Published:Updated:

பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ்; ஆவின் அறிமுகம் செய்த 5 புதிய தயாரிப்புகள் என்னென்ன?

Aavin Milk ( Photo: Vikatan / Priyanka.P )

பண்டிகை நாட்களில் எளிதாக செய்ய பாயாசம் மிக்ஸ், சத்து கொடுக்க பால் புரத நூடுல்ஸ், இனிப்பிற்க்காக ப்ரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெரி சுவைகளில்), டெய்ரி ஒயிட்னர் போன்ற பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் .

மக்களை கவரும் வகையில் பல பொருட்களை தயாரித்து விற்று வருகிறது ஆவின் நிறுவனம். ஏற்கெனவே பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களான , தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்றவற்றை தயாரித்து விற்று வரும் நிலையில், புதிதாக ஐந்து பால் சார்ந்த பொருட்களை தயாரித்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆவின் நிறுவனத்தால் உருவான ஐந்து புதிய தயாரிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் பல துறை சார்ந்த அமைச்சர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அதில் பண்டிகை நாட்களில் எளிதாக செய்ய பாயாசம் மிக்ஸ், சத்து கொடுக்க பால் புரத நூடுல்ஸ் , இனிப்பிற்காக ப்ரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மேங்கோ மற்றும் ஸ்ட்ராபெரி சுவைகளில்) , டெய்ரி ஒயிட்னர் போன்ற பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல ஆண்டுகளாக பால் உற்பத்தியில் நீடித்து வரும் ஆவின் நிறுவனம், கிராம கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு பால் உற்பத்தியாளர் கட்டமைப்பில் , கிராமம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வாழும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள்தோறும் நுகர்வோருக்கு 26.66 லட்சம் லிட்டர் பாலை தமிழ்நாடு முழுவதும் விற்கிறது.

Aavin Milk
Aavin Milk
Photo: Vikatan / Priyanka.P

இதோடு மட்டும் அல்லாமல் பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு பொருள்களையும் விற்று வந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய பொருட்களின் அறிமுகம் மக்களிடையே வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism