Published:Updated:

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளிக்கு என்ன பட்சணம்?
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளிக்கு என்ன பட்சணம்?

டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஓவியங்கள்: வேலு

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஓவியங்கள்: வேலு

Published:Updated:
தீபாவளிக்கு என்ன பட்சணம்?
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளிக்கு என்ன பட்சணம்?
தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகளோடு நினைவுக்கு வருவது பட்சணங்கள்தானே!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

“என்ன பெரிய பட்சணம்? ஒரே மாவை (அது கடலை மாவா, பயத்தம் மாவா என்று கூடத் தெரியாது!) வேற வேற அச்சில் போட்டுப் பிழிந்தால் ஆச்சு, ஓமப்பொடியும், நாடாத் தேன்குழலும்” என்று மறு பாதியிடம் நான் உளற…

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

நரகாசுரன் என்ன வரம் கேட்டானோ தெரியாது. ஆனால், நம்ம ‘நாக்கா’சுரனுக்கு விருந்தாகப் பட்சணங்கள் கிடைக்கும் திருநாளே ‘தீபாவளி’!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

கொதிக்கிற எண்ணெய் கையில் சுட்டாற்போல சுரீரெனத் திரும்பி, ``கடலை மாவு, அரிசி மாவு, பயத்தம் மாவு, உளுந்தம் மாவு, பொட்டுக்கடலை, உப்புத் தண்ணீர், சர்க்கரைப் பாகு, வெல்லப் பாகு, ஏலக்காய், முந்திரி, பெருஞ்சீரகம், பெருங்காயம், அரிசி மிட்டாய், குட்டி பிஸ்கட்...” என எஸ்.பி.பி ஸ்டைலில் மூச்சுவிட்டாள் – ஒவ்வொன்றுக்கும் கையிலிருந்த சட்டுவமோ, ஜார்ணியோ (பழைய பெயர் நினைவிலில்லை!) என் முகத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் வந்து, திரும்பிப் போயிற்று!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

“இத்தனையையும் சரியான விகிதத்தில் (பள்ளிக்கூட டர்பன் கணக்கு வாத்தியார் `விகிதத்தில்’ நான் ‘வீக்’ என்பார்) பிசைந்து, மூச்சுப்பிடிக்கப் பிழிந்து, எண்ணெய்ச் சூட்டில் வெந்து பார்த்தால்தான் தெரியும்... மூக்கைப் பிடிக்கத் தின்னா மட்டும் தெரியாது” – எண்ணெயிலிட்ட அப்பளமாகக் குதித்தாள்.

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

“சிரமம்தான்” – ஒப்புக்கொண்டேன்!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னமே அம்மா ஆரம்பித்து விடுவாள்... அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை எல்லாம் தனித்தனியே அரைத்து வரச் சொல்லுவாள். பாண்டி பஜாரில் பக்கத்துக் கடை காபிப்பொடி வாசனையுடன், மாவு மெஷின் சத்தம் – சின்ன கை சக்கரத்தை இரண்டு முறை திருகி, `கர்ர்ர்’ரென சத்தமிட்டு, மூக்கிலிருந்து தொங்கும் தகரக் குழாயை ஸ்கேலால் இரண்டு தட்டு தட்டி, மாவு அரைத்துவந்த கதையெல்லாம் இப்போது நம்புவதற்கு ஆளில்லை!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

பாட்டி வீட்டில், அரிசியைக் களைந்து வைத்து, சில பருப்புகளை வறுத்து வைத்து, இயந்திரத்தில் அரைத்தும் பார்த்திருக்கிறேன்.

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

பாதாம், முந்திரி எல்லாம் ஊறவைத்து, அம்மிக்கல் உரலில் அரைத்தும், பலவித அளவுகளில் வாணலி, குட்டையும் நெட்டையுமாகச் செட்டு சல்லடைக் கரண்டிகள் மற்றும் எண்ணெய், நெய், வெண்ணெய் எனத் தீபாவளிக்கு முன் வீடு ஒரு மினி பலகாரக் கடை ஆகிவிடும்.

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளி ஸ்வீட் ரேஸில் முதலில் வருவது மைசூர்பாக்தான் (மைசூரின் பெயர் இதனுடன் ஏன் ஒட்டிக்கொண்டது என்று யாராவது சொல்லலாம்). சூடாகக் `கம்பி’ப் பதத்தில் சர்க்கரைப்பாகுடன், கடலை மாவு, உருக்கிய நெய் இவற்றைக் கலந்தவாறே கிளறுவதற்கு, நான்கு கைகளும் தனித்திறமையும் வேண்டும். வாசனையுடன் நுரைத்துவந்த பாகை, முன்னமே நெய் தடவப்பட்ட தாம்பாளத்தில் கொட்டி, இரண்டு தட்டுத்தட்ட – சமமாகப் பரவி ஆவி பறக்க மைசூர்பாக் ரெடி – கத்தியாலோ, தோசைத்திருப்பியாலோ டைமண்ட் ஷேப்பில் அடிவரை வெட்டிக் காத்திருக்கவும் (சாப்பிடத்தான்!).

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

மஞ்சள் நிறத்திலிருந்து செங்கல் நிறம் வரை, வாயில் கரையும் மைசூர்பாவுக்கும், உடைக்க சுத்தியல் தேடும் `மைசூர்பாக்’குக்கும் (அந்தக்கால தீபாவளி மலர்களில் மைசூர்பாக் மேல் ரோடு எஞ்சினை ஏற்றி உடைப்பதாகக் கார்ட்டூன் பார்த்திருக்கிறேன்!) கரகர என இருக்கும் மைசூர்பாகும் கைப்பக்குவம் பொறுத்தது – வாய்ப்பக்குவத்துக்கும் எப்போதாவது கிடைக்கும்!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

`ரெடிமிக்ஸ்’ கிடைப்பதால், செய்வது சுலபம் என்ற வகையில் இரண்டாம் இடம் குலாப் ஜாமூனுக்கே! மெரூன் கலரின் சர்க்கரைச் சிரப்பில் ஊறிக்கொண்டிருப்பது சிறப்பு. சிரப்பில்லாத உலர் ஜாமூன்களுக்கு வரவேற்பு கம்மி!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

குலாப்ஜாமூன், பாதுஷா, ஜாங்கிரி போன்ற இனிப்புகள் முகலாயர் காலத்தில் நம் ஊருக்குள் வந்திருக்கலாம் என்று என் சின்ன மூளையின் ஆராய்ச்சி சொல்கிறது – பெயர்களின் சாயலும், பாதுஷாவின் தலையில் உறைந்த சர்க்கரையின் தலைப்பாகையும் `காவியமா, நெஞ்சின் ஓவியமா?’ என்று சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாடல் கேட்க வைக்கின்றன.

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

எப்போதும் என் மூளையைப் பிழியும் சந்தேகம் - வடநாட்டு ஜிலேபியும், நம்ம ஊர் ஜாங்கிரியும் ஒன்றுதானா? இல்லை என்கிறது வாய், கிட்டத்தட்ட ஆமாம் என்கிறது கண்! (பெயர்களை மாற்றி அழைக்கும் நம்ம ஊர்ப் பெரிசுகளால் வந்த குழப்பம் இது!)

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

பாட்டி ஒருமுறை ‘உக்காரை’ செய்தாள் – ‘யாரை?’ என்று கேட்காதீர்கள் – ப.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு, சர்க்கரை (வெல்லத்திலும் உட்கார…. ச்சீ ‘உக்காரை’ உண்டு), முந்திரி எல்லாம் கலந்து செய்யப்படும் ஒரு தேவலோக வஸ்து – பொன்னிறத்தில் தேங்காய்த் துருவலுடன் முந்திரி முழிக்க நிச்சயமாக நம்மை உட்கார வைத்துவிடும்.

‘உக்காரை’ ஒரு ஸ்பெஷல் ஸ்வீட்டுதான்!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

அந்த வருடம் தீபாவளிக்குத் திருச்சியிலிருந்து புதியதாக ஒரு ஸ்வீட் வரப்போவதாக ஏக எதிர்பார்ப்பு...  மாலை கடைசி வகுப்பு சரித்திரப் பாடத்தில் அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்று அசுவாரஸ்யமாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வந்தேன்.  திருச்சியிலிருந்து வந்த ஸ்வீட் ‘அசோகா’ என்றாள் மாமி. ஓரடி உயர் சம்புடத்தில் எட்டிப் பார்த்தேன்... சக்கரமோ, ஸ்தூபிகளோ இல்லை. குளம் போல நெய்யில், கேசரி வண்ணத்தில், சொஜ்ஜிக்கும் பாதாம் அல்வாவுக்கும் இடைப்பட்ட பதத்தில் `அசோகா’ என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. வாயில் போட்ட மாத்திரத்தில் கரைந்து, நாக்கில் வழுக்கிச் சென்றது. அசோகச் சரித்திரத்திலேயே ஒரு சுவாரஸ்யம் வந்து விட்டது!

(சமீபத்தில் ஓர் ஹோட்டலில் ‘அசோகா’ கேட்டு வாங்கினேன். ஸ்பூனை வளைக்கும் பலத்துடன், கொஞ்சம் குங்குமக் கலரில் வாழை இலையில் வைத்துக் கொடுத்தார்கள். நல்ல அசோகா சரித்திரத்தோடு போய்விட்டார் என நினைத்தேன்!).

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

லட்டு, மாலாடு (அப்படியே வாயில் போட்டுக்கொண்டு, ‘புஸ்’, ’புஸ்’ என்று வெளியே மாவு ஸ்ப்ரே அடிக்காமல் தின்பது ஒரு தனி கலைதான்!) வழக்கமான ஸ்வீட்டுகள் – எப்போதும் மவுசுடன் ஒரு ரவுண்டு வருபவை.

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

கார வகைகளில், காராசேவு, காராபூந்தி, ஓமப்பொடி, முள்ளு முறுக்கு (மகிழம்பூ தேன்குழல்), நாடா எனப் பல இருந்தாலும், `மிக்ஸரு’க்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சிறிய தேங்காய்த் துண்டுகள், காய்ந்த திராட்சை, உடைத்த முந்திரி, வீட்டில் செய்த குட்டி டைமண்ட் பிஸ்கட், அரிசி மிட்டாய் (பல வண்ணங்களில் உள்ள இத்துனூண்டு அரிசி மிட்டாயில், ஒரே ஒரு சீரகம் எப்படி வைக்கிறார்கள்?), பொரித்த கறிவேப்பிலை, கார மிளகாய் எல்லாம் கலந்து செய்யப்படும் ‘மிக்ஸர்’ தீபாவளி பட்சண கிரிக்கெட்டில் ‘சிக்ஸர்’தான்! (ஒரு பிரபல ஸ்வீட் கடையில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன் – என் கழுத்து நீண்டு, மூக்கு வெளுத்து, வாலை உசுப்பி, தலையை ஆட்டி நானே ‘புர்ர்ரெ’னக் கனைப்பதைப் போல இருந்தது – ஏதோ கொள்ளு போட்ட மிக்ஸராம்!).

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை (முறத்தில் போட்டு, கைகளால் தேய்த்து, வாயால் ஊதி வேர்க்கடலைத் தோலைப் பிரிப்பதே அழகு!) அவசரத்துக்குச் செய்யப்படும் ஸ்வீட் வகைகள்!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளி பட்சண வியாசம், தீபாவளி மருந்து இல்லாமல் அஜீரண ஆயாசமாக ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது. மயிலாப்பூர், மேற்கு மாம்பலம் நாட்டு மருந்து கடைகளில் சில புராதனப் பெயர்களுடன் கிடைக்கும் மருந்து சாமான்களை (கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, சுக்கு, மிளகு, ஓமம் கிராம்பு, ஏலம், வெல்லம், தேன், நெய் – இன்னும் தெரியாத பெயர்களுடன் சில) வாங்கி, வறுத்து, பொடித்து, நெய்யில் கிளறி பச்சை கலந்த கறுப்புநிற லேகியமே தீபாவளி மருந்து... பட்சணங்கள் தின்ற வயிற்றுக்கு மருந்து! காலையில் வெறும் வயிற்றில் தின்பது நல்லது என்பாள் அம்மா. அதன் தேவை தீபாவளியன்று மாலைதான் தெரியும்! (தீபாவளிக்கும் பிரசவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இதே மருந்தைத்தான் சமீபத்தில் குழந்தை பெற்ற அம்மாவுக்கும் கொடுப்பாள் பாட்டி!).

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

தீபாவளியன்று கொஞ்சம் கொரிப்பதோடு சரி... வருவோர் போவோர்க்கு எல்லாம் கொடுத்தே பட்சணங்கள் தீர்ந்துவிடும்! அன்று அவ்வளவாக ரசிக்காத பட்சணங்கள் ஒரு வாரம் சென்று ஒரு மாலையில் வாய்  கேட்கும்போது, காலி சம்புடங்கள், சில கடைசி துகள்களை மட்டும் காட்டி நம்மை வெறுப்பேற்றும்! அடுத்த தீபாவளிக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!

தீபாவளிக்கு என்ன பட்சணம்?

இப்போதெல்லாம் ரெடிமேட் பட்சணங்கள் (தீபாவளி மருந்தும்தான்!) கிலோ கணக்கில் அழகிய அட்டைப் பெட்டிகளில், பிளாஸ்டிக் கவர்களில் (புடவை மாதிரி பார்டருடன் மைசூர் சில்க் போல தோன்றும் மைசூர்பா கண்ணைப் பறிக்கும்!) கிடைக்கின்றன. ஆனாலும், அன்று வீட்டில் செய்த பட்சணங்களின் சுவையும், அவை தயாரிப்பதில் இருந்த `த்ரில்’லும் (தில்லும்!) இப்போது மிஸ்ஸிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism