செட்டிநாடு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளைப் பார்க்கும்போது, வெஜிடேரியனில் இத்தனை வகைகளா என்று நம்மை வியக்க வைக்கும். தேன்குழல், அதிரசம், கைமுறுக்கு, வெள்ளைப் பணியாரம், மசாலா பணியாரம், கருப்பட்டி பணியாரம், பால் பணியாரம், மணகோலம், மாவு உருண்டை, மகிழம்பூ முறுக்கு, சீப்பு சீடை, உப்பு சீடை, சீயம், ஆப்பம், உப்புக் கொழுக்கட்டை, கந்தரப்பம், உளுந்து களி, கல்கண்டு வடை, உக்காரை, மாவு உருண்டை, கும்மாயம், மொச்சைக்காய் குழம்பு, கொண்டைக்கடலை குழம்பு, வரமிளகாய் துவையல், ரோசாப்பூ துவையல், டாங்கர், சும்மா குழம்பு, வெண்டைக்காய் மண்டி, திரக்கல்… இப்படி செட்டிநாட்டின் மணம் வீசும் உணவுகளின் பட்டியல் மிக மிக நீளமானது.
செட்டிநாட்டு உணவு வகைகள் சுவையானவை. நம் உடலுக்கு வலிமை சேர்ப்பவை. எந்தக் கெடுதலும் செய்யாதவை. தங்கள் வீடுகளில் சிக்கனமாக இருக்கும் நகரத்தார்கள், வீட்டுக்கு வரும் விருந்தினரை விருந்து உபசரித்து திணற வைப்பார்கள்,
செட்டிநாட்டு உணவு வகைகள் சுவையானவை. நம் உடலுக்கு வலிமை சேர்ப்பவை. எந்தக் கெடுதலும் செய்யாதவை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படிப்பட்ட பெருமை மிக்க செட்டிநாடு உணவுகளில் கிளாஸிக் தன்மை வாய்ந்தவற்றை உங்களுக்காகப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அந்த வரிசையில் இதோ... இடை பலகாரம் என்று சொல்லக்கூடிய மாலை நேர பலகாரமான தவலை வடை.
தவலை வடை
தேவையானவை
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
எல்லா பருப்புகளையும் அரிசியையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாயையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டி மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.