Published:Updated:

திருச்சி ருசி: பக்குவமான சுவைக்கு 'பாட்சா பிரியாணி!' சேரர்; சோழர்; பாண்டியர் பெயர்களில் குடில்கள்!

தள்ளுவண்டியில் பிரியாணி விற்க ஆரம்பித்து இன்று திருச்சியில் தனக்கென ஒரு அடையாளத்துடன் நிற்கிறேன் என்றால், அதற்குக் காரணம் என் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள்தான் என் கடவுள்.

பிரியாணி... தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத்தக்க உணவாக மக்களிடம் மாறியிருக்கிறது. இந்த உணவு மட்டுமல்ல, இதன் பெயரே அளவில்லா மகிழ்வையும் ஏற்படுத்திவிடுகிறது. ’மட்டன் பிரியாணி’, 'சிக்கன் பிரியாணி’, ’மீன் பிரியாணி’, ’காடை பிரியாணி’ எனப் 12 வகை பிரியாணியோடு பாட்சா ஸ்பெஷல் சிக்கன், காடை ப்ரை என விதவிதமாக அசைவ உணவு கொடுத்து அசத்திக்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பிரியர்கள் இக்கடையைப் புகழ்ந்து பேச, மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஒரு மாலை நேரமாகப் பார்த்து உணவகத்திற்குச் சென்றோம்.

பாட்சா பிரியாணிக் கடை
பாட்சா பிரியாணிக் கடை

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே ஒரு கார்டன் செட்டப்பில் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது 'பாட்சா பிரியாணி' உணவகம். பரபரப்பான இடத்திற்கு அருகிலேயே இருந்தாலும், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமே இருந்தாலும் ரொம்பவே அமைதியாக இருந்தது. அதிலும், உணவகத்தின் உள்ளே சென்றதும் குடில் குடிலாக அமைக்கப்பட்டு இருந்தது. அதிலும் சிறப்பாகச் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், அன்னை தெரசா எனப் பெயர்கள் இடப்பட்டு இருந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

நாம் சென்றதே ஒரு மாலை நேரம் என்பதால், அந்தக் குடில் பூலோக சொர்க்கமாகவே நமக்குக் காட்சியளித்தது. தொடர்ந்து பணியாளரிடம் பிரியாணியை ஆர்டர் செய்தபோது, ’அண்ணே, நம்ம கடையில 'பாட்சா ஸ்பெஷல் சிக்கன்' சூப்பரா இருக்கும்ணே எடுத்துட்டு வரட்டுமா’ எனக் கேட்க, ’சரிங்க...

சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி

கொண்டு வாங்க பார்ப்போம். எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துருவோம்’ எனக் களத்தில் குதித்தேன். ரொம்பவே சூடாக நல்ல மணத்துடன் மட்டன் பிரியாணியை நமக்குப் பரிமாறினார்கள், வாழை இலையில் சூடாகப் பரிமாறப்பட்ட அந்த பிரியாணியை நாம் சுவைக்கையில் வேற லெவல் டேஸ்டில் இருந்தது.

பாட்சா ஸ்பெஷல் சிக்கன்
பாட்சா ஸ்பெஷல் சிக்கன்

அம்மியில் அரைத்துச் செய்யப்படும் பாட்சா ஸ்பெஷல் சிக்கன் என அனைத்தையும் ஒரு பிடி பிடித்தோம். முக்கியமாக அவர்களின் ஸ்பெஷல் சிக்கனில் சுவை அல்டிமேட். போதும் போதும் என உணவைச் சாப்பிட்டு முடித்து, பில்லைச் செலுத்திவிட்டு, உணவக உரிமையாளர் முகமது அபுபக்கர் சித்திக் அவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்களது பூர்வீகம் கும்பகோணம் அருகேயுள்ள சோழன் மாளிகைதான். வேலை விஷயமா திருச்சி வந்தவங்க இங்கேயே செட்டில் ஆகிட்டோம். முதலில் பிரியாணியை ஒரு தள்ளுவண்டியில் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அதுக்கு முதல் காரணமே மாணவர்கள்தான்.

உரிமையாளர் முகமது அபுபக்கர் சித்திக்
உரிமையாளர் முகமது அபுபக்கர் சித்திக்

இங்க சத்திரத்தைச் சுத்தி நிறைய கல்லூரிகள் இருக்கு. பல மாணவர்கள் `ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிட்டிருக்காங்க, ஹாஸ்டல்ல தங்கிப் படிக்குறவங்களுக்கு பெருசா ருசியான, சத்தான சாப்பாடு கிடைக்கிறதே இல்ல. ’நாமதான் நல்ல ருசியா சமைக்கிறோமே... அதை ஏன் அவர்களுக்குத் தரக் கூடாது’ன்னு ஆரம்பித்ததுதான் இந்தத் தள்ளுவண்டிக் கடை.

திருச்சி ருசி: கேஎம்எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி - தீபாவளி மெனு `வான்கோழி பிரியாணி'யில் என்ன ஸ்பெஷல்?
அன்னை தெரசா குடில்
அன்னை தெரசா குடில்

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சி இப்போ பெரிய கடையா மாறியிருக்கு, ஆனாலும், இன்னமும் தள்ளுவண்டியில வியாபாரம் செய்யறதை நிறுத்தலை. ஆரம்பத்துல நானும் என் மைத்துனரும் மட்டும்தான் கடையை ஆரம்பித்தோம். இப்போ 15 பேர்கிட்ட எங்களிடம் வேலை செய்றாங்க.

பிரியாணி
பிரியாணி

அசைவ பிரியாணி, சைவ பிரியாணி இப்போ நம்மகிட்ட பன்னிரண்டு வகையிலான பிரியாணி கிடைக்குது. எல்லாமே அவ்ளோ சுத்தமா ரொம்ப காரம் இல்லாம, ரொம்பவே டேஸ்டியா கொடுக்குறோம். மசாலா அதிகமா சேர்க்கிறதே இல்ல, சேர்க்குற கொஞ்ச மசாலாவும் வீட்ல நாங்களே ரெடி பண்றதுதான்.

அதனால, குழந்தைகளுக்குக்கூட எந்தவித பயமுமில்லாம கொடுக்கலாம். இந்தக் காரணம்தான் மக்கள் நம்ம கடையைத் தேடி வருகிறார்கள். அப்புறம் இந்தக் குடில், அதோட பேர் இது எல்லாமே தமிழ் மேலேயும், தமிழ்நாட்டு மேலேயும் எனக்கு இருக்குற ஆர்வமும் பெருமையும்தான்" எனக் கூறியவர்,

சிக்கன்
சிக்கன்

”25 ஆண்டுக்கு மேலா இந்த உணவு பிசினெஸில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் எனக்குப் புது நாள்போலதான், பார்த்துப் பார்த்து இறைச்சி வாங்குவது, ஆலைகளிலிருந்து அரிசி எடுப்பதுன்னு தரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கணும்ங்கிறதுல ரொம்ப கவனமா இருப்பேன்.

சிறுவன்
சிறுவன்

தள்ளுவண்டியில் பிரியாணி விற்க ஆரம்பித்து இன்று திருச்சியில் ஒரு அடையாளத்துடன் நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள்தான் என் கடவுள்” என முடித்தார்.

தொடர்ந்து, கடையின் வாடிக்கையாளரான சண்முகத்திடம் பேசினோம், ”எத்தனை வகை உணவுகள் இருந்தாலும் எனக்குப் பிடித்தது பிரியாணிதாங்க. 'ட்ரீட்'ன்னு சொன்னா, அது 'பிரியாணி'தான்னு மாறியிடுச்சிங்க. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் நாவில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிடுச்சுங்க. என்னோட சொந்த ஊரு நாமக்கல்.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

நான் சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நல்லா சாப்பிட வேணும்னா கண்டிப்பா இங்க வந்துடுவேன். காலையில 11 மணியிலிருந்து நைட் 10 மணி வரைக்கும் எப்போ வந்தாலும் இங்க பிரியாணி கிடைக்கும். அடிக்கடி இங்க வந்து சாப்பிடுவேன்.

சூப்
சூப்

அவ்ளோ ருசியா இருக்கும். ஆட்டுக்கறி பிரியாணி நிஜமாவே ரொம்ப டேஸ்டா இருக்கும். விலையும் பாத்தீங்கன்னா ரொம்ப கம்மியா இருக்கும். பல நாள் சாப்பிட்டிருக்கேன், ஒரு நாள்கூட புளிச்ச ஏப்பம், வயித்துல எரிச்சல் எதுமே வந்ததில்ல. யாருனாலும் பயப்படாம சாப்பிடலாம்" என்றார்.

திருச்சி வரும் அசைவப் பிரியர்கள் இந்தக் கடையை மிஸ் பண்ணிடாதீங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு