சாக்லேட் சாப்பிட காரணங்கள் வேண்டுமா, என்ன? கால நேரம் பார்க்க வேண்டுமா, என்ன? காதலுக்கும் சாக்லேட் சாப்பிடுவதற்கும் கடிகார நேரம் கிடையாதே!

ஆம்... எந்த நேரத்திலும் எதற்குப் பிறகும் சாப்பிடக்கூடிய ஓர் அமிர்தமாகவே சாக்லேட் படைக்கப் பட்டுள்ளது. முதன்முதலாக சாக்லேட்டை உருவாக்கியவர் நிச்சயம் காதல்வயப்பட்டவராகவே இருந்திருக்கக்கூடும். சாக்லேட்டை சாக்லேட்டாகவேதான் சாப்பிட வேண்டுமா, என்ன? இல்லவே இல்லை! சாக்லேட்டே மெத்துமெத்தென கேக் அவதாரமும் எடுக்கும். ஜிலுஜிலு ஜில்லென ஐஸ்க்ரீமாகவும் மனதைக் குளிர்விக்கும். இதோ... மெனுராணி செல்லம் வழங்கும் சாக்லேட் ஸ்பெஷல் ரெசிப்பிகள் இரண்டுமே இந்த வாலண்டைன் தினத்தை மேலும் இனிப்பாக்கும்.

லவ் சாக்லேட்!

சாக்லேட் ஜெனாய்ஸ் ஸ்பாஞ்ச் கேக்

கேக் செய்ய தேவையானவை:
* முட்டை - 4
* உப்பில்லாத வெண்ணெய் - 75 கிராம்
* மைதா மாவு - 75 கிராம்
* சாக்லேட் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
* பொடித்த பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
* கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
அல்லது 3 டீஸ்பூன் (விருப்பப்படி)
* பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
* பால் - முக்கால் கப்

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து சலிக்கவும். இத்துடன் பொடித்த பாதாமைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுள் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். பத்திரமாக முட்டையை நுரைக்க அடிக்கவும். அத்துடன் எசென்ஸ் சேர்க்கவும். பிறகு, கீழே இறக்கி சலித்துவைத்த மைதா கலவையைச் சேர்க்கவும்.

இத்துடன் உருக்கிய வெண்ணெய், சூடான பால் சேர்த்து நன்கு கிளறவும். பேக்கிங் டிரேவில் வெண்ணெய் தடவி, மைதா தூவி கிளறிய கலவையை ஊற்றவும். 180 டிகிரி உஷ்ணத்தில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்த கேக்கை, ஸ்லைஸ் செய்து ரெடியாக வைக்கவும்.

காபி ஜினோஸ் கேக் செய்ய தேவையானவை:
* முட்டை - 4
* உப்பு சேர்க்காத வெண்ணெய்,
மைதா - தலா 75 கிராம்
* பொடித்த பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
* காபி டிக்காஷன் - அரை கப்
* பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சாக்லேட் கேக் செய்யும் முறைதான் காபி கேக் செய்யும் முறையும். கோக்கோவுக்குப் பதிலாக, காபி டிக்காஷன் சேர்த்துக் கலந்து தயாரிக்கவும்.

இந்த காபி கேக் 180 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்துவைக்கவும். பின் இரண்டு வட்டங்களாக ஸ்லைஸ் செய்யவும்.

சாண்ட்விச் செய்ய தேவையானவை:
* ஃப்ரெஷ் க்ரீம் - கால் கிலோ
* சாக்லேட் எசென்ஸ், கோகோ பவுடர் - சிறிது
* காபி டிக்காஷன், காபி எசென்ஸ் - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து நுரைக்க அடிக்கவும். இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். ஒரு பகுதியில் சாக்லேட் எசென்ஸ், கோகோ பவுடர் கலவையைச் சேர்க்கவும். மற்றொன்றில் காபி டிக்காஷன். காபி எசென்ஸ் கலவையைச் சேர்க்கவும். ஒரு ஸ்லைஸ் கேக் எடுத்து அதன்மீது சாக்லேட் கலவையை பரத்தவும். அடுத்து ஒரு ஸ்லைஸ் கேக் வைத்து அதன்மீது காபி டிக்காஷன் கலவையைப் பரத்தவும். இறுதியாக பட்டர்ஸ்காட்ச் கொண்டு அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு மணி நேரம் செட் செய்து பரிமாறவும்.

* அவிக்கப்பட்ட ஒரு முட்டை ஏறத்தாழ 84 கலோரி ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள புரதத்தின் அளவு 8.3 கிராம். கொழுப்பு 5.7 கிராம்.

சாக்லேட் கப் வித் சாக்லேட் சண்டே ஐஸ்க்ரீம்

சாக்லேட் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையானவை:
* பால் பவுடர் - ஒரு கப்
* சர்க்கரை - ஒரு கப்
* தண்ணீர் - 2 கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
* ஜி.எம்.எஸ் பவுடர் (GMS Powder) -
அரை டீஸ்பூன்
* ஸ்டெபிலைசர் பவுடர்
(stabilizer powder) - ஒரு டீஸ்பூன்
* சர்க்கரை கோகோ பவுடர் - 4 டீஸ்பூன்
* சாக்லேட் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
* பால் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஜி.எம்.எஸ், ஸ்டெபிலைசர் பவுடர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். ஜி.எம்.எஸ் பவுடரை சிறிதளவு பாலுடனும் ஸ்டெபிலைசரைச் சிறிதளவு சர்க்கரையுடனும் தனித்தனி கிண்ணங்களில் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இனி, இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்துச் சிறிது பால் விட்டு பேஸ்ட் பதத்துக்குக் கலந்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் பவுடர், தண்ணீர், சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம், சாக்லேட் எசென்ஸ் முதலியவற்றை சேர்த்துக் நன்கு கலக்கவும். கோகோ பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட் பதத்துக்குக் கரைக்கவும். இத்துடன் ஏற்கெனவே கரைத்து வைத்த ஜி.எம்.எஸ் மற்றும் ஸ்டெபிலைசர் கலவையைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிறகு, இந்தப் பாத்திரத்தை மூடிப் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும். அடிக்கடி எடுத்து நன்கு கலக்கிவிட்டு, பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்து எடுத்தால் சாக்லேட் ஐஸ்க்ரீம் ரெடி.

வெனிலா ஐஸ்க்ரீமையும் மேலே சொல்லியிருக்கும் முறையில் செய்யவும். ஆனால், கோகோ சேர்க்காமல் தயார் செய்து வைக்கவும்.

சாக்லேட் ட்ரஃபிள் செய்ய தேவையானவை:
* டார்க் பார் சாக்லேட் - 100 கிராம்
* ஃப்ரெஷ் க்ரீம் - 2 கப்

செய்முறை:

ஃப்ரெஷ் க்ரீமை ஒரு கனமான பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு கீழே இறக்கி, அத்துடன் உடைத்த டார்க் பார் சாக்லேட்டுகளை போட்டு, பீட்டரால் நன்கு அடித்தால் சாக்லேட் ட்ரஃபிள் ரெடி.

சாக்லேட் கப் செய்ய தேவையானவை:
* சாக்லேட் பார் - ஒன்று
* சாக்லேட் சாஸ் - சிறிது
* வறுத்த முந்திரி - சிறிது

செய்முறை:

சாக்லேட் பாரை உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாதியளவு தண்ணீரை நிரப்பவும். தண்ணீர் சூடானதும் சாக்லேட் நிரப்பிய பாத்திரத்தை தண்ணீர் மேல் வைத்து ஒரு கரண்டியால் சாக்லேட்டை கிளறவும். சூட்டில் சாக்லேட் நன்கு இளகி வரும். ஒரு பேப்பர் கப்பில் உருக்கிய சாக்லேட் கலவையை ஊற்றி நன்கு செட் ஆக விடவும். பிறகு பேப்பர் கப்பைப் பிரித்து எடுத்தால் சாக்லேட் கப் ரெடி.

பரிமாறும் முறை:

ரெடியான சாக்லேட் கப்பில் நாம் தயாரித்த வெனிலா மற்றும் சாக்லேட் ஐஸ்க்ரீமை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து சிறிது சாக்லேட் சாஸ், வறுத்த முந்திரியைத் தூவி பரிமாறினால் அட்டகாசமான சாக்லேட் கப் வித் சாக்லேட் சண்டே ஐஸ்க்ரீம் ரெடி.

* உணவுப் பொருளாக மட்டுமல்ல... பயோடெக்னாலஜி துறையின் ஆய்வுகளிலும் பால் பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்