Published:Updated:

பழ ஓடுகளில் ஜூஸ், ஸ்டீல் ஸ்ட்ரா... பெங்களூரைக் கலக்கும் ஜூஸ் கடை!

பெங்களூரு, மல்லேஷ்வரத்தில் இருக்கும் `ஈட் ராஜா’ கடைதான், அந்த வித்தியாசமான ஜூஸ் கடை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``எங்கள் ஜூஸ் கடையில் நாங்கள் ஜூஸை கப்களில் கொடுப்பதில்லை. பழங்களின் ஓடுகளிலேயே பரிமாறுகிறோம். `வாவ்' என்று கடைக்கு வரிசை வரிசையாக வருகிறார்கள் மக்கள். இதுதான் என் கடையின் அடையாளம், வெற்றி எல்லாம். இதற்காகத்தான் பெங்களூரு மக்கள் என் கடைக்கு `லைக்ஸ்' கொடுக்கிறார்கள்'' என்கிறார் ராஜா.

ஈட் ராஜா கடை
ஈட் ராஜா கடை
ஜவ்வு மிட்டாய், சீரக மிட்டாய்.... கோவை மக்களை ஈர்க்கும் `80-ஸ் & 90-ஸ் Kids' மிட்டாய்க் கடை!

பெங்களூரு, மல்லேஷ்வரத்தில் இருக்கும் `ஈட் ராஜா’ கடைதான், அந்த வித்தியாசமான ஜூஸ் கடை. ஜீரோ வேஸ்ட் ஜூஸ் கடையான இங்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டை 100% தவிர்த்து, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ரா, மரப் பொருள்கள், பழ ஓடு களன்கள் என்று பயன்படுத்துகிறார்கள். `என்னது... பழ ஓட்டில் ஜூஸ் குடிக்கிறதா?' என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு, இங்குள்ள புகைப்படங்களே பதில்.

தர்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா வரை பழங்களின் உள்சதையை எடுத்துவிட்டு, அதில் ஜூஸை நிரப்பிக் குடிக்கக் கொடுக்கிறார்கள். குறிப்பாக, கொய்யா ஷெல்லின் வாய் விளிம்பில் மிளகாய்ப்பொடி தூவி, அதில் நிரப்பித் தரும் சில்லி கோவா ஜூஸ் பலருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கிறது.

ஈட் ராஜா கடை
ஈட் ராஜா கடை

`ஈட் ராஜா’வின் உரிமையாளர் ராஜாவிடம் பேசினோம். ``1970-ல் இருந்து எங்கப்பா இங்கு ஜூஸ் கடை போட்டுவந்தார். அவர் இறந்தபோது, கடையைக் கவனிக்க யாருமில்லை என்பதால் ஏழு மாதங்கள் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்போது நான் ஆர்ஜேவாகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். பின்னர், 2019 மார்ச்சில் என் வேலையை விட்டுவிட்டு, ஜூஸ் கடையைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் கடைக்கு என்று ஒரு பிரத்யேக கான்செப்ட்டை உருவாக்க நினைத்தேன். முதல்கட்டமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களிக்கும் விதமாக பிளாஸ்டிக் கோலா பானங்கள் விற்பனையை நிறுத்தினேன். வியாபாரம் குறைய ஆரம்பித்தது. என்றாலும் தளராமல், பிளாஸ்டிக், பேப்பர் கோப்பைகளில் ஜூஸ் தருவதையும் நிறுத்தி, தர்பூசணி பழ ஓட்டில் ஜுஸ் பரிமாற ஆரம்பித்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பில், மஸ்க் மெலன், கொய்யா என்று ஷெல்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

ஈட் ராஜா கடை
ஈட் ராஜா கடை
``ஆகா, கடை தெரியாம சிக்கிட்டோமேடா”- சாப்பிடப் போன இடத்தில் சிக்கிய திருடன் #TamilnaduCrimeDiary

எந்த ஒரு புதிய முயற்சிக்கும் ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படித்தான், அப்போது என் கடையின் ஒருநாள் வருமானம் 50 ரூபாயைத் தாண்டவில்லை. என்றாலும், நோ பிளாஸ்டிக், ஜீரோ வேஸ்ட், பழ ஷெல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ரா, ஜூஸில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்ப்பது என்று என் கடையின் அடையாளத்தை மெருகேற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் மக்கள் என் கடைக்கு வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தனர். என் கடை இவ்வளவு பரவலாக மக்களைச் சென்றடைந்ததற்குக் காரணம், சமூக வலைதளங்கள்தான்" என்கிறார் ராஜா.

இங்கு வந்து ஜூஸ் குடிக்கும் மக்கள், அதைத் தவறாமல் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர ஆரம்பித்திருக்கின்றனர். மேலும், பல யூடியூப் சேனல்கள் ராஜாவின் கடைக்கு வந்து, இந்த வித்தியாசமான பழ ஓடு ஜூஸ்களை வீடியோ எடுத்துப் பதிவேற்ற, அந்த இலவச இணைய விளம்பரம் ராஜாவின் கடைக்கு அதிரிபுதிரி ஹிட் கொடுத்திருக்கிறது.

ஈட் ராஜா கடை
ஈட் ராஜா கடை

``எங்கள் கடையின் பழக் கழிவுகள் மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. மற்ற கழிவுகள் பயோ என்ஸைம்கள் ஆக்கப்பட்டு, கிளீனிங் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கிளாஸ் கழுவும் வேலை இல்லை என்பதால் தண்ணீரும் அநாவசியமாகச் செலவாவதில்லை. இங்கு வருபவர்கள் அனைவரும் ஒரு வித்தியாச அனுபவத்துக்காக வருகிறார்கள்'' என்கிறார் ராஜா.

இரவில் சூடாக கிடைக்கும் மதுரை அக்கா கடை இட்லி... உருவாவது இப்படித்தான்! #VikatanPhotoStory

இன்று நாள் ஒன்றுக்கு ரூபாய் 10,000 முதல் 12,000 வரை விற்பனையாகிறது ராஜாவின் கடையில். புதிய முயற்சிகள் ஆரம்பத்தில் மக்களைச் சென்றடைய காலம் எடுத்தாலும், நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது இவர் கதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு