தேவை: எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பூண்டுப் பற்கள் – 4, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கேரட் – ஒன்று, முட்டைகோஸ் – 3 இலைகள் (நறுக்கவும்), சோள மாவு (தண்ணீரில் கரைத்தது) – 2 டீஸ்பூன், தண்ணீர் அல்லது காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தண்ணீர் அல்லது காய்கறி வேகவைத்த தண்ணீரைச் சேர்க்கவும். பின்பு இதனுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தண்ணீரில் கரைத்த சோள மாவை இதனுடன் சேர்த்துக் கலந்து, வாணலியை மூடிவைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். இறுதியாக சூப்பின் மேல் கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

தேவை: நறுக்கிய பூண்டுப் பற்கள் – 7, சுத்தம் செய்து நறுக்கிய காளான் – 200 கிராம், வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டுப் பற்கள், வெங்காயம், காளான் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு இக்கலவையில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து, கலவையை மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடிவைத்துக் கொதிக்கவிட்டு பிறகு இறக்கவும். காளான் குளிர்ந்த பின்பு இந்தக் கலவை அனைத்தையும் மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து இந்த அரைத்த காளான் விழுதைச் சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

தேவை: முருங்கைக்கீரை – 100 கிராம், நறுக்கிய சின்ன வெங்காயம் – 8, நறுக்கிய தக்காளி – ஒன்று, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய பூண்டுப் பற்கள் – 3, நிறைய நீர்விட்டு வேகவைத்த துவரம்பருப்பு – 25 கிராம், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைத் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, முருங்கைக்கீரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். பின்னர் இதனுடன் வேகவைத்த பருப்புக்கலவையைச் சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான தீயில்வைத்து கொதிக்கவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தேவை: பப்பாளிக்காய் - பாதி அளவு, வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பற்கள், எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் – ஒன்று, தக்காளி – ஒன்று, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: இஞ்சி, பூண்டை இடித்துக்கொள்ளவும். பப்பாளிக்காய், கேரட்டைத் துருவிக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் இடித்த இஞ்சி - பூண்டு விழுது, துருவிய பப்பாளி, கேரட், நறுக்கிய தக்காளி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு , தக்காளி சாஸ், மிளகுத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். பரிமாறுவதற்கு முன் வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

தேவை: மாதுளை முத்துகள் – 50 கிராம், கெட்டித் தயிர் – 300 கிராம், ஆரஞ்சு – ஒன்று (சுளைகளை எடுத்துக்கொள்ளவும்), ஆப்பிள் – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இனிப்பு பூந்தி – 2 டீஸ்பூன் (விருப்பமெனில்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: அனைத்துப் பழங்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கெட்டித் தயிரை மத்தால் கடைந்துகொள்ளவும். ஒரு பவுலில் தயிர், ஆப்பிள், ஆரஞ்சுச்சுளைகள், மாதுளை, உப்பு, சீரகத்தூள், பொடித்த சர்க்கரை, மிளகுத்தூள், இனிப்பு பூந்தி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறினால் யம்மி ஃப்ரூட்ஸ் ரைத்தா ரெடி.

தேவை: புதினா – 20 கிராம், கொத்தமல்லி - 20 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, கெட்டித் தயிர் – 300 மில்லி, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பற்கள், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தயிர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். ஃபிரெஷ் ஹெர்ப் ரைத்தா ரெடி.

தேவை: கொய்யாப்பழம் – 2, மாதுளம்பழம் – பாதி அளவு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 7 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: கொய்யாப்பழத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் நறுக்கிய கொய்யாப்பழம், மாதுளை முத்துகள், தேங்காய்த்துருவல், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு ஆகிய அனைத்தையும் நன்கு கலந்து வைக்கவும். பின்னர் அதில் தாளித்து வைத்ததையும் சேர்த்து நன்கு கிளறினால் கொய்யா கோசம்பரி ரெடி.

தேவை: கீரை – 100 கிராம் (அகத்திக்கீரை தவிர ஏதேனும் ஒரு கீரை), தேங்காய்ப்பால் – 50 கிராம், மாம்பழம் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சர்க்கரை – 2 டீஸ்பூன்.

செய்முறை: மிக்ஸியில் மாம்பழம், கீரை, இஞ்சி, தேங்காய்ப்பால், சர்க்கரை ஆகிய அனைத்தையும் சேர்த்து மைய அரைத்தால் கீரை ஸ்மூத்தி ரெடி.

தேவை: எலுமிச்சை – ஒன்று (சாறு எடுக்கவும்), புதினா – 30 கிராம், நாட்டுச் சர்க்கரை – தேவைக்கேற்ப, உப்பு – ஒரு சிட்டிகை, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சைச்சாறு, புதினா, உப்பு, நாட்டுச் சர்க்கரை, இஞ்சி, சீரகம் அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டி பரிமாறினால் கார்டன் ஃபிரெஷ் ஜூஸ் ரெடி.

தேவை: கேரட் – ஒன்று, பப்பாளித் துண்டுகள் – 100 கிராம், நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை – தேவைக்கேற்ப, தேங்காய்ப்பால் – 50 மில்லி, ஆரஞ்சு – ஒன்று (சுளைகளை எடுத்துக்கொள்ளவும்), மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பின்பு வடிகட்டிப் பரிமாறலாம்.

தேவை: மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் அல்லது பொங்கல் காலத்தில் கிடைக்கும் கிழங்கு மஞ்சள் (இடித்தது) – ஒன்று, தேன் – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 300 மில்லி.

செய்முறை: அடுப்பில் 300 மில்லி தண்ணீரை வைத்து சூடாக்கவும். தண்ணீர் ஒரு கொதிவந்ததும் மஞ்சள்தூள் அல்லது இடித்த கிழங்கு மஞ்சள் சேர்த்து இரண்டு கொதி கொதிக்கவிடவும். பின்னர் கலவையை இறக்கி மூடி போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். இதனுடன் தேன் கலந்து பருகலாம்.

தேவை: கிரீன் டீ – மூன்று அல்லது நான்கு இலைகள், இஞ்சி – ஒரு சிறிய துண்டு (துருவியது), மிளகு – ஒன்று (இடித்துக்கொள்ளவும்), எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன், தேன் – தேவைக்கேற்ப, தண்ணீர் – 400 மில்லி

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைவைத்து அதில் துருவிய இஞ்சி, இடித்த மிளகு போட்டு ஒரு கொதிவிடவும். இதில் கிரீன் டீ சேர்த்து மறுபடியும் ஒரு கொதிவிடவும். பிறகு அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடி போட்டு, ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் இதை வடிகட்டி, இதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து பரிமாறினால் பூஸ்டர் பேக் கிரீன் டீ ரெடி.

தேவை: ராகி – 50 கிராம், பாதாம் – 6, பொடித்த வெல்லம் – தேவையான அளவு, பால் – 450 மில்லி, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி, பாதாம் இரண்டையும் தனித்தனியாக முதல் நாள் இரவு முழுக்க அல்லது எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் பாதாமில் உள்ள தோலை நீக்கி விடவும். ஊறவைத்த ராகி, பாதாம் இரண்டுடனும் தேவையான தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயைச் சூடாக்கி வடிகட்டிவைத்திருக்கும் ராகி – பாதாம் கலவையைப் போடவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கலவை வெந்ததும் தேவையான பொடித்த வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். கலவை ஆறிய பிறகு பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

தேவை: நடுத்தர அளவிலான கொய்யாப்பழம் – 3, தக்காளி – ஒன்று, உப்பு – ஒரு சிட்டிகை, சர்க்கரை – தேவைக்கேற்ப, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: கொய்யாப்பழம், தக்காளி, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் அனைத்தையும் மிக்ஸியில் ஒரு தடவை அரைக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் மைய அரைக்கவும். இதை வடிகட்டினால் ஜூஸ் ரெடி.

தேவை: பாதாம் – 20 கிராம், தேங்காய்த்துருவல் – 50 கிராம், பச்சை மிளகாய் – 3, பொட்டுக்கடலை – 20 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் – ஒன்று.

செய்முறை: வெந்நீரில் பாதாமை 20 நிமிடங்கள் ஊறவைத்து, தோல் நீக்கவும். இதனுடன் தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, இஞ்சி, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பாதாம் சட்னியில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

தேவை: இஞ்சி – 20 கிராம், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த்துருவல் – 8 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும். பின்பு அதில் இஞ்சியைப் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, புளி, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். கலவை சூடு ஆறியதும் மைய அரைத்துக் கொள்ளவும். கூடுதல் சுவைக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

தேவை: அரைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு, வேகவைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டுப் பற்கள் – 5, தேங்காய்த்துருவல் – 4 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 6, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் கீரையைப் போட்டு வதக்கவும். பின்பு அதில் வேகவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடி வைத்து, ஒரு நிமிடம் கழித்து தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேவை: குடமிளகாய் – 2, வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, கடலை மாவு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு இதனுடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். பின்னர் கடலை மாவை சேர்த்துப் புரட்டி ஒரு நிமிடம் கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

தேவை: கடைந்த தயிர் – 300 மில்லி, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய தக்காளி – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி (இடித்தது) – ஒரு டீஸ்பூன், பூண்டுப் பற்கள் – 2 (இடித்தது), மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, வெங்காயம், இடித்த இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சப்பாத்தி, பிரியாணி போன்றவற்றுக்கு இது வெகு பொருத்தமாக இருக்கும்.

தேவை: கோதுமை மாவு – 400 கிராம், துளசி – 12 முதல் 15 இலைகள், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: துளசி இலைகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நறுக்கிய துளசி இலைகள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சப்பாத்திகளாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

தேவை: பீட்ரூட் – ஒன்று, கடலைப்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், சோம்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 7, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: பீட்ரூட்டைத் துருவிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்பு அதில் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பருப்புடன் பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பின்னர் இதை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவை: மணத்தக்காளிக்கீரை – அரை கட்டு, துவரம்பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 8, நறுக்கிய தக்காளி – ஒன்று, தேங்காய்த்துருவல் – 7 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைக்கவும். மணத்தக்காளிக்கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த்துருவல், சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர்விட்டு மைய அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய மணத்தக்காளிக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் சாம்பார் பொடி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, இதில் வேகவைத்த பருப்பைப் போட்டு ஒரு கொதிவிடவும். கடைசியாக அரைத்து தேங்காய்க்கலவையையும் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கவும்.

தேவை: பெரிய நெல்லிக்காய் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – தேவைக்கேற்ப, துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், பூண்டு பற்கள் (நசுக்கியது) – 4, புளி – எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் அரைத்தால் ரசப்பொடி ரெடி. அடுத்து புளியை ஊறவைத்து தேவையான அளவுக்குக் கரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து துருவிய நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு சிறிது தண்ணீர் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தேவை: பீட்ரூட் – ஒன்று, கேரட் – 3, கடலை மாவு – 50 கிராம், உப்பு – தேவைக்கேற்ப, கொத்தமல்லி – சிறிதளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், அரிசி மாவு – 20 கிராம், இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, வெங்காயம் – ஒன்று, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட், கேரட்டைத் துருவிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில் துருவிய பீட்ரூட், கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, மிளகாய்த்தூள், அரிசி மாவு, உப்பு, கடலை மாவு அனைத்தையும் சேர்த்து பிசறவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு இதை எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்தால் பீட்ரூட் பக்கோடா ரெடி.

தேவை: முடக்கத்தான்கீரை - 15 முதல் 20 இலைகள், பச்சரிசி – 200 கிராம், இட்லி அரிசி – 200 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, சோம்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அரிசி, உளுத்தம்பருப்பு, முடக்கத்தான்கீரை, உப்பு, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். நான்கு மணி நேரம் புளிக்க வைத்து தோசைக்கல்லில் வார்த்து எடுத்தால் முடக்கத்தான் கீரை தோசை ரெடி.

குறிப்பு: முடக்கத்தான்கீரைக்குப் பதிலாக வேறு கீரையிலும் இந்த தோசை செய்யலாம்.

தேவை: சின்ன வெங்காயம் – 12, பூண்டு பற்கள் – 7, தக்காளி – ஒன்று, தேங்காய்த்துருவல் – 10 டீஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மல்லித்தூள் – 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி - ஒரு எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய்த்துருவல், சோம்பு இரண்டையும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலையைத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி பின்பு இதில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிடவும். ஒரு கொதிவந்ததும் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும். புளிக்கரைசல் பச்சை வாசனை போக நான்கு கொதித்ததும் அரைத்துவைத்திருக்கும் தேங்காய்க்கலவையைச் சேர்த்து மறுபடியும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

தேவை: கொத்தமல்லி – ஒரு கட்டு (ஆய்ந்து, சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்), உப்பு – தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் – 7, புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், வெல்லம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை: வெறும் கடாயில் காய்ந்த மிளகாயை ஒரு நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, உப்பு, புளி அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின் அரைத்த கொத்தமல்லி விழுதையும் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.

தேவை: கோதுமை மாவு – 400 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, பேரீச்சை – 100 கிராம், சர்க்கரை – 50 கிராம், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – போளி சுடுவதற்குத் தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பேரீச்சம்பழத்தில் உள்ள கொட்டையை நீக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய்விட்டு காய்ந்ததும் அதில் அரைத்த பேரீச்சை விழுது, சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில்வைத்து கலவையைக் கிளறி இறக்கவும். கலவை ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவைச் சப்பாத்திக்குத் திரட்டுவதுபோல் சிறிது திரட்டி அதில் இந்த பேரீச்சை உருண்டையைவைத்து மீண்டும் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் ருசியான பேரீச்சை போளி ரெடி.

தேவை: பாஸ்மதி அரிசி – 500 கிராம், காய்ச்சாத பால் – 50 மில்லி, ஆரஞ்சு - 2, சர்க்கரை - 100 கிராம், பாதாம் – 5, நெய் – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.– ஒரு சிட்டிகை.

செய்முறை: நெய்யில் பாதாம் பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். இரண்டு ஆரஞ்சு பழங்களிலிருந்து சாறு எடுத்துவைக்கவும். ஒரு பானில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் காய்ந்ததும் இதனுடன் கொரகொரப்பாக அரைத்த அரிசியை சேர்த்து மிதமான தீயில்வைத்து கிளறவும். அரிசி வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த பாதாம், குங்குமப்பூ சேர்த்து 10 நிமிடங்கள் கிளறி இறக்க வேண்டும். கலவை நன்கு ஆறிய பிறகு ஆரஞ்சுச்சாற்றைச் சேர்த்து மீண்டும் கிளறினால் ஆரஞ்சு பிர்னி ரெடி.

தேவை: பப்பாளிக்காய் – பாதி, நெய் – 3 டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை – 200 கிராம், காய்ச்சிய பால் – 200 மில்லி, பாதாம் – 5 முந்திரிப்பருப்பு – 3.

செய்முறை: பப்பாளிக்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு துருவிய பப்பாளிக்காயைப் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் பால் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறவும். இக்கலவை நன்கு வெந்ததும் இதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். பின்னர் இதில் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து இறக்கவும்.

``எனக்கு இயல்பாகவே சமையலில் மிகுந்த ஆர்வம் உண்டு. நம் நாட்டு உணவுகளை ரசித்து ரசித்துச் சமைப்பதோடு, மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள உணவு வகைகளின் செய்முறைகளைக் கற்றுக்கொண்டு செய்து பார்ப்பதும் என் வழக்கம்'' என்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் உமையாள் வைரவன்.

இவருக்குப் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மிதிலைப்பட்டி சொந்த ஊர். கணவர் வைரவன் கப்பலில் பணிபுரிகிறார். இரண்டு குழந்தைகள்.

பல்வேறு சமையல் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ள உமையாள், ``உணவைச் சுவையாகச் சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தைச் சத்துகளுக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக... நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது'' என்கிறார்.

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 30 சத்தான உணவுகளின் எளிமையான செய்முறைக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்துக்கு மட்டுமல்ல; எந்தக் காலகட்டத்துக்கும் இந்த இணைப்பிதழில் அளிக்கப்பட்டுள்ள உணவுகள் அவசியமானவை. இவற்றைப் பயன்படுத்தி குடும்ப ஆரோக்கியம் காப்போம்; நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவோம்!