Published:Updated:

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

நிரஞ்சனா சங்கரநாராயணன்

பிரீமியம் ஸ்டோரி
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

பெங்களுரு என்கிற பெயரைச் சொன்னாலே போதும்... நாவில் நீர் ஊறச் செய்யும் உணவுவகைகள் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும். பெங்களூருக்குப் பெருமை சேர்க்கும் தோசை வகைகள், ரவா இட்லி, கேசரி பாதி காராபாத் மீதி என ஜோடியாக வருகை தரும் சவ்சவ் பாத்... இப்படி இந்தச் சுவைப் பட்டியல் வெகுநீளம்.

மீல்ஸ் சாப்பிடுவதற்காகவே, மசால் தோசையை ருசிப்பதற்காகவே வெளிமாநிலங்களிலிருந்து வந்து க்யூவில் காத்திருக்கும் மக்களை இந்த மாநகரத்தின் குறிப்பிட்ட சில ஹோட்டல்களில் காண முடியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உணவுவகைகளை நம் வீட்டிலேயே எளிதாகச் செய்யும் வகையில் ஸ்டெப் பை ஸ்டெப் முறையில் அளிக்கிறார் பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் நிரஞ்சனா சங்கரநாராயணன். superduper-kitchen.com மற்றும் niranjanabt89 யூடியூப் சேனலை நிர்வகிக்கிற நிரஞ்சனாவின் ரெசிப்பிகள், அவற்றை உடனே செய்துபார்க்கத் தூண்டும்!

ஹனி கேக்

1900 ஆண்டுகளின் இறுதியில் பெங்களூரு நகரில் இருந்த ஐயங்கார் பேக்கரிகளில் முதன்முதலில் ஹனிகேக் அறிமுகம் செய்யப்பட்டது என்ற விவரம் மட்டுமே தெரிகிறது. ஆனால்... யாரால், எந்த பேக்கரியில் உருவானது என்ற விவரம் இதுவரை கிடைக்கவில்லை.

ஹனி கேக்
ஹனி கேக்
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

தேவையானவை:

வெனிலா கேக் செய்ய:

மைதா - 125 கிராம்

வெண்ணெய் - 60 கிராம்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

கன்டன்ஸ்டு மில்க் - 200 மில்லி

லெமன் ஃப்ளேவர் பானம் (ஸ்பிரைட் / 7 அப்) - 200 மில்லி

ஹனி சிரப் செய்ய:

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - கால் கப்

தேன் - 1/8 கப்

ஜாம் ஸ்ப்ரெட் செய்ய:

ஜாம் - கால் கப்

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

டெசிகேட்டட் கோகனட் - 2 டேபிள்ஸ்பூன்.

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் காரா பன்

பெங்களூரில் உள்ள பேக்கரிகளில் காரமான பன் கிடைக்கும். பெங்களூரில் நிலவும் மாலை நேர குளிருக்கு இதமான சிற்றுண்டி இது. 1969-ம் ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் வேர்க்கடலையைச் சரிபாதியாக உடைத்து மசாலா சேர்த்து பன்னின் உட்பகுதியில் ஸ்டஃபிங் செய்தனர்.

காங்கிரஸ் மசாலா, காங்கிரஸ் பேல் எனப் பல சிற்றுண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனாலும் காங்கிரஸ் காரா பன் மட்டுமே உணவுப் பிரியர்களின் வாய்க்கு இன்றும் ருசி சேர்த்து பிரசித்தி பெற்றுள்ளது.

காங்கிரஸ் காரா பன்
காங்கிரஸ் காரா பன்
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

தேவையானவை:

காரா பன் - ஒன்று

வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஸ்டஃபிங் செய்ய:

உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

காரா பன்னைக் குறுக்கே வெட்டி வெண்ணெய் தடவவும். முழுசாக வெட்டி விடக் கூடாது.

