Published:Updated:

விலை ரூ.12,000... அரபு நாட்டின் அசத்தல் மந்தி பிரியாணி!

வழக்கமாக நாம் சாப்பிடும் பிரியாணியின் சுவையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் மந்தி பிரியாணி. முழு ஆடு கொண்டு செய்யப்படும் இந்த மந்தி பிரியாணியை சுமார் 20 பேர் சாப்பிடலாம். இன்றைக்கு இதன் விலை ரூ.12,000.

Mandi Biryani
Mandi Biryani

பிரியாணிப் பிரியர்களுக்கு ஒரு ருசியான செய்தி. அரேபிய நாட்டுப் பாரம்பர்ய உணவு வகையைச் சேர்ந்தது `மந்தி ( MANDI) பிரியாணி'. தனிச்சிறப்பு வாய்ந்த இந்தப் பிரியாணி அரபு நாடுகளின் விருந்திலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. அங்கு செல்லும் பெரும்பாலானோர் இந்தப் பிரியாணியைச் சுவைக்காமல் திரும்புவதில்லை. சரி, இந்தப் பிரியாணியில் அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அதை சமைப்பவரிடமே கேட்போம்.

Chef Hasan
Chef Hasan

புதுவை மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த ஹசன், டிப்ளமோ கேட்டரிங் படித்துவிட்டு மஸ்கட், குவைத், சவுதி, துபாய் என பல வளைகுடா நாடுகளின் பல நட்சத்திர ஹோட்டல்களிலும் 25 ஆண்டுகள் செஃப் ஆக பணியாற்றியவர். மந்தி பிரியாணி உள்ளிட்ட பல அரேபிய உணவுகளைச் சமைப்பதில் கில்லாடி. தற்போது காரைக்காலில் தன் நண்பரோடு இணைந்து சொந்தமாக உணவகம் நடத்திவருகிறார். அவரிடம் மந்தி பிரியாணியின் செய்முறை விளக்கம் குறித்துக் கேட்டோம்.

`ஒரு பிரியாணி விலை ரூ.40,076!'- ஆன்லைனில் ஏமாந்த சென்னை கல்லூரி மாணவி

``மந்தி பிரியாணியைப் பொறுத்தவரை, ஒரு முழு ஆட்டின் தலையை வெட்டி, தோலை உரித்து, குடலை நீக்கி முழுமையாக சுத்தப்படுத்தி விடுவோம். அதன்பின் அரேபிய மசாலாப் பொருள்களை அரைத்து, ஆட்டின் உடல்முழுதும் பூசி ஒருமணி நேரம் ஊறவிடவும். இந்த மசாலாவை தேவையான அளவு பிரியாணி அரிசியுடனும் கலக்க வேண்டும். பிறகு குடல் நீக்கிய ஆட்டின் வயிற்றுப்பகுதியில் மசாலா கலந்த பிரியாணி அரிசியை வைக்கிறோம். இதற்கென ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட ஸ்டாண்டில் ஆட்டை நின்ற நிலையில் வைத்து, தரையில் குழி செய்து உருவாக்கிய நெருப்பு அடுப்பில் இறக்க வேண்டும். இதன் மேல் மூடி போட்டு, அதன் மேலே மண்ணால் பூசி விடுவோம். ஆட்டின் உடம்பில் உள்ள நீரிலேயே அரிசி வெந்து பிரியாணி தயாராகிவிடும்.

Mandi Biryani
Mandi Biryani

வழக்கமாக நாம் சாப்பிடும் பிரியாணியின் சுவையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் மந்தி பிரியாணி. முழு ஆடு கொண்டு செய்யப்படும் இந்த மந்தி பிரியாணியை சுமார் 20 பேர் சாப்பிடலாம். இன்றைக்கு இதன் விலை ரூ.12,000. முன்கூட்டி ஆர்டரின் பேரில்தான் இதை தயாரித்து தரமுடியும்" என்கிறார்.

ஆம்பூர் பிரியாணி ஆளைத்தூக்கும்!

விதவிதமான பிரியாணி ரசிகர்களுக்கு மந்தி பிரியாணி ஒரு பெருவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.