ரெசிப்பிஸ்
Published:Updated:

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியிலுள்ள சேஃப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இப்படி செய்துவைத்தால், காலை அவசரத்தில் பிரச்னைகள் வராமல் சமைக்கலாம்.

கிச்சன் கைடு!

கேஸ் அடுப்பு ஒருபக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஸ்டவ் எரியாமல் இருக்கும்போது, கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.

மையலறையில் இரண்டு கிடுக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். அடுப்பிலிருந்து பாத்திரம் இறக்க இவை பயன்படும். இதற்குப் பதில் புடவைத் தலைப்பு, துண்டு, காகிதம் போன்றவற்றை சூடான பாத்திரங்களை இறக்க பயன்படுத்தாதீர்கள்.

டுப்பின் ஒரு பர்னரில் சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் இருந்தால், பக்கத்தில் உள்ள பாத்திரத்திலிருந்து நீர்த் திவலைகள் அதில் சொட்டிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் சடசடவென எண்ணெய் வெடித்து உங்கள் மீது தெறிக்கும்.

கேஸ் ஸ்டவ்வை ‘சிம்’மில் வைத்தே முதலில் பற்றவைத்து, பாத்திரத்தை அதன் மீது வையுங்கள். பிறகு, தீயை அதிகப்படுத்தி எண்ணெய் ஊற்றுவது போன்ற அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம்.