Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

- சுகுன ரோஷிணி

பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

சமையல் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் செஃப் கிரிஜா

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

ஹோட்டல்களில் தருவது போல வீட்டு தோசை சிவப்பாகவும், மொறுமொறுப்பாகவும் வர என்ன செய்ய வேண்டும்?

- மல்லிகா விஜயன், சிதம்பரம்

இட்லி அரிசி ஐந்து பங்கு, உளுந்து ஒரு பங்கு, கால் டீஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் கலந்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கிலோ அரிசிக்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மைதா மாவு, சிறிதளவு சர்க்கரை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை வார்த்தால், ஓரத்தில் வெளிர் நிறத்திலும் நடுப்பகுதியில் பொன் நிறத்திலுமாக மொறுமொறுவென ஹோட்டல் தோசை போலவே கிடைக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

மொறுமொறுப்பான மெதுவடை தயாரிக்க என்ன செய்ய வேண்டும்?

- எஸ்.பத்மஸ்ரீ, சென்னை-15

உளுத்தம்பருப்பை அதன் அளவைவிட மூன்று மடங்கு பெரிதாகும் வரை ஊற வைக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உளுந்து ஊற வேண்டும். வெதுவெதுப் பான தண்ணீரில் ஊற வைக்கலாம். உளுந்தை அரைக்கும்போது தண்ணீரை ஊற்றாமல், மிக மிகக் குறைந்த அளவில் தண்ணீரைத் தெளித்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது உளுந்து பொங்கி வர வேண்டும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்தால் க்ரிஸ்பியான மெதுவடை கிடைக்கும். உளுந்து மாவு அரைக்கும்போது கால் டீஸ்பூன் பச்சரிசி மாவு, கால் டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக்கொண்டால், ஹோட்டல் சுவையில் மெதுவடை கிடைக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

பிரியாணி, புலாவ் செய்வதற்கு ஏற்ற அரிசி எது? வீட்டில் பிரியாணி தயாரித்தால், சில வேளைகளில் சாதம் குழைந்துவிடுகிறது அல்லது விதை விதையாக இருக்கிறது. பிரியாணி அரிசிக்கு எந்த அளவு தண்ணீர் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.

- காயத்ரி ஜெயராமன், சேலம்-6

புலாவ், பிரியாணி ஆகியவை தயாரிக்க தரமான பாஸ்மதி அரிசியே சிறந்தது. ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். பச்சரிசி, சீரகச்சம்பா அரிசி என்றால் ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். சீரகச் சம்பா அரிசி, பச்சரிசி ஆகியவற்றில் பிரியாணி தயாரிக்கும்போது 10 முதல் 15 நிமிடங்கள் அரிசியை ஊறவைத்து, பின்னர் சமைப்பது நல்லது. பிரியாணி தாளித்து முடித்து, ‘தம்’ போடுவதற்கு முன்பாக எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அப்படிச் செய்தால் சாதம் உதிரி உதிரியாகவும் சுவையாகவும் இருக்கும். எலுமிச்சைப் பழச்சாற்றைத் தொடக்கத்திலோ, மசாலா பொருள்களைச் சேர்த்துக் கிளறும்போதோ பிழிந்து விட்டால், உதிரி உதிரியாகவோ, சுவையாகவோ வராது. சுவையும் மாறிவிடும் என்பதால் இறுதியாகப் பிழிந்து விடுவதே நல்லது.

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது என்கிறார்கள். நெல்லிக்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய ஏதாவது ஓர் எளிமையான ரெசிப்பி சொல்லுங்கள்.

- எம்.பாக்யலட்சுமி, திண்டுக்கல்

நெல்லிக்காயை காலை, மாலை, இரவு என்று எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இரண்டு நெல்லிக்காய்களைக் கழுவி சுத்தம் செய்து விதைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இத்துடன் மூன்று புதினா இலைகள், மிளகு சைஸில் பட்டை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸ் தயாரித்தால் சுவையாக இருக்கும். இனிப்புச் சுவை வேண்டுமென்பவர்கள், உப்புக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

சமையல் சந்தேகங்கள் - 20 - பொன்னிற தோசை... கரகரப்பான வடை... கெட்டித் தயிர்...

கெட்டித்தயிர் தயாரிக்கும்போது வீட்டிலுள்ள ஒவ்வொரு வருக்கும் பரிமாற, தனித்தனி கப்பில் ஊற்றித் தயாரிக்கலாமா அல்லது ஒரே பாத்திரத்தில் தோய்த்து வைத்து, தனித்தனியே எடுத்துப் பரிமாற வேண்டுமா?

- கே.சந்தானலெட்சுமி, காரைக்குடி

தயிர் உறை ஊற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. தண்ணீர் கலக்காத பாலாக இருக்க வேண்டும். பால் நன்றாகக் காய்ந்த பிறகும் சிம்மிலேயே ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வைத்து சுண்டக் காய்ச்சினால் சூப்பரான கெட்டித்தயிர் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கப்பில் உறை ஊற்றி வைக்க நினைப்பவர்கள், ஒரு கப் வெதுவெதுப்பான பாலுக்கு ஒரு டீஸ்பூன் தயிர் உறை ஊற்றி வைத்தால் கெட்டித்தயிர் கிடைக்கும். முதல்நாள் இரவு தோய்த்து வைத்த இந்தத் தயிரை, காலையில் எழுந்ததும் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிட வேண்டும். மொத்தமாக உறை ஊற்றி வைப்பவர்கள் அதிகம் புளித்துவிடுமோ என்று நினைத்தால், உறை ஊற்றி வைத்தவுடன் அந்தப் பாலில் காம்புடன்கூடிய காய்ந்த மிளகாய் ஒன்று அல்லது இரண்டைச் சேர்த்து மூடி வைக்க வும். இப்படிச் செய்தால், புளிக்காத தயிர் கிடைக்கும். அடுத்த நாள் மிளகாயை எடுத்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு