Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 36

மீன்
பிரீமியம் ஸ்டோரி
மீன்

ஈஸியான மீன் பிரியாணி... ஈஸ்ட் சேர்க்காத தந்தூரி ரொட்டி... வீட்டிலேயே சில்லி ஃப்ளேக்ஸ்...

சமையல் சந்தேகங்கள் - 36

ஈஸியான மீன் பிரியாணி... ஈஸ்ட் சேர்க்காத தந்தூரி ரொட்டி... வீட்டிலேயே சில்லி ஃப்ளேக்ஸ்...

Published:Updated:
மீன்
பிரீமியம் ஸ்டோரி
மீன்

-எஸ்.சித்ரா

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் சரவணன்

செஃப் சரவணன்
செஃப் சரவணன்

எளிதாக மீன் பிரியாணி செய்வது எப்படி? அதற்கு எந்த மீன் சிறந்தது?

- கார்த்திகா மூர்த்தி, கும்பகோணம்

சீரக சம்பா அரிசியில் செய்யும் மீன் பிரியாணி கூடுதல் சுவையாக இருக்கும். இந்த பிரியாணிக்கு வஞ்சிரம் மீன் ஏற்றது. எளிதாகச் செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் மீன் பிரியாணி செய்முறையைச் சொல்கிறேன். மீன் துண்டுகளின் அளவுக்கு ஏற்ப இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு எலுமிச்சைச்சாறு, சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் சீரகத்தூள், உப்பு எல்லாம் சேர்ந்து விழுதுபோல் செய்து சுத்தப்படுத்திய மீன் துண்டுகளில் நன்கு ஊற வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு மிதமான தீயில் பாதி அளவு வாட்டி எடுக்கவும்.

பிரியாணி செய்ய தேவையான அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் செட்டி நாடு மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அதில் எலுமிச்சைச்சாறு சேர்த்து தொக்குபோல ஆனதும் (ஒரு கிலோ சீரக சம்பா அரிசிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து) ஊறவைத்த சீரக சம்பா அரிசி, தேவையான அளவு புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். அதில் வாட்டி எடுத்த மீன் துண்டுகள் சேர்த்து மேலே வாழையிலையை வைத்து 20 நிமிடங்கள் `தம்' போட்டு இறக்கவும்.

சமையல் சந்தேகங்கள் - 36

உருளைக்கிழங்கு ரோஸ்ட், வாழைக்காய் ரோஸ்ட் போன்றவற்றுக்கு தட்டிய பூண்டு சேர்க்க வேண்டுமா அல்லது பூண்டை அரைத்துச் சேர்க்க வேண்டுமா?

- பத்மா மனோகர், திருச்சி-3

உருளை, வாழைக்காய் அல்லது சேனை போல எந்த வகை ரோஸ்ட் செய்யும்போதும், இடித்த பூண்டைத் தான் சேர்க்க வேண்டும். பூண்டை அரைத்துச் சேர்க்க வேண்டாம். உருளைக்கிழங்கு மசாலா போன்ற வகைகளுக்கு அரைத்த பூண்டு விழுது சேர்க்கலாம்.

ஊறுகாயில் சேர்க்கும் கடுகுப் பொடிக்கு கடுகை வறுத்துச் சேர்க்க வேண்டுமா அல்லது வறுக்காமல் சேர்க்க வேண்டுமா?

- எம்.சிவகாமி, திருநெல்வேலி

ஊறுகாய்க்கு கடுகை சிறிது நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து (அதிக நேரமும் வறுக்கக் கூடாது) பொடி செய்து சேர்த்தால் அதன் சுவை அபாரமாக இருக்கும். இப்படிச் செய்யும்போது ஒரு வருடத்துக்கு ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்கும். வறுக்காமல் பச்சை கடுகை பொடிசெய்து சேர்த்தால் கசப்புத்தன்மை வந்துவிடும். ஊறுகாயின் சுவையும் குறைந்துவிடும்.

சமையல் சந்தேகங்கள் - 36

நான், தந்தூரி ரொட்டி போன்ற உணவு வகைகளை ஈஸ்ட் சேர்க்காமல் வீட்டிலேயே செய்ய முடியுமா?

- செல்வி ஆராதனா, சென்னை-91

நான், தந்தூரி ரொட்டி செய்ய ஈஸ்ட் அவசியம் இல்லை. ஈஸ்ட்டுக்கு பதிலாக கெட்டியான புளிப் பில்லாத தயிர் சேர்த்துச் செய்யலாம். மைதா மாவில் சிறிதளவு பால், தயிர், சர்க்கரை மற்றும் உப்பு‌ சேர்த்து நன்றாகப் பிசைந்து, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு செய்தால் ஹோட்டல் சுவையில் நான், ரொட்டியை சுவைக்கலாம். அசைவம் சாப்பிடு பவர்கள் என்றால் தயிருக்கு பதிலாக முட்டை சேர்த்துப் பிசைந்துகொள்ளலாம்.

பாஸ்தா, பீட்ஸாவில் சேர்க்கும் சில்லி ஃப்ளேக்ஸ் (Chilly Flakes) வீட்டில் செய்ய முடியுமா?

- முத்துக்குமார், தென்காசி

காய்ந்த மிளகாயை (நீளமான ரகம்) 100 கிராம் அளவு எடுத்து, இரும்பு தோசைக்கல் அல்லது இரும்புக் கடாயில் குறைந்த சூட்டில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும். பிறகு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து விப்பர் மோடில் லேசாகப் பொடித்து எடுத்தால் சில்லி ஃப்ளேக்ஸ் ரெடி.

சமையல் சந்தேகங்கள் - 36

பாசிப்பருப்பில் இட்லி சாம்பார் செய்யும்போது நேரமாக ஆக கெட்டியாகி விடுகிறதே... இதைத் தவிர்ப்பது எப்படி?

- சண்முகப்பிரியா, நெல்லை-7

பாசிப்பருப்பில் சாம்பார் வைக்கும்போதே நீர்க்க வைத்துக்கொள்ளவும் ‌. மேலும் பாசிப்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம். குக்கரில் வேகவைப்பதற்கு பதிலாக பாசிப்பருப்பை பாத் திரத்தில் வேகவைத்து சாம்பார் செய்யும்போது எவ்வளவு நேரமானாலும் கெட்டியாகாமல் நன்றாக இருக்கும்.