அவல் கேசரி

தேவை: * கெட்டி அவல் - 100 கிராம் * சர்க்கரை - 150 கிராம் * கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை * ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை * நெய் - 4 டேபிள்ஸ்பூன் * முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்).

செய்முறை:  வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுத்து, ஆறியதும் மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும். ஒரு பங்கு அவலுக்கு இரு மடங்கு தண்ணீர் அளந்து பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் பொடித்த அவலைச் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள், மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:  சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

நட்ஸ் பக்கோடா

தேவை: * வறுத்த வேர்க்கடலை - 50 கிராம் (தோல் நீக்கவும்) * பொட்டுக்கடலை - 50 கிராம் * முந்திரி, பிஸ்தா, பாதாம் - தலா 10 (துண்டுகளாக்கவும்) * கடலை மாவு, அரிசி மாவு - தலா 100 கிராம் * வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடியளவு * தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, வெண்ணெய், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்க்கலாம்.

புரோட்டீன் லட்டு

தேவை: * சத்து மாவு (ரெடிமேடாகக் கிடைக்கும்) - ஒரு கப் * பொடித்த சர்க்கரை - 2 கப் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * முந்திரி - 20 * நெய் - 100 மில்லி.

செய்முறை: வெறும் வாணலியில் மாவை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுத்து துண்டுகளாக்கவும். மாவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்விட்டுச் சூடாக்கி மாவுடன் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

தேங்காய்ப்பால் தினை மாவு பணியாரம்

தேவை: * தேங்காய் - ஒரு மூடி (துருவி பாலெடுக்கவும்) * தினை மாவு, வெல்லத்தூள் - தலா 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * நெய் - 100 மில்லி.

செய்முறை: தினை மாவுடன் தேங்காய்ப்பால், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). பணியாரக்கல்லைக் காயவைத்து நெய்விட்டுச் சூடாக்கி, மாவைக் குழிகளில் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: தினை மாவுடன் தேன், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம்.

மினி மனோகரம்

தேவை: * அரிசி மாவு - 200 கிராம் * வறுத்து, அரைத்துச் சலித்த உளுந்து மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் * வெல்லத்தூள் - 200 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உளுந்து மாவு, வெண்ணெய், சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் சிறிய துண்டுகளாக உடைக்கவும். பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி உருட்டு பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும் (சிறிதளவு பாகை தண்ணீரில் போட்டு எடுத்தால் உருட்ட வர வேண்டும்). அதனுடன் முறுக்கு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

எள் வேர்க்கடலை உருண்டை

தேவை: * வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கி ஒன்றிரண்டாக உடைக்கவும்), வறுத்த எள் - தலா 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * வெல்லத்தூள் - 200 கிராம்.

செய்முறை: வேர்க்கடலையுடன் எள் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கரைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி உருட்டு பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும் (சிறிதளவு பாகை தண்ணீரில் போட்டு எடுத்தால் உருட்ட வர வேண்டும்). அதனுடன் வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

அவல் ஓட்ஸ் பணியாரம்

தேவை: * கெட்டி அவல், ஓட்ஸ் - தலா 100 கிராம் * பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் * தோல் சீவி அரைத்த இஞ்சி விழுது (அ) பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் * பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன் * கடுகு - ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலுடன் ஓட்ஸ் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஓட்ஸ் மாவுடன் வதக்கிய கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைக் காயவைத்துக் குழிகளில் எண்ணெய்விட்டு மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

மிளகு சீடை

தேவை: * பச்சரிசி - 200 கிராம் * உடைத்த மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன் * வறுத்து, அரைத்துச் சலித்த உளுந்து மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் * வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் * கொப்பரை தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். அரிசியில் லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். வெறும் வாணலியில் மாவை லேசாகச் சூடு வரும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு, உளுந்து மாவு, கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டிய சீடைகளைப் போட்டுப் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

பலாப்பழ போளி

தேவை: * பலாச்சுளை - 10 (கொட்டை நீக்கவும்) * வெல்லத்தூள் - 200 கிராம் * தேங்காய்த் துருவல் - ஒரு கப் * கடலைப்பருப்பு, மைதா மாவு - தலா 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை நெய் - 100 மில்லி * நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பை லேசாக வறுத்து எடுக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு வேகவைத்து நீரை வடியவிடவும். அதனுடன் பலாச்சுளைகள், தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரைத்த கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

மைதா மாவுடன் கேசரி பவுடர், எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டுச் சற்றுத் தளர்வாகப் பிசையவும். கையில் நெய் தடவிக்கொண்டு மாவைச் சிறிதளவு எடுத்து அப்பளம் போல தட்டி, நடுவே பூரண உருண்டை வைத்து மூடி, போளி வடிவில் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து போளிகளைப் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

மசாலா பூரி

தேவை: * கோதுமை மாவு - 200 கிராம் * பூண்டு விழுது, இஞ்சி விழுது, ஓமம் - புதினா விழுது - தலா ஒரு டீஸ்பூன் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் பூண்டு விழுது, இஞ்சி விழுது, ஓமம் - புதினா விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

முந்திரி தேங்காய் பர்ஃபி

தேவை: * முந்திரி - 100 கிராம் * தேங்காய்த் துருவல் - 2 கப் * சர்க்கரை - 200 கிராம் * நெய் - 2 டேபிள்ஸ்பூன் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முந்திரி, தேங்காய்த் துருவலை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். அடிகனமான வாணலியில் அரைத்த விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுக் கிளறவும். கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும். தட்டில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் தடவி முந்திரி கலவையைச் சேர்த்துப் பரப்பவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

சிறப்பு:  வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வா

தேவை: * சர்க்கரைவள்ளிக்கிழங்கு - கால் கிலோ * சர்க்கரை - 200 கிராம் * நெய் - 100 மில்லி * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * வறுத்த முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்).

செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி நன்கு மசிக்கவும். சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். அதனுடன் மசித்த கிழங்கு, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். துண்டுகள் போட்டும் பரிமாறலாம்.

குறிப்பு:  உருளைக்கிழங்கிலும் இதே முறையில் அல்வா தயாரிக்கலாம்.

ராகி மாவு இனிப்புச் சீடை

தேவை: * ராகி மாவு (கேழ்வரகு மாவு) * பொடித்த வெல்லம் - தலா 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி உருட்டு பதத்துக்குப் பாகு காய்ச்சவும் (சிறிதளவு பாகை தண்ணீரில் போட்டு எடுத்தால் உருட்ட வர வேண்டும்). பாகுடன் ஏலக்காய்த்தூள், ராகி மாவு சேர்த்துக் கிளறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டிய சீடைகளைப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சிறப்பு:  ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

பாசிப்பருப்பு உருண்டை

தேவை: * பாசிப்பருப்பு - 100 கிராம் * சர்க்கரை - 200 கிராம் * ஏலக்காய்த் தூள் - சிறிதளவு * நெய் - 100 மில்லி * வறுத்த முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்).

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துச் சலிக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். பாசிப்பருப்பு மாவுடன் அரைத்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி, மாவுக் கலவையில் ஊற்றி, கைபொறுக்கும் சூட்டில் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சிறப்பு: பாசிப்பருப்பு, வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

குழல் பழப்புட்டு

தேவை: * புட்டு மாவு - 200 கிராம் (ரெடிமேடாகக் கிடைக்கும்) * நேந்திரம் பழம் - ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்) * தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்).

செய்முறை: புட்டு மாவுடன் வெதுவெதுப்பான நீர்விட்டுப் பிசிறவும். முதலில் புட்டுக் குழலில் சிறிதளவு மாவைப் போடவும். அதன் மேல் தேங்காய்த் துருவல், புட்டு மாவு, வாழைப்பழத் துண்டுகள் என வரிசையாக நிரப்பி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: குழந்தைகளுக்குச் சர்க்கரை, நெய் சேர்த்துத் தரலாம்.

மல்டி ஸ்பிரவுட்ஸ் பீட்சா

தேவை: * இட்லி அரிசி - 100 கிராம் * முளைக்கட்டிய கொண்டைக்கடலை, முளைக்கட்டிய பச்சைப் பயறு, கொள்ளு - தலா 100 கிராம் * தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு * காய்ந்த மிளகாய் - 4 * குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) * கேரட் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) * சீஸ் ஸ்லைஸ் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்) * தக்காளி - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) * கொத்தமல்லித்தழை - சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் பச்சைப் பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சிறிய பீட்சா போல ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த பீட்சாமீது குடமிளகாய், கேரட், சீஸ், தக்காளி ஆகியவற்றை மாற்றி மாற்றி வைத்து அலங்கரிக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

இனிப்பு சுகியன்

தேவை: * உளுத்தம்பருப்பு - 100 கிராம் * தேங்காய் - ஒரு மூடி (துருவவும்) * வெல்லத்தூள் - 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் * கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். தேங்காய்த் துருவலுடன் வெல்லத்தூள் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் அரைத்த விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும். உளுந்து மாவுடன் அரிசி மாவு, கேசரி பவுடர் சேர்த்து, பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பூரண உருண்டைகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஸ்பெஷல் மிக்ஸர்

தேவை:* கடலை மாவு - 300 கிராம் * அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் * மைதா மாவு, சர்க்கரை - தலா 100 கிராம் * ஓமம் - ஒரு டீஸ்பூன் * மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் * பொரிக்காத கார்ன் ஃப்ளேக்ஸ் – 100 கிராம் (கடைகளில் கிடைக்கும்) * கெட்டி அவல் - 50 கிராம் * முந்திரி - 20 * பாதாம் - 10 (உடைக்கவும்) * வேர்க்கடலை - 100 கிராம் * பொட்டுக்கடலை - 100 கிராம் * அரிசி மிட்டாய் - ஒரு சிறிய பாக்கெட் * கறிவேப்பிலை - சிறிதளவு * பெருங்காயத்தூள் - சிறிதளவு * வெண்ணெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவை மூன்று பாகங்களாகப் பிரித்து உப்பு சேர்க்கவும். முதல் பங்கு கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு அரிசி மாவு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை, பூந்தி கரண்டியில் ஊற்றித் தேய்த்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இரண்டாவது பங்கு கடலை மாவுடன் மீதமுள்ள அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு வெண்ணெய், தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பி, பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். மூன்றாவது பங்கு கடலை மாவுடன் ஓமம், சிறிதளவு வெண்ணெய், சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அவல், கார்ன் ஃப்ளேக்ஸ், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். மைதா மாவுடன் மீதமுள்ள வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய பூரிகளாகத் தேய்த்து சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பூரி துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் பொரித்த பொருள்களுடன் பெருங்காயத்தூள், அரிசி மிட்டாய் சேர்த்து நன்கு கலக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து 15 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

வெஜிடபிள் இடியாப்பம்

தேவை: * இட்லி அரிசி - 200 கிராம் * சிறிய கேரட் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) * பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கவும்) * நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப் * பச்சைப் பட்டாணி - 100 கிராம் * நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு * சிறிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று * நெய் - 2 டேபிள்ஸ்பூன் * மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மாவைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவை நன்கு பிசைந்து உருளைகளாக நீளவாக்கில் உருட்டவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து உருளைகளைச் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும் (உருளைகளைத் துண்டுகளாக்கிப் பார்த்தால் வெள்ளையாக இருக்கக் கூடாது). பிறகு மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழியவும். வாணலியில் நெய்விட்டு கேரட், குடமிளகாய், கோஸ், பட்டாணி, பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் பிழிந்த இடியாப்பம், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

பருப்பு உசிலி இடியாப்பம்

தேவை: * இட்லி அரிசி - 200 கிராம் * துவரம்பருப்பு - 50 கிராம் * கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் * காய்ந்த மிளகாய் - 4 * பெருங்காயத்தூள் - சிறிதளவு * கடுகு - ஒரு டீஸ்பூன் * எண்ணெய் - 100 * மில்லி உப்பு - தேவையான அளவு.

செய்முறை:அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மாவைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவை நன்கு பிசைந்து உருளைகளாக நீளவாக்கில் உருட்டவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து உருளைகளைச் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். (உருளைகளைத் துண்டுகளாக்கிப் பார்த்தால் வெள்ளையாக இருக்கக் கூடாது). பிறகு மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழியவும்.

துவரம்பருப்புடன் கடலைப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளிக்கவும். அதனுடன் அரைத்த பருப்புக் கலவை சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறவும். அதனுடன் இடியாப்பம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இனிப்பு இடியாப்பம்

தேவை: * இட்லி அரிசி - 250 கிராம் * பொடித்த வெல்லம் - 200 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மாவைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் மாவை நன்கு பிசைந்து உருளைகளாக நீளவாக்கில் உருட்டவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து உருளைகளைச் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும் (உருளைகளைத் துண்டுகளாக்கிப் பார்த்தால் வெள்ளையாக இருக்கக் கூடாது). பிறகு மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழியவும். பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். பிறகு வெல்லக் கரைசலைக் கொதிக்கவிட்டு உருட்டு பதத்தில் பாகு காய்ச்சவும் (சிறிதளவு பாகை தண்ணீரில் போட்டு எடுத்தால் உருட்ட வர வேண்டும்). பாகுடன் இடியாப்பம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

கலர் காராபூந்தி

தேவை: * கடலை மாவு - 300 கிராம் * கேசரி பவுடர் (பச்சை, ஆரஞ்சு, சிவப்பு) - தலா ஒரு சிட்டிகை * அரிசி மாவு - 3 டீஸ்பூன் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் * கறிவேப்பிலை – சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவை மூன்று பாகங்களாகப் பிரித்து உப்பு சேர்க்கவும். முதல் பாகத்துடன் பச்சை நிற பவுடர், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். இரண்டாம் பாகத்துடன் ஆரஞ்சு நிற பவுடர், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். மூன்றாம் பாகத்துடன் சிவப்பு நிற பவுடர், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு மாவு வகைகளைப் பூந்திக் கரண்டியில் ஊற்றித் தேய்த்து வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். கலர் காராபூந்திகளுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.

ஃப்ரூட்ஸ் பொங்கல்

தேவை: * சாமை அரிசி - 200 கிராம் * மிளகு, சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் * முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்) * தோல் சீவி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு * பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் * தோல் சீவிய மாம்பழத் துண்டுகள் , பொடியாக நறுக்கிய பலாச்சுளைத் துண்டுகள், நேந்திரம் பழத் துண்டுகள் - தலா ஒரு கப் * நெய் - 100 மில்லி * உப்பு - சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்புடன் அரிசி சேர்த்து லேசாக வறுத்தெடுக்கவும். குக்கரில் அரிசி - பருப்புடன் 4 கப் தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். மிளகுடன் சீரகத்தைச் சேர்த்து மிக்ஸியில் உடைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, வேகவைத்த அரிசி - பருப்பு கலவை, உப்பு, மிளகு - சீரகத்தூள், இஞ்சி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அதனுடன் மாம்பழத் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், பலாச்சுளைத் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கர்ச்சிக்காய்

தேவை: * அரிசி மாவு - 200 கிராம் * பொட்டுக்கடலை - 50 கிராம்* தேங்காய்த் துருவல் - ஒரு கப் * பொடித்த வெல்லம் - 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * வறுத்து அரைத்த உளுந்து மாவு - ஒரு டீஸ்பூன் * வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் * எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை, வெல்லத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்கவும். அரிசி மாவு, வெண்ணெய், உளுந்து மாவைச் சேர்த்து சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிறகு, கொழுக்கட்டைக்குச் செய்வது போல, மாவைச் சிறிய கிண்ணங்களாகச் செய்து நடுவே பூரணம் வைத்து நீளவாக்கில் மூடவும். இதுதான் கர்ச்சிக்காய். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கர்ச்சிக்காய்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:  நன்றாக மூடவில்லையெனில் பூரணம் வெளியே வந்துவிடும்.

ஆலூ மேத்தி சப்பாத்தி

தேவை: * கோதுமை மாவு - 200 கிராம் * வெந்தயக்கீரை - 2 சிறிய கப் * உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும்) * எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெந்தயக்கீரையைச் சேர்த்து வதக்கி இறக்கவும். கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கு, உப்பு, கீரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:  மாவுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்தும் செய்யலாம்.

வெஜிடபிள் பனீர் கட்லெட்

தேவை: * ரஸ்க் துண்டுகள் – 10 (மிக்ஸியில் பொடிக்கவும்) * நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - தலா 100 கிராம் * இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன் * பனீர் துண்டுகள் – 10 * நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட்டுடன் பீன்ஸ், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லித்தழை, ரஸ்க் தூள், பனீர் துருவல் சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி கட்லெட் வடிவில் தட்டவும். நான்-ஸ்டிக் தவாவில் எண்ணெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கட்லெட்டுகளைப் பரவலாக வைத்து இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு தக்காளி சாஸ், புதினா சட்னி சிறந்த காம்பினேஷன்.

