தெடுக்கவும். கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டையின் மீது சட்னியைத் தடவவும். அதன் மீது சிறிதளவு காய்கறி கலவையை வைத்து மற்றொரு தட்டையால் மூடிப் பரிமாறவும்.

கைமுறுக்கு

தேவை: * நைஸாக அரைத்த புழுங்கலரிசி மாவு - ஒரு கப் * புழுங்கலரிசி - ஒரு கைப்பிடி அளவு * எள் - 2 டீஸ்பூன் * வறுத்து அரைத்த உளுந்த மாவு – கால் கப் * வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் புழுங்கலரிசியைப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துச் சலிக்கவும். புழுங்கலரிசி மாவுடன் வறுத்து அரைத்த அரிசி மாவு, உளுந்த மாவு, உப்பு, எள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, மாவை முறுக்குகளாகச் சுற்றவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முறுக்குகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

காய்கறி அடை

தேவை: * ரவை பதத்துக்கு அரைத்த மாவு - ஒரு கப் * துருவிய கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கீரை (சேர்த்து) - அரை கப் * தோல் சீவி நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் * பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன் * சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாவுடன் காய்கறிக் கலவை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இனிப்பு அப்பம்

தேவை: * ரவை பதத்துக்கு அரைத்த மாவு - ஒரு கப் * இட்லி மாவு - ஒரு கரண்டி * பல்லு பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகள் - 2 டீஸ்பூன் * வெல்லத்தூள் – தேவையான அளவு * ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை * நெய் - தேவையான அளவு.

செய்முறை: அரைத்த மாவுடன் இட்லி மாவு, தேங்காய்த் துண்டுகள், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து 12 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லில் சிறிதளவு நெய்விட்டு, மாவைச் சிறிய அப்பங்களாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இனிப்பு இட்லி

தேவை: * ரவை பதத்துக்கு அரைத்த மாவு - ஒரு கப் * வறுத்த பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன் * தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன் * வெல்லத்தூள் - தேவையான அளவு * ஏலக்காய்த்தூள், சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசி மாவுடன் வெல்லம் சேர்த்துக் கரைத்து 12 மணி நேரம் புளிக்க விடவும். வறுத்த பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கவும். புளித்த மாவுடன் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு, சமையல் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து, நீளவாக்கில் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

உப்புருண்டை

தேவை: * ரவை பதத்துக்கு அரைத்த மாவு - ஒரு கப் * தேங்காய்த் துருவல் - அரை கப் * உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:  * கடுகு - அரை டீஸ்பூன் * உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * காய்ந்த மிளகாய் - ஒன்று * கறிவேப்பிலை - சிறிதளவு * எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த மாவு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறியதும் உருண்டைகளாக்கி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பச்சரிசி மாவு

பச்சரிசி மாவு தயாரிக்கும் முறை: ஒரு கிலோ பச்சரிசியை ஊறவைத்துக் களைந்து வெயிலில் உலர்த்தி மெஷினில் அரைத்து வந்து மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.

உளுந்து முறுக்கு

தேவை: * பச்சரிசி மாவு - மூன்றரை கப் * வறுத்து அரைத்த உளுந்து மாவு - ஒரு கப் * எள் - 3 டீஸ்பூன் * சீரகம், ஓமம் - தலா ஒரு டீஸ்பூன் * உருக்கிய வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மாவுடன் உளுந்து மாவு, எள், சீரகம், ஓமம், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முறுக்குப் பிடியில் மாவைப் போட்டுப் பிழிந்து, வேகவைத்து எடுக்கவும்.

ரிப்பன் பகோடா

தேவை: * பச்சரிசி மாவு - 2 கப் * கடலை மாவு - ஒரு கப் * பட்டை, கிராம்பு - தலா ஒன்று * சோம்பு - 2 டீஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 2 * தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு * பூண்டு - 5 பல் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பட்டை, கிராம்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நைஸான விழுதாக அரைத்தெடுத்து வடிகட்டவும். பச்சரிசி மாவுடன் கடலை மாவு, சூடான எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு, வடிகட்டிய நீர் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை நாடா அச்சில் போட்டுப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

