Published:Updated:

இனி ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லை... ஏன் தெரியுமா?

இனி ஆம்லேட், ஆஃப் பாயிலில்  உப்பு போட தேவையில்லை... ஏன் தெரியுமா?
இனி ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லை... ஏன் தெரியுமா?

ன்னது... ஆம்லேட், ஆஃப் பாயிலில் உப்பு போட தேவையில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறதா, உண்மைதான்.

உத்தரப்பிரதேச மாநிலம், பைரேலி இஷாத் நகரில் அமைந்திருக்கிறது, மத்திய பறவையின ஆராய்ச்சி நிலையம். இந்த ஆராய்ச்சி மையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்மூலம் உப்புத் தன்மையோடு கூடிய முட்டையை உற்பத்திசெய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம், முட்டையின் உள்பகுதி முழுவதும் உப்பாகிவிடும். அதை வேகவைத்தோ, ஆம்லேட், ஆஃப் பாயில் போட்டோ சாப்பிடலாம். உப்பு போட தேவையில்லை. கோழிமுட்டையை ஒரு சின்ன தொழில்நுட்பத்தின்மூலம் உப்பாக மாற்றப்படுகிறது. இதற்கான உரிமத்தை விவசாயிகள், படித்த இளைஞர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கிறது இந்த ஆராய்ச்சி மையம். 

இதுகுறித்து பறவையின ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பேசும்போது, “உப்பு ஏற்றப்பட்ட முட்டை தொழில்நுட்பம், முற்றிலும் புதுமையானது. வேகவைக்கப்பட்ட முட்டையில் 24 மணிநேரம்தான் உப்புத் தன்மை இருக்கும். எங்கள் தொழில்நுட்பத்தின்மூலம் உப்பு ஏற்றப்பட்ட முட்டையில், 48 மணிநேரம் உப்புத் தன்மை நீடித்திருக்கும். முட்டையை புட் கிரேடு என்ற கரைசலில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு,42 மணிநேரம் மற்றொரு கரைசலில் போட்டு வைத்திருக்க வேண்டும். முதல் கரைசலில் முட்டை அமிழ்ந்திருக்க வேண்டும். இரண்டாவது கரைசலில் மிதக்க வேண்டும். இப்படியிருந்தால், அந்த முட்டையில் உப்பு ஏற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். மின்சாரம், பெரிய உபகரணங்கள் எதுவும் தேவைப்படாத எளிதான தொழில்நுட்பம் இது. வீட்டிலேயே இதற்கான வசதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

இதற்கு, பெரிய படிப்பறிவோ திறமையோ தேவையில்லை. இதற்கான கரைசலை எப்படித் தயாரிக்க வேண்டுமென்பதை நாங்கள் சொல்லிக்கொடுப்போம். இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் கிராமப் புற மக்களுக்கு பெருவாரியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான பயிற்சி, விற்பனை உள்ளிட்ட விஷயங்களை எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வழங்கிவருகிறோம். இதையொரு தொழிலாக நடத்த உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்துக்கான கட்டணம் 5,500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டையை உப்பேற்றப்பட்டதாக மாற்ற, ஆய்வக அளவில் ஒரு முட்டைக்கு 50 பைசா ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால், உப்பேற்றப்படும் முட்டையின் விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்றாற்போல நிர்ணயித்துக்கொள்ளலாம். அடுத்து, மிளகு வாசனையோடுகூடிய முட்டைக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருக்கிறோம்” என்றார். 

தொடர்புக்கு, மத்திய பறவையின ஆராய்ச்சி நிலையம், இஷாத் நகர், பைரேலி, உத்தரப்பிரதேசம்.

0581-2303223, 2300204,