பனீர் மசாலா சாண்ட்விச்

தேவை: * பனீர் துண்டுகள் – 5 * கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை * வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் * பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் * பிரெட் ஸ்லைஸ்கள் - 10 (ஓரங்களை நீக்கவும்) * எண்ணெய் - ஒரு டீஸ்பூன் * உப்பு - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூளுடன் வெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட்டின் மீது மசாலா கலவையைத் தடவவும். அதன் மீது வெங்காயத்தைப் பரவலாகத் தூவவும். பிறகு அதன் மீது பனீரை உதிர்த்து, தூவி மற்றொரு பிரெட்டால் மூடவும். அதை டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும்.

குறிப்பு:  டோஸ்டர் இல்லையெனில் தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கலாம்.

ஸ்பிரவுட்ஸ் சுண்டல்

தேவை: * முளைகட்டிய பட்டாணி, முளைக்கட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைக்கட்டிய சோளம், முளைகட்டிய கொள்ளு - தலா 50 கிராம் * பொடியாக நறுக்கிய மாங்காய் - ஒரு சிறிய கப் * பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு * கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் * பெருங்காயத்தூள் - சிறிதளவு * காய்ந்த மிளகாய் - 2 * பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் * எண்ணெய் - சிறிதளவு * உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் முளைக்கட்டிய பயறு வகைகளுடன் உப்பு சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் தண்ணீரை வடிகட்டவும். காய்ந்த மிளகாயைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் மாங்காய், தேங்காய்த் துண்டுகள், பொடித்த மிளகாய் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வேகவைத்த சுண்டல் கலவை, கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

கோதுமை இனிப்புத் தோசை

தேவை: * கோதுமை ரவை, வெல்லத்தூள் - தலா 100 கிராம் * ஏலக்காய்த்தூள் - சிறிதளவு * நெய் - 100 மில்லி * பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன் * தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

செய்முறை: கோதுமை ரவையுடன் அரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் வெல்லத்தூள் சேர்க்கவும். தேங்காய்த் துருவலையும் மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு சைடிஷ் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

சோளம் வாழைப்பூ வடை

தேவை: * சோளம் - 100 கிராம் * வாழைப்பூ - 5 மடல் (ஆயவும்) * துவரம்பருப்பு - 100 கிராம் * கடலைப்பருப்பு - 50 கிராம் * காய்ந்த மிளகாய் - 4 * மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை * பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப் * எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளத்தை 5 மணி நேரம் ஊறவைக்கவும். துவரம்பருப்புடன் கடலைப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வாழைப்பூவை வதக்கவும். ஊறிய சோளத்துடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் வதக்கிய வாழைப்பூ, உப்பு, மஞ்சள்தூள், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

மாலை நேரம் மகிழ்ச்சி நேரமாகட்டும்!

``பிள்ளைகள் பள்ளி, கல்லூரி விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே `இன்னிக்கு என்ன டிபன்?’ என்று கேட்டுக் கொண்டே வருவார்கள். நம் பதிலைக் கேட்டு சில நேரம் அவர்கள் முகம் சுளிக்கும்போது நம் மனம் வருத்தப்படும். அதற்குக் காரணம் ஒரு சில டிபன்களே திரும்பத் திரும்பச் செய்யப்படுவதுதான். கொஞ்சம் யோசித்துச் சுவையான, வித்தியாசமான ஸ்நாக்ஸ் மற்றும் ஸ்வீட் வகைகளைச் செய்து பரிமாறினால், `வாவ்’ என்று வியந்து `சூப்பர்’ என்று கொண்டாடுவார்கள். இதற்குத் தேவை கொஞ்சம் அக்கறையும் நிறைய ஆர்வமும்தான்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் நங்கநல்லூர் பத்மா, இங்கே பலவிதமான ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் வகைகளைத் தயாரிக்கும் விதத்தை வழங்குகிறார்.

அவல் கேசரி, நட்ஸ் பக்கோடா, மசாலா பூரி, பலாப்பழ போளி, மல்டி ஸ்பிரவுட்ஸ் பீட்சா, வெஜிடபிள் இடியாப்பம், ஆலூ மேத்தி சப்பாத்தி, பனீர் மசாலா சாண்ட்விச், சோளம் வாழைப்பூ வடை என வரிசைகட்டி நிற்கும் உணவு வகைகளைச் செய்து பரிமாறினால் உங்கள் வீட்டின் மாலை நேரம் மகிழ்ச்சி நேரமாக மாறி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்!

படங்கள்: தே.அசோக்குமார்