Published:Updated:

30 வகை கோஃப்தா கிரேவி

கோஃப்தா கிரேவி
பிரீமியம் ஸ்டோரி
கோஃப்தா கிரேவி

ரெசிப்பிஸ்: லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்

30 வகை கோஃப்தா கிரேவி

ரெசிப்பிஸ்: லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்

Published:Updated:
கோஃப்தா கிரேவி
பிரீமியம் ஸ்டோரி
கோஃப்தா கிரேவி
30 வகை கோஃப்தா கிரேவி

பச்சைப்பயறு கோஃப்தா கிரேவி

தேவை: பச்சைப்பயற்றை ஊறவிட்டு அரைத்த விழுது – ஒரு கப், துருவிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 2 (நறுக்கவும்), உப்பு – அரை டீஸ்பூன். கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன். தாளிக்க: நெய் / வனஸ்பதி / வெண்ணெய் (விருப்பம் போல்) – 3 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, பட்டை – சிறிய துண்டு, பொடித்த மிளகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன். பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

பச்சைப்பயறு கோஃப்தா கிரேவி
பச்சைப்பயறு கோஃப்தா கிரேவி

செய்முறை: பச்சைப்பயறு விழுது மற்றும் கொடுக்கப்பட்ட மற்ற பொருள்களைக் கலந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் சிவக்க பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். சூடான வாணலியில் நெய் / வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளிக்கவும். இதனுடன், தக்காளி கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து, 2-3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுரைக்காய் கோஃப்தா கிரேவி

தேவை: தோல், கொட்டை நீக்கி துருவிய சுரைக்காய் – ஒரு கப், கடலை மாவு – அரை கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), தோல் சீவி, நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்), உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் / நெய் / எண்ணெய் (விருப்பம்போல்) – 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பட்டை – சிறிய துண்டு, சீரகம் – கால் டீஸ்பூன், பிரியாணி இலை – ஒன்று, சின்ன வெங்காயம் – 2 (நறுக்கவும்). பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன்.

சுரைக்காய் கோஃப்தா கிரேவி
சுரைக்காய் கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய சுரைக்காய், கடலை மாவு மற்றும் இதர பொருள்களைச் சேர்த்து நன்கு பிசையவும். நீர் சேர்க்க வேண்டாம். சுரைக்காயின் நீரே போதுமானது. கலவையைச் சிறிய எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். சூடான வாணலியில் தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பொரித்த கோஃப்தாக்களை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

கொள்ளு கோஃப்தா கிரேவி

தேவை: கொள்ளு – 100 கிராம் (12 மணி நேரம் ஊறவைக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2. பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே தூவ: கஸூரி மேத்தி, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

கொள்ளு கோஃப்தா கிரேவி
கொள்ளு கோஃப்தா கிரேவி

செய்முறை: ஊறிய கொள்ளுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சமையல் சோடா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, தக்காளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பொரித்த கோஃப்தாக்களை போட்டு 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கஸூரி மேத்தி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ரெடிமிக்ஸ் கோஃப்தா கிரேவி

ரெடிமிக்ஸ் கோஃப்தா கிரேவிரெடிமிக்ஸ் கோஃப்தா கிரேவிதேவை: ரெடிமேட் குலாப் ஜாமூன் பவுடர் – 100 கிராம், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தலா கால் டீஸ்பூன், நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – சிறிதளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க எண்ணெய் – 200 கிராம். மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: குலாப் ஜாமூன் பவுடருடன் மற்ற பொருள்களைக் கலந்து சிறிது நீர் தெளித்து சிறிய எலுமிச்சைப்பழ அளவு உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போக கொதித்த பின் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து, 2-3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கேரட் பொட்டுக்கடலை கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய கேரட் – அரை கப், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – அரை கப், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு பல் – 2 (பொடியாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் – 2 (நறுக்கவும்). பொரிக்க: எண்ணெய் 200 மில்லி. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய கேரட் மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து ஒரு டீஸ்பூன் நெய் கலந்து பிசையவும். இதைச் சிறிய எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தபின் பொரித்த கோஃப்தாக்களைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ஸ்டீம்டு கோஃப்தா கிரேவி

தேவை: கடலை மாவு, அரிசி மாவு – தலா கால் கப், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, ரவை – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), உப்பு – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன். தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 2, சோம்பு, சீரகம் – தலா ஒரு சிட்டிகை. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: கடலை மாவுடன் பிற பொருள்களைச் சேர்த்துப் பிசைந்து சிறியதாக உருட்டி ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஸ்டீம்டு கோஃப்தாக்களைச் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு கோஃப்தா கிரேவி

தேவை: உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ்) – 2 (வேகவைக்கவும்), கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், ஓமம் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – அரை கட்டு (நறுக்கவும்), துருவிய இஞ்சி – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சிறிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்). பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே தூவ: கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை : துருவிய உருளைக்கிழங்குடன் மற்ற பொருள்களைச் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பனீர் கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய பனீர் – 200 கிராம், உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து துருவவும்), கடலை மாவு – 4 டீஸ்பூன், கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, துருவவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 2, சீரகம் – கால் டீஸ்பூன். பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய பனீருடன் மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு பிசையவும். பனீர், உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் நீரே பிசையப் போதுமானது. போதவில்லையெனில் சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சேமியா கோஃப்தா கிரேவி

தேவை: சேமியா – 100 கிராம் (வேகவிட்டு வடிகட்டவும்), கடலை மாவு – 100 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கீரை (ஏதேனும் ஒரு வகை) – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), துருவிய இஞ்சி – சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), உப்பு – அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன். தாளிக்க: வெண்ணெய் 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை - ஒன்று, முழு மிளகு 4 - 6. பொரிக்க: எண்ணெய் – 200 கிராம். மேலே சேர்க்க: ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: வேகவைத்த சேமியாவுடன் மற்ற பொருள்களைக் கலந்து விரும்பிய அளவில் உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, உப்பு, மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் அரை கப் நீர் சேர்த்து, கொதித்தவுடன் சேமியா கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய முள்ளங்கி, கேரட், கோஸ் மற்றும் செளசெள (சேர்த்து) – ஒரு கப், பிரெட் தூள் (பிரெட் க்ரம்ஸ்) – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உருளைக்கிழங்குத் துருவல் – கால் கப் (வேகவிட வேண்டாம்), உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – கால் டீஸ்பூன், பொடித்த மிளகு – ஒரு சிட்டிகை. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய காய்கள், உருளைக்கிழங்கு, பிரெட் தூள் மற்றும் மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, அரை கப் நீர் மற்றும் உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து, கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2- 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ஜவ்வரிசி கோஃப்தா கிரேவி

தேவை: ஜவ்வரிசி – 3 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 3 (வேகவிட்டு துருவவும்), கடலை மாவு – கால் கப், நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.கிரேவிக்கு: தக்காளி - 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – கால் டீஸ்பூன். பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவிட்டு நீர் வடித்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் இதர பொருள்களுடன் சேர்த்து தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் சிவக்க பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள் களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் அரை கப் நீரும் சேர்த்து, கொதித்து வருகையில் பொரித்த ஜவ்வரிசி கோஃப்தாக்களைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மசூர் தால் கோஃப்தா கிரேவி

தேவை: மசூர் தால் – 100 கிராம், ரஸ்க் தூள் – 4 டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு - தலா அரை டீஸ்பூன்.தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை மசூர் தாலை அரை மணி நேரம் ஊறவிட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூளுடன் ரவை ரவையாக அரைக்கவும். இத்துடன் வெங்காயத்தாள், ரஸ்க் தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து சிறிய சிலிண்டர் வடிவில் உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருள்கள் சேர்த்துத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கொதித்து வருகையில், பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

ஹரா பரா கோஃப்தா கிரேவி

தேவை: கடலை மாவு – அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) – ஒரு கப், பச்சை மிளகாய் - இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு சிட்டிகை, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை- சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்). பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டீஸ்பூன்.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: கடலை மாவுடன் மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் நிறம் மாறாது பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, அரை கப் நீர்விட்டு கொதித்து வருகையில் ஹரா பரா கோஃப்தாக்களைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் கலவை கொதித்த பின் இறக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

அவல் கோஃப்தா கிரேவி

தேவை: மெல்லிய அவல் – அரை கப், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (நறுக்கவும்), கடலை மாவு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – அரை டீஸ்பூன்.பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: அவலைக் களைந்து அரை மணி ஊறவிடவும். பின்னர் மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் அரை கப் நீர் சேர்த்து, கொதித்து வருகையில் கோஃப்தாக்களைச் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கொதித்த பின் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மலாய் கோஃப்தா முந்திரி கிரேவி

தேவை: பனீர் – 200 கிராம் (துருவவும்), சர்க்கரை இல்லாத கோவா - 100 கிராம், சோள மாவு – 50 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், ஓமம் – ஒரு சிட்டிகை, இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. கிரேவிக்கு: முந்திரி – 50 கிராம், வெள்ளரி விதை – 25 கிராம், கடைந்த தயிர் – அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், கஸூரி மேத்தி – அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: முந்திரி, வெள்ளரி விதையை அரை மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைத்து உப்பு, சர்க்கரை சேர்த்து தனியாக வைக்கவும். துருவிய பனீர், சர்க்கரை இல்லாத கோவா, உப்பு, மிளகுத்தூள், ஓமம், இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து, 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சோள மாவில் புரட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்க பொரிக்கவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து அரைத்த முந்திரி மசாலா சேர்த்து அடிபிடிக்காது கிளறவும். இப்போது கடைந்த தயிர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சிறிதளவு நீரும் சேர்த்து கொதித்து வருகையில் மலாய் கோஃப்தாக்களைச் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மலாய் கோஃப்தா தக்காளி கிரேவி

தேவை: பனீர் – 200 கிராம் (துருவவும்), சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம் , சோள மாவு – 50 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், ஓமம் – ஒரு சிட்டிகை, இஞ்சி விழுது – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – அரை டீஸ்பூன், பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய பனீர், சர்க்கரை இல்லாத கோவா, உப்பு, மிளகுத்தூள், ஓமம், இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து, 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சோள மாவில் புரட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்க பொரிக்கவும்.வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளிக்கவும். அதில் கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், உப்பு, சர்க்கரை மற்றும் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

வெந்தயக்கீரை கோஃப்தா கிரேவி

தேவை: நறுக்கிய வெந்தயக்கீரை – கால் கப், கடலை மாவு – ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: வெந்தயக்கீரையுடன் மற்ற பொருள்களைச் சேர்த்துக் கலந்து நீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு மற்றும் அரை கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைப் போட்டு, 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கறி கோஃப்தா கிரேவி

தேவை: மதியம் செய்து மிகுந்துவிட்ட பொரியல் – அரை கப், கடலை மாவு – அரை கப், இஞ்சி - பூண்டு விழுது – சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, சீரகம் – அரை டீஸ்பூன். பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: பொரியல் மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து உருண்டை களாக்கி சூடான எண்ணெயில் மிதமான தீயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.வாணலியில் வெண்ணெயை உருக்கி, தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், உப்பு மற்றும் அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

ரைஸ் கோஃப்தா கிரேவி

தேவை: பச்சரிசி மாவு – 100 கிராம், பொட்டுக்கடலை மாவு – 50 கிராம், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய புதினா – ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சி – சிறிய துண்டு, (தோல் சீவி நறுக்கவும்), மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்), தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை – ஒரு சிட்டிகை. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரிஞ்சி இலை – ஒன்று, பொடியாக நறுக்கிய பூண்டு – 2 பல். பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமலித்தழை - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: பச்சரிசி மாவுடன் மற்ற பொருள்களைச் சேர்த்து (தேவைப்பட்டால் நீர் தெளித்து) சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். தக்காளியை அரைக்கவும். வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, தக்காளி விழுது மற்றும் கிரேவிக்குக் கொடுத்துள்ள மற்ற பொருள்களைச் சேர்க்கவும். இதனுடன் அரை கப் நீர் சேர்த்து, நன்கு கொதித்து வருகையில், பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

வெள்ளைக் கொண்டைக்கடலை கோஃப்தா கிரேவி

தேவை: 10 மணி நேரம் ஊறவிட்டு எடுத்த வெள்ளைக் கொண்டைக்கடலை - தேவையான அளவு, பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் – சிறிதளவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: பழுத்த தக்காளி – 200 கிராம் (நைஸாக அரைக்கவும்), மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: ஊறவிட்ட வெள்ளைக் கொண்டைக்கடலை மற்ற பொருள்களைச் சேர்த்து கொரகொரவென அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து அரைத்த தக்காளி மற்றும் கிரேவிக்குக் கொடுத்துள்ள மற்ற பொருள்களைச் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மாவா கோஃப்தா கிரேவி

தேவை: சர்க்கரை இல்லாத கோவா (மாவா) – 200 கிராம், சோள மாவு – 100 கிராம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கவும்), சோம்புத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), துருவிய இஞ்சி, பூண்டு – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பச்சை மிளகாய் – ஒன்று (கீறவும்), பிரிஞ்சி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமலித்தழை, துருவிய சீஸ் - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: சர்க்கரை இல்லாத கோவா, சோள மாவு மற்றும் இதர பொருள்களை நன்கு பிசைந்து (கட்டி விரிசல் ஏதுமின்றி) சிறிய உருண்டைகளாக உருட்டி மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, இதர பொருள்கள் மற்றும் அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பொரித்த கோஃப்தாக்களை ஒரு தட்டில் பரப்பி மேலே கொதிக்கும் கிரேவி சேர்த்து கொத்தமல்லித்தழை, சீஸ் சேர்க்கவும்.

குறிப்பு: பால் கோவா மிகவும் மென்மையானது. இதில் பொரித்த கோஃப்தாக்களைக் கொதிக்கும் கிரேவியில் சேர்த்தால் கோஃப்தாக்கள் சிதைந்துவிடும். எனவே, கவனம் தேவை.

பிரெட் கோஃப்தா கிரேவி

தேவை: சால்ட் பிரெட் – 10 ஸ்லைஸ் (ஓரம் நீக்கியது), வெங்காயம் – 2 (நறுக்கவும்), கேரட் – ஒன்று (நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), தக்காளி – ஒன்று (நறுக்கவும்), கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலை மாவு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் (சேர்த்து) – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே தூவ: நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: நறுக்கிய கேரட்டுடன் கடலை மாவு சேர்த்து, மற்ற பொருள்களை யும் சேர்த்துப் பிசைந்து (தக்காளி, வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் போதும்) சிறிய நெல்லிக்காய் அளவு உருட்டிக்கொள்ளவும் பிரெட்டைத் தண்ணீரில் நனைத்து உருட்டிய மசாலாவை வைத்து மூடவும். சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்கு கொடுத்துள்ள தக்காளி விழுது, மற்ற பொருள்களைச் சேர்த்து, அரை கப் நீர்விட்டு கொதிக்கவிடவும். கிரேவி சற்றே திக் ஆனவுடன் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

குடமிளகாய் கோஃப்தா கிரேவி

தேவை: மிகவும் பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப், கடலை மாவு – அரை கப், சோள மாவு – 2 டீஸ்பூன், ஓமம் – சிறிதளவு, நசுக்கிய கஸூரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை) – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு – தக்காளி 200 கிராம் (கூழாக்கவும்), மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமலித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: குடமிளகாயுடன் மற்ற பொருள்களைக் கலந்து நீர் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளிக் கூழ், மற்ற பொருள்களைச் சேர்த்து அரை கப் நீர்விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சற்றே திக்காக வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். மேலே, கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு – ஒரு கப், கடலை மாவு – 100 கிராம், சர்க்கரை – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, சோள மாவு – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) – ஒன்று, பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, மிளகு – 4 (தட்டவும்). பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் பிற பொருள்கள், சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளிச் சாறு, பிற பொருள்கள் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கிரேவி சற்றே திக்காக வரும்போது பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து,

2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். மேலே, கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

தேங்காய் கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய தேங்காய் – ஒரு கப், கடலை மாவு – 100 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது), இஞ்சித் துருவல் - சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று, பெருங்காயத்தூள் – சிறிதளவு. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய தேங்காயுடன் இதர பொருள்கள் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தக்காளிச் சாறு, மற்ற பொருள்கள், அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கிரேவி கொதித்து வரும்போது பொரித்த கோஃப்தாக்களை போட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

வெண்டை கோஃப்தா கிரேவி

தேவை: பிஞ்சு வெண்டைக்காய் (பொடியாக நறுக்கியது) – 250 கிராம், பொட்டுக்கடலை மாவு – 100 கிராம், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), இஞ்சித் துருவல் – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, பூண்டு – 2 பல் (இடிக்கவும்), உப்பு – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: நறுக்கிய வெண்டைக்காய் மற்றும் இதர பொருள்களைச் சேர்த்து நீர்விட்டு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, இதர பொருள்கள் சேர்த்து, அரை கப் நீர்விட்டு கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்கள் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

வெங்காய கோஃப்தா கிரேவி

தேவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கடலை மாவு – அரை கப், சோள மாவு – 2 டீஸ்பூன், இடித்த பூண்டு, இஞ்சி – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), உப்பு – தேவையான அளவு.கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), சர்க்கரை – ஒரு சிட்டிகை, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் 3 டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் பிற பொருள்கள் தேவையான நீர் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது பிற பொருள்கள் மற்றும் அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதி வந்தபின் பொரித்த கோஃப்தாக்களை போட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

முள்ளங்கி கோஸ் கோஃப்தா கிரேவி

தேவை: துருவிய முள்ளங்கி, கோஸ் சேர்த்து – ஒரு கப், கடலை மாவு – 100 கிராம், சோள மாவு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), இஞ்சித் துருவல் – சிறிதளவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (கூழாக்கவும்), நசுக்கிய பூண்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நசுக்கிய கஸூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) – தேவையான அளவு. பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: துருவிய முள்ளங்கி, கோஸுடன் இதர பொருள்கள் சேர்த்து நீர் கலந்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளிச் சாறு பிற பொருள்களைச் சேர்த்து, அரை கப் நீர் விட்டு நன்கு கொதி வந்த பின் பொரித்த கோஃப்தாக்களைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

வேர்க்கடலை கோஃப்தா கிரேவி

தேவை: வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (நறுக்கவும்), இஞ்சித் துருவல் - சிறிதளவு, பிரெட் தூள் – 4 டீஸ்பூன், கடலை மாவு – 100 கிராம், சோள மாவு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (நறுக்கியது) – அரை கைப்பிடி அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு. கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக அரைக்கவும்), முந்திரி – 4, இஞ்சி, பூண்டு (இடித்தது) – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – ஒன்று, ஏலக்காய், கிராம்பு – தலா 2, பிரியாணி இலை – ஒன்று. பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: வெங்காயத்தைச் சிறிதளவு வெண்ணெயில் வதக்கி முந்திரி, தக்காளி, மசாலாக்களுடன் மையாக அரைக்கவும். இதை வேர்க்கடலையுடன் சேர்த்து, மற்ற பொருள்களையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டுப் பிசைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரிக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, பிற பொருள்கள், அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிவந்தவுடன் பொரித்த கோஃப்தாக்கள் சேர்த்து, 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் எள் கோஃப்தா கிரேவி

தேவை: ஸ்வீட் கார்ன் முத்துகள் – அரை கப், கடலை மாவு – 100 கிராம், சோள மாவு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு, வெள்ளை எள் – 50 கிராம் (வறுக்க வேண்டாம்). கிரேவிக்கு: தக்காளி – 200 கிராம் (விழுதாக்கவும்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு. தாளிக்க: வெண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – ஒன்று, சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – 4 (தட்டவும்). பொரிக்க: எண்ணெய் – தேவையான அளவு. மேலே சேர்க்க: கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு.

30 வகை கோஃப்தா கிரேவி

செய்முறை: ஸ்வீட் கார்ன் முத்துகளை மிக்ஸியில் கொரகொரவென அரைத்து, பிற பொருள்கள் கலந்து சிறிதளவு நீர் சேர்த்துப் பிசையவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, வெள்ளை எள்ளில் நன்கு அழுத்தி (உருண்டை வடிவம் மாறாமல்) புரட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து கிரேவிக்குக் கொடுத்துள்ள தக்காளி விழுது, பிற பொருள்கள், அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதி வந்தபின் பொரித்த கோஃப்தாக்களை சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கொத்தமல்லித்தழை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

உருண்டைக்குழம்புக்குப் போட்டி!

ணவகங்களுக்குப் போய் சாப்பிடுவது இப்போது அதிகமாகி வருகிறது. வீட்டில் சமைக்காத சில நேரங்களில் மட்டுமல்ல... விதவிதமான, வித்தியாசமான உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடும் பழக்கம் வளர்ந்து வருகிறது. செட்டிநாடு, சைனீஸ், நார்த் இண்டியன், மொஹல் போன்ற பல தலைப்புகளின் கீழ் உணவு வகைகள் மெனு கார்டில் பட்டியலிடப்படும் அளவுக்கு உணவுக் கலாசாரம் முன்னேறியுள்ளது.

30 வகை கோஃப்தா கிரேவி

சென்னையைச் சேர்ந்த சமையற்கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் பல்வேறு கோஃப்தா கிரேவி ரெசிப்பிகளை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார். வடஇந்திய உணவில் முக்கிய இடம் வகிப்பது கோஃப்தா. நம் ஊர் உருண்டைக்குழம்பின் வடஇந்திய வடிவம்தான் இது. சேமியா, ஜவ்வரிசி, அரிசி மாவு, அவல், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, உருளைக்கிழங்கு, தக்காளி, குடமிளகாய், வெங்காயம், வெந்தயக்கீரை, சுரைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கோஃப்தாக்கள் அமர்க்களச் சுவையில் அசத்தும்.

``பொதுவாக கோஃப்தாக்கள் சிறிய எலுமிச்சைப்பழ அளவில் இருந்தாலே, அவை கிரேவியில் ஊறி, `புஸ்’ எனப் பெரியதாகிவிடும். கோஃப்தா கிரேவியில் பயன்படுத்தப்படும் தக்காளிக்கூழுக்கு பெங்களூரு தக்காளி சிறந்தது. அதிக புளிப்பிருக்காது; திக்காக இருக்கும். கோஃப்தாக்களை `கடி’ எனப்படும் மோர்க்குழம்பிலும் சேர்க்கலாம்’’ என்று டிப்ஸையும் தருகிறார் லக்ஷ்மி.