Published:Updated:

``சைவ உணவுதான் என் வாழ்க்கையைச் சிறப்பாக்கியது"- வீகனாக மாறிய கேப்டன் கோலி ட்வீட்!

கடந்த ஆண்டு வீகனாக மாறிய கேப்டன் கோலி, தன்னுடைய உடல்நலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், தொடர்ந்து ஃபிட்டாக இருந்து வருகிறார்.

கோலி
கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் கட்டுக்கோப்பான ஃபிட்னெஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. உடல்நலத்தில் பெரிதும் அக்கறை காட்டும் விராட், சைவ உணவு பழக்கத்துக்கு மாறிய பிறகு தனது வாழ்க்கை சிறப்பாக மாறிவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

Virat Kohli
Virat Kohli
AP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-0 என வொயிட் வாஷ் செய்தது கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு இப்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் 'தி கேம் சேஞ்சர்ஸ்' ஆவணப்படத்தைக் கண்டு ரசித்துள்ள கேப்டன் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் அதைப் பகிர்ந்து கொண்டார். உலகெங்கிலும் உள்ள பிரபல விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் சைவ உணவுப் பழக்கத்தைப் பற்றிய இந்த ஆவணப்படத்தைப் புகழ்ந்த கோலி, "சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிய பிறகு, எனது வாழ்க்கையை இவ்வளவு சிறப்பாக இதற்கு முன் உணர்ந்ததில்லை" என்று ட்வீட் செய்துள்ளார். கடந்த ஆண்டு வீகனாக மாறிய கேப்டன் கோலி, தன்னுடைய உடல்நலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், தொடர்ந்து ஃபிட்டாக இருந்து வருகிறார்

கோலி மட்டுமல்லாது டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஃபார்முலா 1 சூப்பர் ஸ்டார் லூயிஸ் ஹாமில்டன் ஆகியோரும் `வீகன் க்ளப் ஆஃப் அத்லெட்ஸ்' பட்டியலில் உள்ளனர்.

கோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு! #IndVsSA