Published:Updated:

``தென்னிந்திய உணவுகளை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பதே இலக்கு!" - செஃப் தாமு

ஓர் உணவின் தரம், அதைத் தயாரிக்கும் செஃப்-ன் தரத்தை நிர்ணயிக்கிறது. அதேபோல அந்த உணவின் தரமே நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

SICA
SICA

தென்னிந்திய செஃப் சங்கத்தின் (South India Chefs Association - SICA) பொதுக் கூட்டம் மற்றும் தலைவர் தேர்தல், ஜூலை 30-ம் தேதி சென்னை Grand by GRT உணவகத்தில் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில், தற்போது செலிபிரிட்டி செஃப் தாமு புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்னை உணவகங்களில் பணிபுரியும் பல முன்னணி செஃப்கள் இதில் கலந்துகொண்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த மிகவும் உற்சாகமாகக் காத்திருந்தனர்.

புதுக்கோட்டை முட்டை மாஸ், தஞ்சாவூர் மட்டன் கேசரி.. தமிழகத்தின் சில சிக்னேச்சர் உணவு வகைகள்!
Chef Damu
Chef Damu

1998-ம் ஆண்டு, சென்னையின் புகழ்பெற்ற உணவகங்களில் பணிபுரிந்த செஃப்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடங்கப்பட்டதுதான், SICA. இது, பல்வேறு பின்னணி மற்றும் தனித்துவமான சமையல் நிபுணர்களின் தன்னார்வம் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்பு. இது, சமையல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுக்கும் பல்வேறு விதமான உதவிகள், சமையற்கலையை மேம்படுத்துதல், சமையல் வர்த்தகத்தின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறது.

இந்நிகழ்ச்சியில், புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செஃப் தாமு, "புதிய சமையல் கலைஞர்கள் மற்றும் கேட்டரிங் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களின் திறமையை மேம்படுத்துவதற்கும் SICA மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், தகுதியற்றவர்களை நீக்குவதற்கும் இந்த அமைப்பு பெரிதும் உதவும். மேலும், தென்னிந்திய உணவு வகைகளை உலகம் முழுவதும் கொண்டுசேர்ப்பதே எங்களின் இலக்கு. அரசு சுற்றுலாத்துறை சார்பில், சமையல் கலை வல்லுநர்கள், தமிழகமெங்கும் இருக்கும் உணவகங்களில் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

Chef Seetharam Prasad
Chef Seetharam Prasad

SICA-வின் பொதுச்செயலாளர் சீதாராம் பிரசாத், "சமையலறையை நாங்கள் ஒரு கோயிலைப் போலத்தான் பார்க்கிறோம். சுத்தமான அறையில் தரமான மூலப் பொருள்களைத் தேர்வுசெய்து, சுவையான உணவைத் தயார் செய்கிறோம். இவற்றையெல்லாம்விட, செய்த உணவைப் பார்த்துப்பார்த்து அலங்கரிப்போம். முதலில், கண்களுக்கு விருந்தளிப்பதுதான் எங்களின் இலக்கு. செஃப் தாமு, நம் நாட்டு பாரம்பர்ய உணவு வகைகளை உலகமெங்கிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஏற்கெனவே களமிறங்கிவிட்டார். SICA-வின் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்ட ஒரே செலிபிரிட்டி, செஃப் தாமு மட்டும்தான். அவரோடு இணைந்து நாங்கள் எல்லோரும் செஃப் சமூக வளர்ச்சிக்கு உழைக்கத் தயாராக இருக்கிறோம். வரும் காலத்தில், ஏராளமான சமூக நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம்" என்றார் சீதாராம்.

இவரைத் தொடர்ந்து, SICA நிர்வாகக் குழு உறுப்பினரான செஃப் ஹிமான்ஷு ஷேகர், 'கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால்தான் அவர் தாயை உருவாக்கினார்' என்ற வாசகம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், 'கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதனால், செஃப்களை உருவாக்கினார்' என்றுதான் நான் சொல்லுவேன். அதுதான் எல்லோர் வாழ்விலும் தற்போது நடந்துகொண்டும் இருக்கிறது. இந்த அவசர உலகத்தில், வீட்டு சமையலறைக்கு அவ்வளவாக வேலை இருப்பதில்லை. நாள் முழுவதும் உழைத்துக் களைத்து வருபவர்களுக்கு, இறுதியில் ஒரு செஃப்தான் தேவைப்படுகிறார்.

SICA members
SICA members
ஸ்விக்கியில் 17,962 முறை ஆர்டர் செய்த பெங்களூரு வாடிக்கையாளர்! #5YearsOfSwiggy

ஓர் உணவின் தரம், அதைத் தயாரிக்கும் செஃப்-ன் தரத்தை நிர்ணயிக்கிறது. அதேபோல அந்த உணவின் தரமே நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது. இதுவே நம் உடல் ஆரோக்கியத்திற்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே, மற்றவர்களின் ஆரோக்கிய உடலுக்கு ஓர் செஃப்-ன் பொறுப்பு மிகவும் முக்கியம். மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில்தான் ஓர் செஃப்-ன் சந்தோஷமும் இருக்கிறது" என்று ஹிமான்ஷு பேசிமுடித்தபோது கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது.

மாலைநேர உணவோடு இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.