Published:Updated:

9 வகை சுண்டல்கள் செய்யும் பயிற்சி... அவள் விகடனின் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020

உங்கள் திட்டமிடலை மேலும் எளிதாக்கும் வகையில் அவள் விகடனின் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020 நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா ஆரம்பிக்கவுள்ளது. நவராத்திரி திருவிழா தொடங்கப் போகிறது என்றதுமே வீட்டில் உற்சாகம் களைகட்டிவிடும். கொலு வைப்பதற்கான ஆயத்தங்கள், புதுப்புது பொம்மைகளைத் தேடித் தேடி வாங்குவது, தினமும் பிரசாதமாக எந்த சுண்டல் வழங்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட ஆரம்பித்திருப்போம்.

சமையல் கலை நிபுணர் சரஸ்வதி ராமசாமி
சமையல் கலை நிபுணர் சரஸ்வதி ராமசாமி
நவராத்திரி 2020: அவள் விகடன் வழங்கும் கொலு பொம்மை தயாரிப்புப் பயிற்சி!

உங்கள் திட்டமிடலை மேலும் எளிதாக்கும் வகையில் அவள் விகடனின் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020 நடைபெறவுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி (திங்கள்கிழமை) கொலு பொம்மை தயாரிக்கும் பயிற்சி நடைபெறும். அக்டோபர் 13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 9 வகை சுண்டல்கள் தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. கோவையைச் சேர்ந்த மூத்த சமையல் கலை நிபுணர் சரஸ்வதி ராமசாமி நிகழ்வில் பங்கேற்று வாசகர்களுக்கு 9 வகை சுண்டல்களை செய்து காட்டவிருக்கிறார்.

எந்த நாளுக்கு என்ன சுண்டல் செய்ய வேண்டும், எளிதாக சுவையான சுண்டல்கள் தயாரிப்பது எப்படி, கொலுவின்போது சுண்டல் பிரசாதமாக வழங்குவதன் ஆன்மிகப் பின்னணி என்ன ஆகிய விஷயங்கள் பயிற்சியில் இடம்பெறும்.

சுண்டல்கள் செய்யும் பயிற்சி
சுண்டல்கள் செய்யும் பயிற்சி

இந்தக் கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி அக்டோபர் 13-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறும். பயிற்சியில் பங்கேற்ற இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு