கட்டுரைகள்
Published:Updated:

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

உணவு என்பது நம் உடலோடு மட்டுமல்ல, உணர்வுகளோடும் தொடர்புடையது. நாம் உண்ணும் உணவானது நம் சிந்தனை, செயல் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்வது

 ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

ஆர்ட் ஆஃப் லிவிங்.... அதாவது வாழும் கலை குறித்து நிறைய கேள்விப்பட்டிருப்போம். அதென்ன ஆர்ட் ஆஃப் ஈட்டிங்..?

உண்ணும் கலை... வாழும் கலைக்கே அடிப்படையான உன்னதக் கலை இது.

வாழ்வதற்காக சாப்பிடுவோர் ஒரு பிரிவினர் என்றால் சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்கள் இன்னொரு பிரிவினர். எது சரி, எது தவறு என்ற விவாதம் நமக்கு வேண்டாம். எப்படியிருப்பினும், எல்லோருக்கும் உணவு என்பது வாழ்வோடு ஒருங்கிணைந்த ஒன்று. உணவுதான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. ஆனால் இன்று அதே உணவுதான் ஆரோக்கியக்கேட்டுக்கும் அடிப்படையாக மாறியிருக்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், ஹார்மோன் கோளாறுகள் என தொற்றாநோய்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது மனித குலம்.

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

நம் தாத்தா - பாட்டி காலத்தில் தினமும் பல கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்தார்கள். அம்மா - அப்பா காலத்தில் அது பாதியாகக் குறைந்தது. நம் காலத்தில் இன்னும் குறைந்தது. நம் பிள்ளைகளோ, பெட்ரூமை விட்டு வெளியே வராமல் கூட்டுக்குள் வாழப் பழகிவிட்டனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், அதற்கு நேரெதிராக உடல்பருமன் பிரச்னையையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தத் தலைமுறை.

விரல் நுனியில் உலகத்தை வலம் வர முடிகிற நமக்கு, தேடி வரும் தகவல்களுக்கும் பஞ்சமில்லை. அப்படி வரும் தகவல்களில் உணவு குறித்தவை முதலிடம் வகிப்பதையும் மறுப்பதற்கில்லை. திடீர் திடீரெனப் புது டிரெண்டாகும் டயட் முறைகள், உலகின் பிரபலமான உணவுகள், கூகுள் டாக்டர்களின் அரைகுறை ஆலோசனைகள், அறிவுரைகள் எனத் தகவல் பாதி, தவறு பாதி என நம்மைக் குழப்பும் செய்திகள் ஏராளம்.

உணவு என்பது நம் உடலோடு மட்டுமல்ல, உணர்வுகளோடும் தொடர்புடையது. நாம் உண்ணும் உணவானது நம் சிந்தனை, செயல் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்வது. எனவேதான் சரியான உணவுப்பழக்கம், முறையான உணவுப்பழக்கம் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்!

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். கலோரிகளைக் கணக்குப் பண்ணிச் சாப்பிடுவது, கணக்கு வழக்கே இல்லாமல் சாப்பிடுவது என இரண்டு எக்ஸ்ட்ரீமும் நம்மிடையே உண்டு. ‘ஒரு துண்டு சாக்லேட் சாப்பிட்டேன்... அடுத்தநாளே 200 கிராம் ஏறிடுச்சு...' என்று கவலைப்படுவோரும் உண்டு. ‘எனக்கு எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் ஏறாது' என, பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வோரையும் பார்க்கலாம். இரண்டில் எது சரி, எது தவறு? எந்த உணவு, யாருக்கு, எவ்வளவு, எப்போது..?

இப்படி உணவு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளிவளிப்பதே ‘ஆர்ட் ஆஃப் ஈட்டிங்' தொடரின் நோக்கம். ‘உண்ணும் கலை'யை உங்களுக்குக் கற்றுத் தரக் காத்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

உணவு தொடர்பான உங்களுடைய கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கக் காத்திருக்கிறார்.

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்.... ஆரம்பிக்கலாங்களா?