இனிப்பு முள் முறுக்கு

தேவை: * பச்சரிசி மாவு - ஒரு கப் * வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் * சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் * எள் - ஒரு டீஸ்பூன் * தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி அளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் அரிசி மாவை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறியபின் அதனுடன் பாசிப்பருப்பு மாவு, எள், சர்க்கரை, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு வெதுவெதுப்பான நீர்விட்டுப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

கோவா

கோவா தயாரிக்கும் முறை: தேவையான அளவு பாலை சுண்டக் காய்ச்சி, கோவா பதம் வந்த பின் இரண்டாகப் பிரித்து ஒரு பாதியில் சர்க்கரையும் மற்றொரு பாதியில் வெல்லமும் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி சேகரிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் 10 நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

கோவா கீர்

தேவை: * காய்ச்சாத பால் - கால் லிட்டர் * சர்க்கரை - 4 டீஸ்பூன் * சர்க்கரை பால்கோவா - கால் கப் * வறுத்த முந்திரி - சிறிதளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் காய்ச்சவும். அதனுடன் கோவா சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பரிமாறவும்.

ஸ்டஃப்டு பாதுஷா

தேவை: * மைதா மாவு - கால் கிலோ * சர்க்கரை பால்கோவா – தேவையான அளவு * வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் * சர்க்கரை - 400 கிராம் * உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை * எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:: மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக்கவும். அதன் நடுவே சிறிதளவு சர்க்கரை பால்கோவா ஸ்டஃபிங் வைத்து, கனமாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பாதுஷாக்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். இதில் பொரித்த பாதுஷாக்களைப் போட்டு ஊறவைத்து எடுக்கவும்.

நட்ஸ் திரட்டுப் பால்

தேவை: * முந்திரி, பாதாம் - தலா 10 * வெல்லம் சேர்த்த பால்கோவா - ஒரு கப் * நெய் - 2 டீஸ்பூன் * காய்ச்சிய பால் - ஒரு கரண்டி அளவு.

செய்முறை: பாலுடன் முந்திரி, பாதாம் சேர்த்து ஊறவைத்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். வாணலியில் நெய்விட்டு அரைத்த விழுது, பால்கோவா சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

கோவா பூரி

தேவை: * கோதுமை மாவு – ஒரு கப் * வெல்லம் சேர்த்த பால்கோவா - அரை கப் * வறுத்த தேங்காய்த் துருவல் - கால் கப் * சர்க்கரைத்தூள் - 4 டீஸ்பூன் * எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பால்கோவாவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து, பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்த்து நடுவே சிறிதளவு ஸ்டஃபிங் வைத்து மூடி மீண்டும் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த பூரியின் மீது சர்க்கரைத்தூள் தூவிப் பரிமாறவும்.

கோவா போளி

தேவை: * மைதா மாவு - கால் கிலோ * சமையல் சோடா, மஞ்சள் ஃபுட் கலர், உப்பு - தலா ஒரு சிட்டிகை * நெய் - ஒரு டீஸ்பூன் * வெல்லம் சேர்த்த பால்கோவா - கால் கப் * வறுத்த தேங்காய்த் துருவல் - கால் கப் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * நெய் (சுட்டெடுக்க) - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் உப்பு, சமையல் சோடா, மஞ்சள் கலர், நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துத் தளரப் பிசையவும். இதை மூடி 8 மணி நேரம் ஊறவிடவும். பால்கோவாவுடன் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கி தட்டி, நடுவே சிறிதளவு பால்கோவா ஸ்டஃபிங் வைத்து மூடி, மெல்லிய போளிகளாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, போளிகளைப் போட்டு நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

பூரி

பூரி தயாரிக்கும் முறை: கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து பூரிகளாகத் தேய்த்துச் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புதிய எண்ணெயில் பொரித்தால் பல நாள்கள் கெடாது.

ரப்டி பூரி

தேவை: * துண்டுகளாக்கிய பூரி - அரை கப் * காய்ச்சாத பால் - ஒரு கப் * சர்க்கரை - தேவையான அளவு * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * நறுக்கி வறுத்த பாதாம், முந்திரி - தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். சூடான பாலில் பூரிகளைப் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, மேலே முந்திரி, பாதாம் தூவிப் பரிமாறவும்.

தயிர் பூரி

தேவை: * துண்டுகளாக்கிய பூரி - அரை கப் * திக்கான தயிர் - அரை கப் * தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் * பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை - சிறிதளவு * உப்பு - தேவையான அளவு * முந்திரி - 2.

செய்முறை: தேங்காய்த் துருவலுடன், பச்சை மிளகாய், உப்பு, முந்திரி, இஞ்சி சேர்த்து அரைத்தெடுக்கவும். தயிருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். பூரித் துண்டுகளின் மீது தயிர் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:  விரும்பினால் கேரட் துருவல் சேர்க்கலாம்.

பூரி சாட்

தேவை: * பூரித் துண்டுகள் - ஒரு கப் * கேரட் துருவல் – கால் கப் * பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப் * வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கப் * சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் * இனிப்புச் சட்னி, காரச் சட்னி - தலா 2 டீஸ்பூன் * ஓமப்பொடி (ஸ்நாஸ் வகை) - தேவையான அளவு.

செய்முறை: பூரித் துண்டுகளுடன் கேரட், வெங்காயம், தக்காளி, கொண்டைக்கடலை, சாட் மசாலாத்தூள், இனிப்புச் சட்னி, காரச் சட்னி சேர்த்துக் கலக்கவும். மேலே ஓமப்பொடியைத் தூவிப் பரிமாறவும்.

சன்னா பூரி

தேவை: * பூரித் துண்டுகள் - ஒரு கப் * வேகவைத்த கொண்டைக்கடலை - அரை கப் * வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) * மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), சன்னா மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் * எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் * கொத்தமல்லித்தழை - சிறிதளவு * எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி விழுதாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சன்னா மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். பிறகு, வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கிரேவி பதம் வரும்போது பூரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:  விரும்பினால் மேலே ஓமப்பொடி தூவிப் பரிமாறலாம்.

குலாப் ஜாமூன் மிக்ஸ்

ரெடிமேட் குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கி வைத்துக்கொண்டால் விருப்பப்படும் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எளிதாகச் செய்யலாம்.

பால் ஜாமூன்

தேவை: * குலாப் ஜாமூன் மிக்ஸ் - அரை கப் * ஸ்வீட் கோவா - கால் கப் * பொடியாக நறுக்கிய முந்திரி - 4 டீஸ்பூன் * காய்ச்சிய பால் - முக்கால் கப் * கண்டன்ஸ்டு மில்க் - கால் கப் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குலாப் ஜாமூன் மிக்ஸுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுப் பிசையவும். கோவாவுடன் முந்திரி சேர்த்துக் கலக்கவும். ஜாமூன் மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நடுவே சிறிதளவு கோவா ஸ்டஃபிங் வைத்து மூடி உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பாலுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் பொரித்த ஜாமூன், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

கிரிஸ்பி பால்ஸ்

தேவை: * குலாப் ஜாமூன் மிக்ஸ் - ஒரு கப் * பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம் - தலா 2 டீஸ்பூன் * பனீர் துருவல் - 3 டீஸ்பூன் * கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குலாப் ஜாமூன் மிக்ஸுடன் கேரட், வெங்காயம், பனீர், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ஜாமூன் பாஜி

தேவை: * பொரித்த குலாப் ஜாமூன் - 10 (இரண்டாக உடைக்கவும்) * வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) * ஆய்ந்த காலிஃப்ளவர் - அரை கப் * மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் * பாவ் பாஜி மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு * எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். காலிஃப்ளவரை சூடான தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பாவ் பாஜி மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மசித்த காய்கறிகள் சேர்த்துக் கிளறவும். மேலே குலாப் ஜாமூன்களை இரண்டாகப் பிய்த்துப் போட்டுக் கலந்து இறக்கவும்.