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

பாவ் பாஜி தோசை

தென்னிந்திய உணவு வகையான தோசை பல நாடுகளுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் சென்று வசித்த தென்னிந்தியர்களால் பல்வேறு கலாசார மாறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் நகரைச் சேர்ந்த தம்பதியால் பல புதிய பரிமாணத்துடன்

99 வெரைட்டி தோசைகள் (நூடுல்ஸ் சேர்ந்த சைனீஸ் தோசை மற்றும் மசாலா தோசை உட்பட) அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாவ் பாஜி தோசை. மகாராஷ்டிராவின் பிரபல உணவாகிய பாவ் பாஜியின் ஃப்யூஷன்தான் இந்த தோசை. இன்றுவரை தோசைப் பிரியர்களின் ஃபேவரைட்டாக உள்ளது இது.

பாவ் பாஜி தோசை
பாவ் பாஜி தோசை
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

தேவையானவை - தோசை மாவுக்கு:

இட்லி அரிசி - ஒன்றரை கப்

பச்சரிசி - அரை கப்

உளுந்து - கால் கப்

ஜவ்வரிசி - கால் கப்

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பாவ் பாஜி தோசை செய்ய:

தோசை மாவு - 2 கரண்டி

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஸ்டஃபிங் செய்ய:

நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன்

குடமிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்

துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பாவ் பாஜி மசாலா - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - காய்ந்த மிளகாய் சட்னி - அரை டீஸ்பூன்

துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

ரவா இட்லி

இரண்டாம் உலகப் போரின்போது அரிசி தட்டுப்பாடு நிலவியது. எனவே, அரிசிக்கு மாற்றாக ரவையை உபயோகித்து ரவா இட்லியாக அறிமுகம் செய்தது `எம்டிஆர்’ ஹோட்டல் நிர்வாகம்.

1924-ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல், இப்போதும் இயங்கி வருகிறது. இந்த இட்லிக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் காய்கறிகள் சேர்த்து, முந்திரியை அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதால் பலரும் இந்த இட்லியை விரும்புகின்றனர்.

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

தேவையானவை:

ரவை - ஒரு கப்

தயிர் - முக்கால் கப்

தண்ணீர் - தேவையான அளவு

கேரட் - ஒன்று (துருவவும்)

கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் / 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

ஃப்ரூட் சால்ட் - கால் டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 8

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

சந்திரஹாரா

`எம்டிஆர்’ ஹோட்டல் அறிமுகம் செய்த மற்றோர் உணவு இது. எம்டிஆர் நிர்வாகி பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றபோது, அந்நாட்டின் இனிப்பு ஒன்று அவரை மிகவும் கவர்ந்தது. அது பல லேயர்களைக்கொண்ட பேஸ்ட்ரி போல் இருந்தது. அதை பெங்களூரில் எம்டிஆர் ஹோட்டலில் `பிரெஞ்ச் ஸ்வீட்’ என்ற பெயரில் அறிமுகம் செய்தார். ஆனால், வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே, அப்போது மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படத்தின் பெயரான `சந்திர ஹாரா’ என்று பெயர் மாற்றி விற்பனை செய்தார். இப்போதும் இந்த இனிப்பு விற்கப்படுகிறது.மொறுமொறுவென இருக்கும் இந்த இனிப்பின் மேல் கோவா ரபடி அல்லது கோவா சிரப் ஊற்றிப் பரிமாறப்படுகிறது.

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி
பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

தேவையானவை:

மைதா - 125 கிராம்

ரவை - 25 கிராம்

பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கிராம்பு - 6

தண்ணீர் - தேவைக்கேற்ப

சர்க்கரைப் பாகு செய்ய:

சர்க்கரை - கால் கப்

தண்ணீர் - 1/8 கப் + தேவையான அளவு

பெங்களூரு ஸ்பெஷல் ரெசிப்பி

ரபடி செய்ய:

கோவா - 100 கிராம்

பால் - 250 மில்லி

சர்க்கரை - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

பாதாம், முந்திரி, பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு