Published:Updated:

பேக்கரி ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபுள் ஹாட் டாக் #Video

Vegetable Hot Dog
News
Vegetable Hot Dog

காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, இதுபோன்ற  மாடர்ன் உணவுகளுடன் காய்கறிகளைச் சேர்த்துக் கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுவார்கள். 

பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே பஜ்ஜி, போண்டா என விதம்விதமாகச் செய்துவைத்தாலும், அவர்கள் பக்கத்திலுள்ள பேக்கரியைத் தேடியே ஓடுவார்கள். காரணம், பேக்கிரியின் சாண்ட்விச், பஃப்ஸ் போன்றவற்றின் வாசம். ஆனால், குழந்தைகளுக்குப் பிடிக்கிறதே என பேக்கரி பொருள்களை தினம்தோறும் வாங்கிக் கொடுப்பதும் சரியல்ல. எனில், என்னதான் செய்யலாம் என்றால், `` பிள்ளைகளுக்குப் பிடித்த வகையில் பேக்கரி ஃபேமஸ் ஹாட் டாகை வீட்டிலேயே செய்து கொடுக்கலாமே...'' என்கிறார், சமையல்கலை நிபுணர் ஜானகி அஸாரியா.

Janaki Azariah
Janaki Azariah

``வீட்டிலேயே சுவையும் மனமும் மிக்க பண்டங்களைச் செய்து கொடுப்பதால், பிள்ளைகளின் வயிறும் அம்மாக்களின் மனமும் நிறையும். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மாடர்ன் உணவுகளுடன் காய்கறிகளை சேர்த்துக் கொடுத்தால், மறுக்காமல் சாப்பிடுவார்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பேக்கரி உணவுகள் ஆரோக்கியமானவைதானா இல்லையா என்ற விவாதத்தைவிட முக்கியமானது, குழந்தைகளை அங்கு செல்ல விடாமல் தடுப்பதுதான். அதற்கு, அந்த ரெசிப்பியை நீங்களே செய்துதருவது நல்லது. இந்த வகையில், காய்கறிக் கலவை கொண்டு மல்ட்டிகிரெயின் பன்னில் செய்யக்கூடிய சத்தான `ஹாட் டாக்'கிற்கான செய்முறை இதோ!

பேக்கரி ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபுள் ஹாட் டாக் #VegetarianHotDog #Recipes

Posted by Vikatan EMagazine on Friday, December 6, 2019

பேக்கரி உணவாச்சே, மைக்ரோவேவ் ஓவனெல்லாம் வேண்டுமே... என்று உடனே பின்வாங்க வேண்டாம். சாதாரண தவா அல்லது தோசைக்கல்லில்கூட இதைச் செய்துவிட முடியும். முயன்றுபாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேவையான பொருள்கள்

Vegetables
Vegetables

மல்ட்டி கிரெயின் ஹாட் டாக் பன்ஸ் -  3 

வெங்காயம் -   ½  (பொடியாக நறுக்கியது)  

மஞ்சள் குடமிளகாய் -   ½  (பொடியாக நறுக்கியது) 

பொடியாக நறுக்கிய பாலக்கீரை - 1 கப் 

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் 

கேரட் - 1  (துருவியது) 

துருவிய சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் 

வேகவைத்த கார்ன் -  2 டேபிள் ஸ்பூன் 

இத்தாலியன் ஹெர்ப்ஸ் - 2 டீ ஸ்பூன் 

தக்காளி சாஸ்  - 2 டேபிள்ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

வெண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன் 

மிளகுத்தூள் -½ டீஸ்பூன் 

உப்பு -  தேவைக்கேற்ப 

செய்முறை

* ஹாட் டாக் பன்களை நடுப்பகுதியில் கீறி எடுத்துக்கொள்ளவும். கீறி எடுத்த பன் பகுதியை வீணாக்க வேண்டாம். அதை ஸ்டஃபிங் உடன் சேர்த்துக்கொள்ளலாம்.

* தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். பிறகு பூண்டு, குடமிளகாய், கேரட், பாலக், கார்ன், உப்பு, மிளகுத்தூள் எல்லாம் சேர்த்து வதக்கி, 2 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். 

* பன்னை மீண்டும் டோஸ்ட் செய்யப்போவதால்,  அப்போதும் கொஞ்சம் வேகும். எனவே, ரொம்ப நேரம் வேகவிட வேண்டியதில்லை.

Vegetable Hot Dog
Vegetable Hot Dog

* 2 நிமிடங்களுக்குப் பிறகு,  இத்தாலியன் ஹெர்ப்ஸ், தக்காளி சாஸ், மீதமுள்ள பன் துகள்கள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, அடுப்பை அணைக்கவும். இப்போது, ஸ்டஃபிங்கை ஆற வைக்கவும். இதே காய்கறிகளில்தான் ஸ்டஃப்பிங் செய்ய வேண்டும் என்றில்லை. மீந்துபோன பொரியல், மசாலா, கறிவகைகளையும், பட்டாணி, காலிஃபிளவர் போன்றவற்றை வைத்தும் செய்யலாம்.

* இப்போது, தோசைக் கல்லை சூடாக்கவும். பன்னின் நடுவில் ஸ்டஃப்பிங்கில் சிறிது வைத்து, மேலே துருவிய சீஸ் தூவி மேலே அழுத்தி, வெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். சீஸ் உருகி, பன் டோஸ்ட் ஆகும்வரை வைத்திருந்து எடுத்தால், ஹாட் டாக் ரெடி! இதை அப்படியே குழந்தைகளுக்கு சூடாகப் பரிமாறி மகிழவும்!