Published:Updated:

குட்டீஸே செஞ்சு அசத்தலாம்..! - மட்டர் பனீர் மசாலா ரெசிபி!

மட்டர் பனீர் மசாலா
மட்டர் பனீர் மசாலா

சூப்பர் டூப்பர் யம்மி ரெசிபி பரிந்துரைக்கிறார், சுட்டி செஃப் வினுஷா.

விடுமுறை தினங்களில், குழந்தைக்கு யம்மியாக சமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும். அப்படியானவர்களுக்காக, சூப்பர் டூப்பர் யம்மி ரெசிபி ஒன்றை பரிந்துரைக்கிறார் சுட்டி செஃப் வினுஷா!

வினுஷா
வினுஷா

``இந்த ரெசிபியை ட்ரை செய்யப்போகும் பேரண்ட்ஸுக்கு, ஒரு எக்ஸ்ட்ரா டாஸ்க். இந்த ரெசிபியை நீங்க மட்டும் தனியா தயார் செய்ய வேண்டாம். நான் எப்படி எங்க அம்மாவோட மேற்பார்வையில இதைச் செய்றனோ... அதேபோல உங்களோட மேற்பார்வையில, உங்க வீட்டுச் சுட்டியையும் இதுல ஈடுபடுத்திக்கோங்க! நாம செய்யப்போற டிஷ் பேரு, மட்டர் பனீர் மசாலா!

தேவையான பொருள்கள்
தேவையான பொருள்கள்

தேவையானவை :

தக்காளி - 1

மஞ்சள்தூள் - தேவையான அளவு

மிளகாய்தூள் - தேவையான அளவு

வெங்காயம் - 1

பனீர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 1

இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

பச்சை பட்டாணி - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

சுட்டி செஃப் வினுஷாவின் அசத்தல் `கப் கேக்' ரெசிபி!

ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு பனீரை வறுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பாதியை எடுத்து, அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

மட்டர் பனீர் மசாலா
மட்டர் பனீர் மசாலா

கடாயில் மீதமுள்ள வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்த பின்னர், வறுத்து வைத்துள்ள பனீரையும், பச்சைப் பட்டாணியையும் சேர்த்து மூடி வைக்கவும். 2 நிமிடங்களில் மட்டர் பனீர் மசாலா ரெடி!

இந்த பனீர் மசாலாவுக்கு, சப்பாத்திதான் பெஸ்ட் காம்பினேஷன். உங்க வீட்டுக் குட்டீஸோடு சேர்ந்து, இதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு, டேஸ்ட் எப்படி வந்திருக்குன்னு ரிவ்யூ சொல்லுங்க...!"
அடுத்த கட்டுரைக்கு