Published:Updated:

தேங்காய் பராத்தாவும் கிரீன்பீஸ் மசாலாவும் | விருந்தோம்பல்

Coconut Paratha & Green Peas Masala

நான் பரிசை மறைத்து வைத்து நடந்து வரும்போது, ’திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பதுபோலவே அப்பா கேட்டார்கள்.

தேங்காய் பராத்தாவும் கிரீன்பீஸ் மசாலாவும் | விருந்தோம்பல்

நான் பரிசை மறைத்து வைத்து நடந்து வரும்போது, ’திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பதுபோலவே அப்பா கேட்டார்கள்.

Published:Updated:
Coconut Paratha & Green Peas Masala

2003-ம் ஆண்டில் திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த இன்டர் காலேஜ் சமையல் போட்டியில் பங்கேற்றதுதான் என் முதல் சமையல் போட்டி அனுபவம். அதுவும் தனியாக... அதற்கு முன் இதுபோல வெளியிடங்களில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்ற அனுபவம் கிடையாது. கல்லூரியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி காவேரி காலேஜில் ’நளபாகம்’ என்ற போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பெயர் பட்டியலை கேட்டார்கள். முதலில் நான் யோசித்தேன். ஆனால், நண்பர்களும் ஆசிரியர்களும் என்னை அவசியம் பங்கு பெற வேண்டும் என்று சொல்லி பெயர் கொடுத்து விட்டார்கள். அதற்கு முன்பு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிக்கு குறிப்புகள் எழுதியது, திருச்சி விவித் பாரதி பண்பலையில் தொலைபேசியில் குறிப்புகள் கூறியது போன்ற அனுபவங்கள்தாம் உண்டு. அதனால், சமையல் போட்டியில் எப்படிப் பங்களிப்பது என்கிற தயக்கம் இருந்தது. அதுவும் வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டிக்கு புதன்கிழமை மாலைதான் சொன்னார்கள். பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருவார்களே... என்ன மாதிரி செய்யலாம் என்று யோசனை சொல்வதற்கும் யாருமே இல்லை. கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் சென்றதும் எழுதி வைத்துள்ள சமையல் டைரியை எடுத்து வேகமாக பார்த்தேன். எனக்கு அவர்கள் கொடுத்த தலைப்பு கோதுமை சார்ந்த உணவுகள். சரி ஏதாவது பராத்தாவும் ஒரு கிரேவியும் செய்யலாம் என்று யோசித்தேன்.

வெள்ளிக்கிழமை காலையில் தயார் செய்ய ஆரம்பித்தேன். அம்மாவுக்கு ஒரு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்ததால் எட்டு மாதங்களாக நடக்க முடியாமல் இருந்தார்கள். அதனால் அவர்கள் உதவியும் கிடைக்காத சூழ்நிலை.

முதலில் தேங்காய் பராத்தா செய்ய‌ மாவை பிசைந்து வைத்துவிட்டு, பின்னர் பட்டாணி மசாலாவை தயார் செய்து முடித்தேன். செய்யும்போது நான் எதையும் ருசி பார்க்கவில்லை. வழக்கம்போல் தங்கைதான் ருசி பார்த்துவிட்டு, ’சூப்பரா இருக்கு... பயப்படாம இரு’ என்று கூறினாள்.

பின் தேங்காய் பராத்தாவையும் செய்து முடித்தேன். போட்டியில் டிஸ்ப்ளே செய்வதற்கு ஏற்ற ஸ்பெஷல் பொருட்கள் எல்லாம் ஏதும் இல்லை. வீட்டில் இருக்கும் தட்டுகள், அலங்கரிக்க இரண்டு கேரட், ஒரு வெங்காயம் சிறிது கொத்தமல்லி, ஸ்பூன் மற்றும் ஒரு கத்தியை டப்பாவில் வைத்துக் கொண்டு அப்பாவும் நானும் கிளம்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலரும் புதுவிதமான டிஷ்களை விதவிதமாக அலங்கரித்து வைத்திருந்தனர். நானோ தேங்காய் பராத்தாவை ஒரு தட்டில் வைத்து, கேரட்டை ஸ்டார் வடிவில் நறுக்கி, பராத்தாவை சுற்றி ஒரு டிஸைன் மாதிரி அலங்கரித்து சமாளித்தேன்.

பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். பங்கு பெறுபவர்களை மட்டும் அந்தந்த பிரிவில் சென்று தாங்கள் செய்த டிஷ்ஷை மேஜையில் வைத்து அதற்கான குறிப்பினையும் அருகே வைக்க சொன்னார்கள். அங்கு பங்குபெற்றவர்களில் பெரும்பாலானோர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது ஹோம் சைன்ஸ் படிக்கும் மாணவர்கள். பலரும் புதுவிதமான டிஷ்களை விதவிதமாக அலங்கரித்து வைத்திருந்தனர். நானோ தேங்காய் பராத்தாவை ஒரு தட்டில் வைத்து, கேரட்டை ஸ்டார் வடிவில் நறுக்கி, பராத்தாவை சுற்றி ஒரு டிஸைன் மாதிரி அலங்கரித்து, அருகே மசாலாவையும் வைத்து அதன் மேல் சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தேன்.

எல்லோரும் குறிப்புகளை பிரிண்ட் செய்து கொண்டு வந்தனர். நானும் ஒரு சிலரும் ஒரு பேப்பரில் எழுதி அருகே வைத்தோம். எனக்கு எல்லாம் செய்து முடிக்க அரை மணி நேரம் ஆனது. பின் மற்றவர்கள் செய்திருந்ததைப் பார்க்கச் சென்றேன். எல்லோரும் இதற்கு முன்பு கேள்விப்படாத டிஷ்களை அழகு அழகாக டிஸ்ப்ளே செய்து வைத்திருந்தனர். பல கல்லூரிகளில் இருந்தும் குழுக்களாக வந்திருந்தனர். எங்கள் கல்லூரியிலோ நான் மட்டும்தான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரியாக இரண்டு மணிக்கு ஆடிட்டோரியத்தில் எல்லாம் தயார் செய்ய ஆரம்பித்து கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நடுவர்கள் பேச ஆரம்பித்தார்கள். எல்லோரும் பேசி முடித்து பரிசுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள். போட்டியில் மொத்தம் பால் சார்ந்த உணவுகள், கோதுமை உணவுகள், பழங்களை வைத்து செய்யும் உணவுகள், ரைஸ் வெரைட்டிஸ் மற்றும் இனிப்பு வகைகள் என்று ஐந்து பிரிவுகள். வெற்றியாளர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. கோதுமை பிரிவில் பெயர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள் அப்போது இரண்டாம் பரிசு தேங்காய் பராத்தா என்ற வார்த்தைதான் முதலில் காதில் விழுந்தது. அதற்கு பிறகுதான் முத்துலட்சுமி என்ற பெயர் கேட்டு வேகமாக ஓடினேன். மேடையில் மீண்டும் ஒருமுறை செய்த டிஷ் செய்முறையை கேட்டார்கள். பரிசை வாங்கியதும் பதற்றத்துடன் சொன்னேன். அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது படங்கள் எடுப்பதற்கு கேமராவும் இல்லை ஸ்மார்ட் போனும் இல்லை.

நான் பரிசை மறைத்து வைத்து நடந்து வரும்போது, ’திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நாகேஷிடம் பரிசு கிடைத்ததா என்று கேட்பதுபோலவே அப்பா கேட்டார்கள். உடனே பரிசையும், சான்றிதழையும் எடுத்து காண்பித்ததும் அதை பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினோம். அம்மாவுக்கும் தங்கைக்கும் ரொம்ப சந்தோஷம். எட்டு மாதங்களுக்குப் பின் அம்மா வாக்கரைப் பிடித்து நின்றபடியே அன்று சமைத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டோம். மறுநாள் கல்லூரியில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் பரிசையும் சான்றிதழையும் காண்பித்தேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

அன்று முதல் நாளொரு ரெசிபி செய்து பார்க்கும் அளவுக்கு ஆர்வம் அதிகமானது.

அன்று முதல் நாளொரு ரெசிபி செய்து பார்க்கும் அளவுக்கு ஆர்வம் அதிகமானது. சில வாரங்களுக்கு முன்பாக பதிவு செய்த கடையம் வத்தக்குழம்பு மற்றும் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா குறிப்புகளுக்கு சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாத எத்தனையோ நபர்கள் பாராட்டினார்கள். செய்முறை படங்ளோடு பதிவு செய்யும் முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. இப்படி ஒவ்வொரு முயற்சியாக பயணிப்பது பெரும் சந்தோஷத்தைத் தருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி இப்போது அந்த இரண்டு டிஷ்ஷையும் எப்படி செய்வதென்று பார்ப்போமா! இது சமையல்கலை நிபுணர் சாந்தி பலராம் அவர்கள் தொலைக்காட்சியில் செய்து காண்பித்ததைப் பார்த்து நான் வீட்டில் செய்து பார்த்து மகிழ்ச்சியடைந்த ரெசிபி.

முதலில் தேங்காய் பராத்தா செய்முறை

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு - 2 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித் தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

புதினா இலைகள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஸ்டெப் 1

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்

ஸ்டெப் 2

பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லிதழையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்கி தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு தட்டில் மாற்றிக் ஆறவைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

இப்போது பிசைந்த மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்துக் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் சிறிய வட்டங்களாக சிறிது மாவு தூவி தேய்த்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் கலவையை நடுவில் வைத்து பக்கவாட்டில் இருக்கும் மாவை மடித்து கூம்பமாக சேர்த்து மீண்டும் அழுத்தி சிறிது மாவு தூவி வட்டமாக தேய்க்கவும்.

ஸ்டெப் 4

ஸ்டஃபிங் நிரப்பிய பராத்தாகளை எப்போதும் போல சூடான தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி பொன்னிறமாக ‌‌‌ சுட்டு எடுத்து கொள்ளவும்.

நீங்களும் இதே செய்முறையில் ருசியான ஸ்டஃப்டு தேங்காய் பராத்தாவை இப்பவே ட்ரை பண்ணுங்க!

அடுத்து இதற்கு பட்டாணி மசாலா தயார் செய்யலாம்

தேவையான பொருள்கள்

பட்டாணி - 200 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லிதழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க...

பட்டை - 2 சிறிய துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - பாதியளவு

பூண்டு - 7 பற்கள்

இஞ்சி - 1 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 7

தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன்

ஸ்டெப் 1

முதலில் இந்த பட்டாணி மசாலா செய்வதற்கு காய்ந்த பட்டாணியை கழுவி 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசனை வந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து மசாலா பொருட்களோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுத்தால் போதும். இப்போது மசாலா பொருட்கள் வறுபட்டு தயாராக உள்ளது. இது நன்றாக ஆறியதும் சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 3

இப்போது கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாடை போக வதக்கி விட்டு வேகவைத்த பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 4

இதோடு மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து கலந்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து மசாலாவை ஒரு 7 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். கமகம வாசம் உங்கள் கிச்சனில் வர ஆரம்பித்ததும் மூடியை திறந்து விருப்பப்பட்டால் சிறிது வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி, பரிமாற வேண்டியதுதான்!

Coconut Paratha & Green Peas Masala
Coconut Paratha & Green Peas Masala

இந்த மசாலா பராத்தா, சப்பாத்திக்கு மட்டுமல்ல... ஜீரா ரைஸ், ஆப்பம், இடியாப்பம், தோசைக்கும் அருமையாக இருக்கும்!

சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்
சமையற்கலைஞர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism