Published:Updated:

கிலோமீட்டர் கணக்கில் மயக்கும் ருசி... சென்னை தோழிகளின் நெதர்லாந்து உணவகம்!

- ஆனந்த்

பிரீமியம் ஸ்டோரி

‘இல்லத்தரசிகள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும்!” என நிரூபித்திருக் கிறார்கள் நெதர் லாந்தில் வசிக்கும் தோழிகள் மூவர். சென்னையைச் சேர்ந்த நிஷா, ஜெயா, சுவர்சலா ஆகியோரின் கணவர்கள், நெதர்லாந்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர்கள். அதனால், திருமணத்துக்குப் பிறகு நிஷா, ஜெயா, சுவர்சலா மூவரும் நெதர்லாந்தில் குடியேறினார்கள். அப்படித்தான் இவர் களுக்குள் நட்பு மலர்ந்தது.

நெதர்லாந்து குளிர்பிரதேச நாடு. அங்கு வசிக்கும் பெரும்பாலானோரின் காலை உணவு, பிரெட் மட்டும்தான். அங்கே நம்மூர் இட்லி, தோசை உணவுகள் கிடைப்பது மிக அரிது. சமையலில் ஆர்வம்கொண்ட தோழிகள் மூவரின் பேச்சில் உணவு தொடர்பான விஷயங்களே அதிகம் இடம்பிடித்திருக்கின்றன. அந்த அரட்டையிலிருந்தே உதித்திருக்கிறது, ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்கும் சூப்பர் ஐடியா.

அந்த நாட்டில் உத்ரெக்ட் நகரிலுள்ள பிரபலமான சந்தையில் மூன்று ஆண்டுகளாக இயங்கும் இவர்களின் உணவகம், இந்தியர்கள் மட்டுமன்றி அந்த நாட்டினரிடமும் வரவேற் பைப் பெற்றிருக்கிறது. இல்லத்தரசிகள் தொழில்முனைவோர்களாக மாறிய கதையை, வீடியோகாலில் இணைந்த மூவரும் உற்சாகத் துடன் பகிர்ந்தனர்.

சுவர்சலா, நிஷா, ஜெயா,
சுவர்சலா, நிஷா, ஜெயா,

“இந்த நாட்டுல வசிக்குற இந்தியர்கள் பலரும் நம்மூர் உணவு கிடைச்சா நல்லா யிருக்கும்னு சொல்லுவாங்க. அந்த ஏக்கத்தை ‘நாமே தீர்க்கலாமே’ன்னு தோணுச்சு. இந்த நாட்டுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி யில சந்தை நடக்கும். அங்கேயே உணவகம் தொடங்கலாம்னு முடிவெடுத்தோம். விண்ணப்பிக்குற எல்லோருக்குமே கடை நடத்த அனுமதி கிடைச்சுடாது. இன்டர்வியூல தேர்வான பிறகு, நாங்க சமைச்ச உணவைச் சாப்பிட்டுப் பார்த்துட்டுத்தான் உள்ளூர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தாங்க. கடை நடத்த வாடகை கட்டணும். மத்த எல்லாச் சந்தைகளுமே வாரத்துல ஒருநாள் மட்டும்தான் இயங்கும். வாரத்துல மூணு நாள்கள் இயங்குற உத்ரெக்ட் சந்தையை நாங்க தேர்வு செஞ்சோம்...” நல்ல தொடக்கத்துக்கான புள்ளியைப் பகிர்ந்த நிஷா, சென்னையில் சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இட்லி, பல வகையான தோசை, பொங்கல், டீ, காபி, சமோசா, கேசரி, வடை, பூரி, சப்பாத்தி, கிச்சடி, வெஜ் பிரியாணி போன்ற உணவுகளை மட்டுமே விற்பனை செய்கின் றனர். ‘நம்மூர் உணவை விற்குறாங்க; வித்தி யாசமான உணவு கிடைக்குது’ என்ற வாய் வழி விளம்பரங்களே, இவர்களின் உணவகத் துக்கு வரவேற்பைக் கூட்டியிருக்கிறது.

“வருஷத்துல பெரும்பாலான மாசங்கள் இங்கே குளிர் அதிகமா இருக்கும். அதனால, வீட்டுல ஹீட்டர் மூலமா ஓர் அறையில வெப்பநிலையை அதிகப்படுத்தித்தான் மாவைப் புளிக்க வைக்குறோம். இந்த முறையிலேயே, மாவு புளிக்க ஒன்றரை நாள் ஆகுது. இப்போ வாரத்துல ரெண்டு நாள்கள் தான் உணவகத்தை நடத்துறோம். தோசை, காபி தவிர்த்து மத்த உணவு களைச் சுடச்சுட வீட்டுல சமைச்சு எங்கள்ல ஒருத்தர் அனுப்பி வைக்க, மத்த ரெண்டு பேர் கடையைக் கவனிச்சுப்போம்” என்கிற ஜெயா, உணவக வளர்ச்சி குறித்தும் பேசினார்.

கிலோமீட்டர் கணக்கில் மயக்கும் ருசி... சென்னை தோழிகளின் நெதர்லாந்து உணவகம்!

“இந்த நாட்டுல சட்டத்திட்டங்கள் கடுமையா இருக்கும். உணவகத்துல தரம் சரியில்லைனு புகார் வந்தா, கடை நடத்துற அனுமதியை ரத்து செய்திடுவாங்க. அத னால, உணவுகளைத் தரமா கொடுக்குறதோடு, சாமானியர்களுக்கும் கட்டுப்படியாகுற விலை, கரும்புச்சக்கையில தயாரிக்கப்பட்ட எளிதா மட்கக்கூடிய தட்டுகள்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யுறோம்” என்கிறார் பெருமிதத்துடன்.

“நூறு கிலோமீட்டர் தாண்டியெல்லாம் இந்தியர்கள் பலர் ரெகுலரா எங்க கடைக்கு வருவாங்க. மொழி பேதம் கடந்து மக்களையும் மனங்களையும் இணைக்குறது தான் எங்க நோக்கம். அதனால, அதிக பணம் சம்பாதிக்குறதுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதில்ல. ஒவ்வொருத்தரோட கணவரும் முழு சப்போர்ட் பண்றதால, நாங்க அடுத்ததடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்ந்துட்டே இருக்கோம்” என்னும் சுவர் சலாவை இடைமறிக்கும் நிஷாவும் ஜெயா வும், “சீக்கிரமே ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கப் போறோம்” என்று அடுத்த ப்ளான் சொல்லி முடித்தனர்.

****

நெதர்லாந்து ஆச்சர்யங்கள்!

* நெதர்லாந்து மக்களின் வாழ்க்கைமுறை மிக எளிமையானது. தினமும் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் அந்த நாட்டுப் பிரதமர், மக்களுடன் வரிசையில் நின்று கடைவீதியில் பொருள்கள் வாங்குகிறார்.

* நெதர்லாந்தில் விலைவாசி குறைவுதான். தற்சமயம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.8 யூரோ மட்டுமே. ஒரு கிலோ தக்காளியின் விலை 2 யூரோ. (ஒரு யூரோவுக்கு நிகரான இந்திய மதிப்பு 87 ரூபாய்)

* சைக்கிள் பயணம்தான் அங்கு அதிகம். குறிப் பிட்ட தூரம் சைக்கிளில் சென்ற பின்னர், அதை மடக்கி வைத்து, ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தைத்தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

* தூய்மை, சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த நாட்டில், இயற்கையைச் சேதப்படுத்தி எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படுவதில்லை. பொது இடங்களில் எச்சில் துப்பாமலும், குப்பை போடாமலும் பொதுமக்களும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கின்றனர். விதிகளை மீறுவோரை, கண்காணிப்பு கேமராக்களால் உடனடியாகக் கண்டுபிடித்து, அதிகபட்ச அபராதமும் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

* அரசு மருத்துவமனைகள் மட்டுமே இருக்கும் அங்கு மருத்துவச் சேவைகள் கட்டணமின்றி எல்லோருக்கும் தரமாகக் கிடைக்கின்றன. 18 வயதுக்கு உட்பட்டோருக்கு மருத்துவ வசதிகள் முற்றிலும் இலவசம். 18 வயதுக்கு மேற்பட்டோர், மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுப்பது கட்டாயம். பள்ளிக்கல்வி இலவசம். கல்லூரிக் கட்டணமும் குறைவுதான். 18 வயதைப் பூர்த்தி செய்யும்வரை, பெற்றோரின் ஊதியத்தைப் பொறுத்து, நெதர்லாந்து குடிமக்களின் பிள்ளைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது.

* லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அரிதாக நடக்கும் அங்கு, குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாகவே நடப்பதால், சிறைச்சாலைகள் பலவும் வெறிச்சோடி இருக்கின்றனவாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு