Published:Updated:

2K kids: பிரவுனி சண்டே... குட்டி கிளாஸ்ல ஹாட் சாக்லேட்... வேற லெவல்!

ஹாட் சாக்லேட்
பிரீமியம் ஸ்டோரி
ஹாட் சாக்லேட்

தெ.சுகி

2K kids: பிரவுனி சண்டே... குட்டி கிளாஸ்ல ஹாட் சாக்லேட்... வேற லெவல்!

தெ.சுகி

Published:Updated:
ஹாட் சாக்லேட்
பிரீமியம் ஸ்டோரி
ஹாட் சாக்லேட்

‘திருநெல்வேலியிலயும் இப்போ ‘த சாக்லேட் ரூம்’ ஃப்ரான்சைஸ் ஆரம்பிச்சிருக் காங்க. நீ இன்னுமா போகலை...’னு ஃபிரெண்ட்ஸ் துக்கம் விசாரிக்க, ரெடி ஜூட். ‘அட நம்மூர்ல இப்படி ஒரு கடையா...’னு நினைக்கிற அளவுக்கு ஆம்பி யன்ஸ்... அதாவது, அந்தச் சூழல் அவ்ளோ இளமையா, அருமையா இருந்தது. ஸ்கூல், காலேஜ் பசங்கதான் இருப்பாங்கனு பார்த்தா, ‘ஹே... நாங்களும் யூத் தான்’னு 30+, 40+னு பலரையும் பார்க்க முடிஞ்சது.

பேருக்கு ஏத்த மாதிரி சாக்லேட் லவ்வர்ஸுக்குப் பிடிச்ச மெனு, செல்ஃபி எடுக்க செம பேக்டிராப், நண்பர்கள், குடும்பங்கள்னு எல்லா தரப்பும் நேரம் செலவழிக்க விசாலமான இடம்.

2K kids: பிரவுனி சண்டே... குட்டி கிளாஸ்ல ஹாட் சாக்லேட்... வேற லெவல்!

சிறந்த கஸ்டமர் கேர், சுகாதாரம், கசிஞ்சுட்டே இருக்குற இசை தர்ற குட் ஃபீல்னு ‘நல்லாயிருக்குல...’னு சொல்ல வெச் சாலும், விலை எப்படி இருக்கும்னு ஒரு கேள்வி வந்து விழுந்தது. மெனுவை பார்த்தப்போ ரீஸனபிளாவே தெரிஞ்சது.

‘சரி வந்த வேலையை மறந்துடாத’னு என் மைண்ட் வாய்ஸ் சொல்ல, ‘ஆங்... ஃபுட் ரெவ்யூ பண்ணனும்ல...’னு எனக்கு நானே ஞாபகப்படுத்திட்டு ஆர்டர் பண்ணின அயிட்டம்... பிரவுனி சண்டே (Brownie Sundae). அது நம்ம டேபிளுக்கு வந்து சேர்ந்தப்போ, அந்த ப்ளேட்டிங் (Plating) செமையா இருந்தது. பார்த்தவுடனேயே கண்ணால் கொஞ்சம் சாப்பிட்ட ஃபீல்.

பிரவுனி சண்டே இதுவரை சாப்பிடாத வங்களுக்கு அதை பத்தி சொல்ல வேண்டாமா? பிரவுனி கேக், அதுக்கு மேல ஐஸ்க்ரீம், அதுக்கு மேல நட்ஸ் தூவல், அப்புறம் டார்க் சாக் லேட்டை அப்டியே அது மேல வழியவிட்டு...

சொல்லும்போதே உங்களுக்கும் சாப் பிடணும்போல தோணுதுல... விலையைச் சொன்னாலும் உங்களுக்குப் பிடிக்கும்... வெறும் 200 ரூபாய்தான்.

ஸ்பூனை எடுத்து ஐஸ்க்ரீமோட பிரவுனிய சேர்த்துச் சாப்பிடும்போது... யம்மி! ஹாட் சாக்லெட்டை ஒரு குட்டி கிளாஸ்ல வேற தனியா கொடுத்திருந்தாங்க. கூலான ஐஸ் க்ரீம்ல அந்த ஹாட் சாக்லேட்டை மிக்ஸ் பண்ணி சாப்பிட்ட காம்பினேஷன் இருக்கே... வேற லெவல். சாஃப்ட் கேக், ஸ்மூத் ஐஸ்க்ரீம்னு, பிரவுனி உள்ள இருந்த நட்ஸ் ஐஸ்க்ரீமுக்கும் கேக்குக்கும் கொடுத்த எக்ஸ்ட்ரா டேஸ்ட்லாம்... பேசாம சொத்தையே அந்த பிரவுனிக்கு எழுதி வெச்சுடலாம்னு நினைக்க வெச்சது.

2K kids: பிரவுனி சண்டே... குட்டி கிளாஸ்ல ஹாட் சாக்லேட்... வேற லெவல்!

‘என்னது... யாரு சொத்தை யாரு எழுதி வைக்குறது...’னு எங்க பாட்டி கத்துறது உங்களுக்கும் கேட்குதா? பாட்டியை விடுங்க. ஃபுட்டி பார்டிங்க மிஸ் பண்ணக்கூடாத இடம்.

நெல்லை மக்களே... நோட் பண்ணிக் கோங்க!