Published:Updated:

சில்லி பனீர், மா கி தால்... `எங்கள் மெனு... உங்கள் சாய்ஸ்!’ #VikatanInteractive

'எந்த ஹோட்டல்ல இருந்தும்மா வாங்கினே?' என்று பிள்ளைகள் கேட்டால், 'என்னோட சூப்பர் கிச்சன்ல இருந்து' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க...

உணவுகள்
உணவுகள் ( Freepik )

விதவிதமான ஹோட்டல் உணவுகளுக்கு நாக்கு பரபரத்தாலும், அவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு இன்றைக்குப் பல பேருக்கு வர ஆரம்பித்திருக்கிறது.

janaki Asariya
janaki Asariya

ஆனால், காலையில் சௌத் இந்தியன், மதியம் நார்த் இந்தியன், ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு லைட்டா சைனீஸ், ரசத்துக்குப் பதிலாக வாயில் நுழையாத பெயர் கொண்ட ஒரு சூப் என்று குடும்பத்தின் வெரைட்டி விருப்பங்களுக்கு அம்மாக்களால்தான் ஈடுகொடுக்க முடிவதில்லை.

இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்காகவே ஜானகி அஸாரியா தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், பக்கத்து நாட்டு சீன உணவுகள் எனச் சிலவற்றை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதுல உங்களுக்குப் பிடிச்சத டிரை பண்ணுங்க. 'எந்த ஹோட்டல்ல இருந்தும்மா வாங்கினே?' என்று பிள்ளைகள் கேட்டால், 'என்னோட சூப்பர் கிச்சன்ல இருந்து' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க...