Published:Updated:

நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!

Sponsored content
நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!
நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!

இளஞ்சூடான வானிலை, காற்றில் மிதந்து வரும் சமையல் மணம்... இதைவிட ஒரு சிறப்பான விஷயம் இருந்துவிட முடியுமா? காய்கறியோ அல்லது இறைச்சியோ, க்ரில் (Grill) செய்தால் அதன் சுவையே தனி. அப்படி க்ரில்லில் மிகவும் பிரபலமான டிஷ் என்றால் அதுதான் 'கெபாப்' (Kebab). கம்பியில் மசாலாக்கள் சேர்த்த இறைச்சியைச் சொருகி நெருப்பின் தணலில் வாட்டி பரிமாறப்படுவதே கெபாபின் ஸ்பெஷலிட்டியாகும்.

நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!

கெபாபின் முதல் வகை பிசி 17ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அங்கு கெபாபை 'ஃபையர்டாக்ஸ்' என்று அழைப்பார்களாம். நாய்களின் உருவத்தைப் போன்று செதுக்கப்பட்டிருக்கும் கற்களின் நடுவில் கம்பிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கம்பிகளில் இறைச்சிகளைச் சொருகி நெருப்பில் சமைப்பதை ஃபையர்டாக்ஸ் என்கிறார்கள். கிரீஸ் நாட்டில் இப்போதும் பிரபலமான டிஷ்ஷாக இருக்கும் கெபாபை அங்கு 'Souvlakis' என்று கேட்டால் மட்டுமே தெரியும். அந்தக்காலத்தில் மத்திய பெர்சிய (ஈரான்) சிப்பாய்கள் தங்களது வாள்களை கம்பிகளாக உபயோகித்து இறைச்சிகளை நெருப்பில் சுட்டு உண்பார்களாம். கெபாப் என்ற வார்த்தை பெர்சிய மொழியில் இருந்து தோன்றியது, இதற்கு பொருள் எரித்தல் அல்லது வறுத்தல் ஆகும். 

கெபாபின் வேர்கள் மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உலகெங்கும் பரவியுள்ளது. தற்போது உலக மக்கள் அனைவராலும் இதை மகிழ்ச்சியோடு சுவைக்க முடிகிறது. ஆப்கான் மக்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட இவை முகலாயர்களால் பிரபலமடைந்தன. கெபாப்களில் வெரைட்டியான டிஷ்கள் அசைவத்தில் மட்டுமின்றி சைவத்திலும் இருக்கின்றன. 

பன்னீர் டிக்கா (Paneer Tikka): மசாலாக்கள் (சாட் மசாலா, கொத்தமல்லித் தூள், மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, புதினா, கடுகு எண்ணெய்)  மற்றும் தயிருடன் 3-4 மணிநேரம் ஊறவைத்த பன்னீர் துண்டுகளைக் க்ரில் கம்பியில் சுட்டு எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா ரெடி!

நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!

க்ரில்டு மஷ்ரூம் (Grilled Mushroom Skewers): காளான்கள் (மஷ்ரூம்), பச்சை & மஞ்சள் கேப்ஸிகம், வெங்காயத்துடன் ஊறவைத்த மசாலாவைச் சேர்த்தால் க்ரில்டு மஷ்ரூமை சுவைக்கலாம். 

ஹரியாலி சிக்கன் கெபாப் (Hariyali Chicken Kebab): பெரும்பாலும் அனைத்து கெபாப் உணவகங்களிலும் பரிமாறப்படும் டிஷ் இந்த ஹரியாலி சிக்கன் கெபாப். எலும்புகள் அகற்றிய சிக்கன் பீஸ்களை தயிரில் ஊறவைத்து, ஸ்பினாச் மற்றும் புதினா இலைகளுடன் க்ரில் கம்பியில் வாட்டி எடுத்தால் போதும், ஹரியாலியைச் சுவைக்கத்தயாராகலாம்.

முர்க் மலாய் கெபாப் (Murg Malai Kebab/Reshmi Kebab): முர்க் மலாய் கெபாப் அல்லது ரேஷ்மி கெபாப், பெரும்பாலான அசைவ உணவகங்கல் ஸ்டார்ட்டர்களாக பரிமாறப்படகூடிய ஒரு டிஷ். சீஸ், கிரீம், தயிர் மற்றும் மசாலாக்களால் எச்சில் ஊறும் சுவையை தரக்கூடிய டிஷ்ஷாக இவ்வகை கெபாப்கள் சமைக்கப்படுகின்றன. க்ரில் கம்பியில் 20 நிமிடம் வாட்டியபிறகு சிக்கன் பிரியாணியுடன் சேர்த்து உண்டால்... அடடா என்ன ஒரு சுவை!

கெபாபிஸ்தான் (Kebabistaan)

நூற்றாண்டுகள் கடந்த சுவையான 'கெபாப்'கள்!

1997ம் ஆண்டு கோழிப் பண்ணை, கால்நடை இனப்பெருக்கப் பண்ணை, குஞ்சுபொரிப்பகங்கள், தீவன ஆலைகள் மற்றும் நவீன கோழி செயலாக்க மையமாக உருவாக்கப்பட்ட நிறுவனம் 'Kavi Protein and Feed PVT LTD'. தென்னிந்தியாவில் உணவுப் பொருள் வணிகத்தில் இருபது ஆண்டுகள் அனுபவத்துடன் செயல்பாட்டுக் கொண்டிருக்கும் Kavi Group 'Meat and Eat' போன்ற பிரபலமான பிராண்ட்களை உருவாக்கியது. இவர்களின் மற்றுமொரு பிராண்டாக செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் 'கெபாபிஸ்தான்' (Kebabistaan). வாடிக்கையாளர்களுக்கு உயர்தரத்தில் சுவையான உணவுகளை வழங்கும் அக்கறைகொண்டு செயலாற்றி வருகிறது கவி குரூப்பின் கெபாபிஸ்தான். 

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுவைக்க சைவம், சிக்கன், மட்டன் & ஃபிஷ் கெபாப், சாலட், மீல்ஸ், ரோல்ஸ், டெசர்ட்ஸ் & குளிர்பானங்கள் போன்ற உணவுப் பொருட்களை  கெபாபிஸ்தான் விற்பனை செய்கிறது.  கெபாபிஸ்தான் உணவகம் சென்னையின் அண்ணா சாலை, நந்தனம் பகுதியில் தற்போது செயல்பட்டுவருகிறது. ஹோம் டெலிவரிக்கு கால் செயுங்கள் (+91) 78689 78689.