Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

கறுப்பு ஏலக்காய்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு ஏலக்காய்

- எஸ்.சித்ரா

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

- எஸ்.சித்ரா

Published:Updated:
கறுப்பு ஏலக்காய்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு ஏலக்காய்
ஜானகி அஸாரியா
ஜானகி அஸாரியா

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் சமையற்கலை நிபுணர் ஜானகி அஸாரியா

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

காளான் சமைக்கும்போது நிறம் மாறாமல் சமைப்பது எப்படி?

- ரமணி, பெங்களூரு-3

காளான் சமைக்கும் முன்பு ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்து சில நிமிடங்கள் கலந்து வைத்து சிறிது தண்ணீர் விட்டு சுத்தம் செய்து பயன் படுத்தவும். மேலும் காளானை அதிக நேரம் வதக்க வேண்டாம். லேசாக வதக்கினால் போதும். அதிக நேரம் வதக்கினால் அதன் தன்மையும் கடினமாக ஆகிவிடும்.

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்வது எப்படி?

- விஜி பாஸ்கர், ஆலங்குளம்

அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் தக்காளியைச் சேர்த்து மூடி வைத்து 7 முதல் 9 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பிறகு தோலுரித்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அத்துடன் தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து குறைந்த சூட்டில் கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து இறக்க வும். தக்காளியில் புளிப்பு குறைவாக இருந்தால் கலவையில் சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

கிரேவி செய்யும்போது ஃப்ரெஷ் க்ரீமுக்குப் பதிலாக என்ன சேர்க்கலாம்?

- விந்தியா, சென்னை-78

கெட்டியான குளிர்ந்த பாலில் மேலே படிந் துள்ள கெட்டியான பாலாடையை சேகரித்து ஒரு முள்கரண்டி (ஃபோர்க்) வைத்து நன்றாக அடிக்கவும். பின் அதை கிரேவி வகைகளில் கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம். ருசியும் நன்றாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

கறுப்பு ஏலக்காயைச் சமையலுக்குப் பயன் படுத்தலாமா?

- மகாலக்ஷ்மி சுப்பிரமணியன், காரைக்கால்

கறுப்பு ஏலக்காய் அதிக வாசனையுடன் இருக் கும். வட இந்திய கிரேவி வகைகளுக்கு கறுப்பு ஏலக்காயை ஒன்று அல்லது இரண்டு சேர்த்து பயன்படுத்தலாம். குறிப்பாக பஞ்சாபி சோலே செய்யும்போது அடர்த்தியான நிறம் வருவதற்கு கறுப்பு ஏலக்காய் சேர்ப்பார்கள். கறுப்பு ஏலக்காயை உணவில் அதிக அளவு சேர்த்தால் திகட்டிவிடும்.

சமையல் சந்தேகங்கள் 34 - நிறம் மாறாத காளான்... ஹோம் மேடு தக்காளி சாஸ்... ஃப்ரெஷ் க்ரீமுக்கு மாற்று...

பாதாம் பிசினை ஊறவைத்து பயன்படுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாமா.. அதை எந்த வகை யான உணவுகளில் உபயோகப்படுத்தலாம்?

- தாகிரா ஃபாத்திமா, திருச்சி-9

பாதாம் பிசினை நன்றாக வறுத்து லேசாக தட்டிய பின்பு கோதுமை மாவு லட்டு, உலர்ந்த பழங்களை வைத்துச் செய்யும் இனிப்பு வகை களில் சேர்த்தால் நன்றாக இருக்கும். கேரட் அல்வாவுக்கும் பாதாம் பிசினை நன்றாக வறுத்து கடைசியாக மேலே சேர்த்துக் கொள்ளலாம். இதைச் சேர்ப்பதால் இனிப்புகளைச் சாப்பிடும் போது இடையிடையே அவற்றின் தன்மை கொரகொரப்பாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.