பனீர்

பனீர் தயாரிக்கும் முறை: 2 லிட்டர் பாலைக் காய்ச்சி, பொங்கும்போது ஒரு மூடி எலுமிச்சைச் சாறு விடவும். பால் திரிந்த பின் வடிகட்டி பனீர் தயார் செய்யவும் ஃப்ரீசரில் 15 நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

ரசமலாய்

தேவை: * பனீர் - ஒரு கப் * பால் பவுடர் - 2 டீஸ்பூன் * காய்ச்சாத பால் - முக்கால் லிட்டர் * சர்க்கரை - தேவையான அளவு * பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்து அரை லிட்டர் ஆகும் வரை சுண்டக் காய்ச்சி இறக்கவும். பனீரை உதிர்த்து, பால் பவுடர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். 5 நிமிடங்கள் கழித்து பனீர் கலவையை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக்கி லேசாகத் தட்டவும். இதைப் பாலில் போட்டு, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பனீர் வெந்து உப்பி வரும்போது முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

பனீர் பஜ்ஜி

தேவை: * பனீர் - ஒரு கப் * அரிசி மாவு - ஒரு டீஸ்பூன் * பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் * சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் * பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.

பஜ்ஜி மாவு செய்ய: * கடலை மாவு - ஒரு கப் * அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பஜ்ஜி மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைக்கவும். அரிசி மாவு, வெங்காயம், சீரகத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு, உதிர்த்த பனீர் சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் செய்யவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பனீரில் செய்து வைத்த வடிவங்களைப் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பனீர் ஊத்தப்பம்

தேவை: * தோசை மாவு - 2 கப் * பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் - தலா கால் கப் நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி - தலா அரை டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிதளவு * பனீர் - அரை கப் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். தோசை மாவுடன் வதக்கிய கலவை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சற்றுக் கனமான ஊத்தப்பங்களாக ஊற்றி, மேலே உதிர்த்த பனீர் தூவிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பருப்பு ரவை

ஒரு கப் கடலைப்பருப்புடன் ஒரு கப் துவரம்பருப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் இதை வெயிலில் நன்கு காயவைத்து ரவை பதத்துக்கு உடைத்தெடுக்கவும். பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.

பிடிகொழுக்கட்டை

தேவை: * பருப்பு ரவை - ஒரு கப் * தண்ணீர் - 2 கப் * தேங்காய்த் துருவல் - அரை கப் * உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:  * எண்ணெய் - 2 டீஸ்பூன் * கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் * பெருங்காயத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிதளவு * காய்ந்த மிளகாய் - ஒன்று.

செய்முறை: பருப்பு ரவையுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு பருப்பு ரவை கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பக்கோடா

தேவை: * பருப்பு ரவை - ஒரு கப் * கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * நறுக்கிய வெங்காயம் - அரை கப் * தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன் * கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு * மிளகாய்த்தூள், சோம்புத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு ரவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, மிளகாய்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சிரமத்தைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்

``என்ன டிபன் செய்யலாம்? - தினந்தோறும் இல்லத்தரசிகளின் மண்டையைக் குடையும் கேள்வி இது. கூடவே, அவ்வப்போது இனிப்பு வகைகளையும் செய்து தர வேண்டியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று மிகவும் பிடிக்கும். அனைவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்வது என்பது கம்பி மேல் நடப்பது போன்ற கலை. அதை சமாளித்துவிட்டாலும், அதற்கான முயற்சி, சில சமயங்களில் அயர்ச்சியில் ஆழ்த்திவிடும். `சமையலறை வேலையைக் கொஞ்சமாவது எளிமைபடுத்திக்கொள்ள முடியுமா?’ என்று ஏங்குபவர்கள் பலர். அவர்களுக்கு உதவும் விதத்தில் `ஒரே பொருள் பல பலகாரங்கள்’ என்கிற கான்செப்ட்டில், சில பேஸிக் இடுபொருள்களைக் கொண்டு சுவையான உணவு வகைகளை இந்த இணைப் பிதழில் வழங்கியுள்ளேன்.

பால் கொழுக்கட்டை, உப்புருண்டை, தட்டு வடை, கோவா போளி, ரப்டி பூரி, தயிர் பூரி, காய்கறி அடை, ரசமலாய் என வரிசைகட்டி நிற்கும் இந்த ரெசிப்பிகள், உங்கள் சிரமத்தைக் குறைப்பதுடன், குடும்பத்தினரை வித்தியாச மான சுவை அனுபவத்தில் ஆழ்த்தும் என நம்புகிறேன்’’ என்று அன்பும் அக்கறையும் மேலிடக் கூறுகிறார், திருத் துறைப்பூண்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் பார்வதி கோவிந்தராஜ்.

படங்கள்: க.சதீஷ்குமார்