Published:Updated:

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

Published:Updated:
கிச்சன் கைடு!
பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் கைடு!
கிச்சன் கைடு!

ருளைக்கிழங்கை மசித்துச் செய்யும் உணவுகளில் சிறிதளவு ஓமம் கலந்து செய்ய எளிதில் செரிமானமாவதுடன் நல்ல மணத்துடனும் இருக்கும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

கிச்சன் கைடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோள மாவில் பலகாரம் அல்லது சப்பாத்தி, பூரி செய்யும்போது சிறிதளவு ஓமம் சேர்க்க சுவையும் மணமும் மனதை அள்ளும்.

கிச்சன் கைடு!

முட்டை வறுவல் செய்யும்போது அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியைக் கசக்கி, கிளறும்போது சேர்த்தால் வாசம் நீங்கிவிடும்.

கிச்சன் கைடு!

புட்டு செய்யும்போது பச்சை வாசம் வராமல் இருக்க, புட்டுக்கு அரிசியை ஊறவைக்கும் முன்பு வாணலியில் லேசாக வறுத்து ஊறவைக்கவும். அல்லது புட்டுக்கு அரைத்த மாவை வாணலியில் வறுத்து வேகவைக்கவும்.

-  ஜெ.சந்திரா

கிச்சன் கைடு!

ண்டிகை நேரத்தில் இரண்டு நாள்கள் முன்பே மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி வந்துவிடுவோம். இவை மொத்தமாகப் பழுத்துவிடும். அதைப் போக்க தேவையான அளவு பழங்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதியுள்ளவற்றின் காம்புப் பகுதியை அலுமினிய ஃபாயில் கொண்டு சுற்றிவைக்கலாம். நமக்குத் தேவைப்படும்போது சுற்றிவைத்துள்ள அலுமினிய ஃபாயிலை நீக்கிவிட்டால் விரைவிலேயே பழுத்துவிடும்.

கிச்சன் கைடு!

வ்வொரு எலுமிச்சைப்பழத்தையும் தனித்தனியே டிஷ்யூ பேப்பரால் சுற்றி ஏர்டைட் பாக்ஸில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும் போது பேப்பரை எடுத்துவிட்டுச் சமையலுக்கு உபயோகிக்கலாம்.

கிச்சன் கைடு!

த்தரிக்கோல் மழுங்கிவிட்டதா? மாத்திரைகள் வைத்து வரும் அட்டையைக் கத்தரியுங்கள். கத்தரிக்கோல் கூராகிவிடும். அலுமினிய ஃபாயில் பேப்பரை சிறிய துண்டுகளாக வெட்டினாலும் முனை கூராகும்.

கிச்சன் கைடு!

ஜாம், ஊறுகாய், நெய் பாட்டிலின் மூடி டைட்டாக திறக்க முடியாதபடி இருந்தால், மூடியின் விளிம்பில் ஒரு ரப்பர் பாண்ட்டைப் போட்டுவிட்டு, பிறகு திறந்தால் சுலபமாக திறக்க வரும்.

கிச்சன் கைடு!

காய்கறி நறுக்கும் கத்தியின் முனை மழுங்கி இருந்தால் ஒரு பீங்கான் கப்பைக் கவிழ்த்துப்போட்டு அந்தப் பகுதியில் நன்றாகக் கத்தியைத் திருப்பித்திருப்பி தேய்த்தால், கத்தி பழையபடி கூராகிவிடும்.

- எஸ்.ராஜகுமாரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism