Election bannerElection banner
Published:Updated:

ஆன்லைன் ஆர்டரில் நம்பர் ஒன்..! - மவுசு குறையாத பிரியாணி

பிரியாணி
பிரியாணி ( Pixabay )

வீட்டில் உப்புமா, கிச்சடி செய்தாலே 'எயிட் ஸ்டெப் பேக்' என்று ஓடி மறையும் 90'ஸ் கிட்ஸுக்கு மத்தியில், ஸ்விகியில் கிச்சடியின் விற்பனை 128 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

என்னதான் வித்தியாச உணவு வகைகள் கொட்டிக்கிடந்தாலும் 'பிரியாணி, பிரியாணிதான்யா' என்கிற மைண்டு வாய்ஸ் ஒவ்வொரு முறை பிரியாணி சாப்பிடும்போதும் மனதில் தோன்றும். 2019-ம் ஆண்டு ஆன்லைன் ஆப் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் முதலிடம் பிடித்ததும் 'பிரியாணி'தான்.

Swiggy
Swiggy

ஸ்விகி வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா முழுவதிலும் இந்த ஆண்டு மட்டும் நிமிடத்துக்கு சராசரியாக 95 பிரியாணி ஆர்டர்கள் பதிவாகியுள்ளன. அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் 4 ஆண்டுகளாக பிரியாணியே முதலிடத்தில் இருக்கிறது.

மேலும், இந்த ஆண்டின் விலையுயர்ந்த மற்றும் குறைந்த விலையுள்ள பிரியாணியின் லிஸ்ட்டையும் வெளியிட்டிருக்கிறது ஸ்விகி. அதில், 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட புனேவில் உள்ள சிக்கன் சாஜுக் பிரியாணிக்கு விலையுயர்ந்த பிரியாணி எனவும், 19 ரூபாய்க்கு விற்கப்படும் மும்பையின் சால் தன்னோ தவா சைவ பிரியாணிக்கு மிகவும் குறைந்த விலை பிரியாணி எனவும் மகுடம் சூட்டியுள்ளனர்.

Gulab jamun
Gulab jamun
Pixabay

டெஸர்ட் வரிசையில் இந்த ஆண்டு 17,69,399 ஆர்டர்களைக் கொண்டு குலாப் ஜாமூன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 11,94,732 ஆர்டர்களுடன் ஃபலூடா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து டெத் பை சாக்லேட், தேங்காய் ஐஸ்க்ரீம், திராமிசு மற்றும் கேசரி ஹல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

வீட்டில் உப்புமா, கிச்சடி செய்தாலே 'எயிட் ஸ்டெப் பேக்' என்று ஓடி மறையும் 90'ஸ் கிட்ஸுக்கு மத்தியில், ஸ்விகியில் கிச்சடியின் விற்பனை 128 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை நவராத்திரி காலகட்டத்தில் விற்பனையானவையாம்.

Fried Rice
Fried Rice
5 பைசா, கொலை, விபத்து, மந்தி, 40 ஆயிரம் ரூபாய்... 2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

மேலும், 2019-ம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்விகியின் டாப் 10 உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தையும் மசாலா தோசை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. பனீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைடு ரைஸ், மட்டன் பிரியாணி, சிக்கன் தம் பிரியாணி, வெஜிடபுள் ஃபிரைடு ரைஸ், வெஜிடபுள் பிரியாணி, தந்தூரி சிக்கன் மற்றும் தால் மக்கானி ஆகிய உணவுகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

விதவிதமான உணவு வகைகளைத் தேடித்தேடி சாப்பிடும் 'Foodie' என்ற கூட்டம் தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வந்தாலும், பிரியாணியின் மவுசு குறையவே இல்லை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு