Published:Updated:

2K கிட்ஸ்: புதுசா, தினுசா... வாழைப்பழ பரோட்டா

வாழைப்பழ பரோட்டா
பிரீமியம் ஸ்டோரி
வாழைப்பழ பரோட்டா

ஜெயபாண்டியம்மாள்.ஆ

2K கிட்ஸ்: புதுசா, தினுசா... வாழைப்பழ பரோட்டா

ஜெயபாண்டியம்மாள்.ஆ

Published:Updated:
வாழைப்பழ பரோட்டா
பிரீமியம் ஸ்டோரி
வாழைப்பழ பரோட்டா

பரோட்டா... உணவுப் பிரியர்கள் உசுர விடுற ஓர் அயிட்டம். அதுலயும், சாப்பாட்டு விஷயத்துல எப்பவுமே கொஞ்சம் தூக்கல் ருசியோட இருக்குற மதுரையில, பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, எண்ணெய் பரோட்டானு பரோட்டாவுல பல வகைகள்ல ஏற்கெனவே பட்டையக் கிளப்பிட்டு இருக்காய்ங்க. அதுல புது வரவு... வாழைப்பழ பரோட்டா!

‘என்னது வாழைப்பழத்துல பரோட்டாவா? அதெப்படி..?’னு தோணுதுல..?! மதுரை பக்கத்துல இருக்குற திருபுவனம், மதி ஹோட்ட லோட ஸ்பெஷல் அயிட்டமான இந்த வாழைப்பழ பரோட்டா பத்தி கேள்விப் பட்டப்போ, அதேதான் நமக்கும் தோணுச்சு. எப்படித்தான்யா அதைப் பண்ணுறீங்கனு ஓர் எட்டு போயி பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்புனோம்.

2K கிட்ஸ்: புதுசா, தினுசா... வாழைப்பழ பரோட்டா

‘5 மணிக்குத்தாம்மா பரோட்டா மாஸ்டர் வருவாரு... அப்புடி ஒக்காரு...’னு நமக்கு ஒரு சேர் கொடுத்தாங்க. வந்த களைப்புக்கு ஒரு ஜூஸ வாங்கிக் குடிச்சிட்டே வெயிட் பண்ணினோம். ‘அந்த மாவ எடு...’னு திடீர்னு ஒரு குரல் கேட்க, `ஆஹா! வந்துட்டாருய்யா பரோட்டர் மாஸ்டர் வந்துட்டாரு’னு ஆர்வ மாகி மாவு பிசையுற மேசைக்கு முன்னால ஆஜரானோம்.

வழக்கம் போல மைதா மாவுல சீனி, உப்பு, பால், முட்டை, தண்ணி, எண்ணெய்னு எல்லாம் சேர்த்துப் பிசைஞ்சதும், மாவு சும்மா பளபளனு, சாஃப்ட்டா ரெடி ஆகிருச்சு. அந்த மாவுல அப்புடி ஒரு குத்து, இப்புடி ஒரு குத்து, அங்கிட்டு ஒரு மடிப்பு, அப்புடியே இங்கிட்டு ஒரு மடிப்புனு மாத்தி மாத்தி மடிச்சு பிசைஞ் சாரு மாஸ்டரு. அதுக்கு அப்புறம்தான் நாம எதிர்பார்த்த அந்த க்ளைமாக்ஸ்.

பிசைஞ்சு வெச்ச மாவுல ஒரு உருண்டை எடுத்து, அதை பரோட்டாவுக்கு நல்லா தேய்ச்சு, பேப்பரு மாதிரி மெல்லிசா வீச்சுப் போட்டாரு மாஸ்டரு. அப்புறம், நாட்டு வாழைப்பழத்தை எடுத்து, துண்டு துண்டா வெட்டுனாரு. அந்தத் துண்டுகள, தேய்ச்சு வெச்சிருக்குற பரோட்டால அப்புடியே அங்கங்க வெச்சு, கொஞ்சம் சீனிய பரவலா தூவி, பரோட்டாவ நாலா, எட்டா நல்லா பொத்துனாப்ல மடிச்சுட்டாரு. அதை கல் அடுப்புல பக்குவமா வெச்சு, ரெண்டு கரண்டி நெய் ஊத்தி, பதமா வெகவெச்சு, திருப்பிப் போட்டு எடுத்தாரு. வாழைப்பழ பரோட்டா ரெடி... பாக்கும்போதே எப்போ சாப்புட லாம்னு நாக்கு வேர்த்துச்சு.

2K கிட்ஸ்: புதுசா, தினுசா... வாழைப்பழ பரோட்டா

‘அட இரு பாப்பா... பரோட்டாவ வாழை யிலையில வெச்சா அந்த மணமும் இறங்கி டேஸ்ட்டு தூக்கலாகும்’னு சொல்லிக்கிட்டே மாஸ்டரு அதைச் சுடச் சுட வாழையிலையில வெச்சு நம்ம கையில கொடுக்க, `இதுக்குத்தானே ஆசப்பட்டாய் பாலகுமரா'னு சட்டுனு வாங்கிக்கிட்டோம். ஒரு பீஸ் பிச்சு வாய்ல வெச்சா... ஆத்தி...

வெளிய மொறுமொறுப்பா, உள்ள சாஃப்டா, கொஞ்சம் இனிப்பா, நெய் வாசமா, கடிக்கும்போது வெந்துபோன வாழைப்பழம் வித்தியாச சுவையானு... அந்த ருசிய எப்படி முழுசா சொல்றதுனு தெரியலயே. இலங்கை, சிங்கப்பூர், நேபாளம்னு உலக நாடுகள்ல இருந்து உள்ளூர்வரை பரோட்டாவ எங்கெங் கேயோ செஞ்சாலும், இந்த வாழைப்பழ பரோட்டா புதுசுதான், தினுசுதான்!