பிரீமியம் ஸ்டோரி

புத்தாண்டு பிறந்ததும் பண்டிகைகளும் அணிவகுக்க ஆரம்பித்துவிடும். புத்தாண்டு ஸ்பெஷல் என்றாலே கேக், பிரியாணி நிச்சயம் உண்டு. பொங்கல் என்றால் போகிப் பண்டிகை விசேஷ சமையலும் உண்டு. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் போளி, விதவிதமான பொங்கல்கள், வடைகள், பச்சடிகள் மற்றும் வள்ளிக்கிழங்கு, பறங்கி, பூசணி, மொச்சை, காராமணி என விதவிதமான காய்களுடன் விருந்துமயம்தான். பண்டிகைகளின் பாரம்பர்யம் மாறாமல் சமையல் செய்து பகவானுக்குப் படைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான். அப்படியே சமையல் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களும் உண்டு. அதற்கான விளக்கங்களும் உண்டு. அவற்றில் சில இங்கே...

 எஸ்.ராஜகுமாரி
எஸ்.ராஜகுமாரி
கேக்
கேக்

கேக் செய்வதற்கு மாவு தயாரித்து அதைப் பாத்திரத்தில் ஊற்றி, மேலே தூவும் உலர் பருப்புகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்) உள்ளே அமுங்காமல் மேலேயே அலங்காரமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

கேக் மாவு தயாரித்து அதைப் பாத்திரத்தில் ஊற்றவும். தூவுவதற்குத் தேவையான உலர் பருப்புகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவைச் சேர்த்துக் கலக்கவும். மைதாவில் கலந்த உலர் பருப்புகளைத் தூவினால் உலர் பருப்புகள் உள்ளே செல்லாமல் மேலாக நிற்கும். பார்ப்பதற்கும் அலங்காரமாக இருக்கும்.

பிரியாணியின் சுவையைக் கூட்டுவதற்கு எளிமையான டிப்ஸ் ப்ளீஸ். வீட்டிலேயே பிரியாணி மசாலா தயாரிக்க முடியுமா?

வெஜிடபிள் பிரியாணி தயாரிக்கும்போது பெரிய வெங்காயத்தைப் பிரியாணி வேகும்போது சேர்க்காமல், பிரியாணி முழுமையாக வெந்ததும் வெங்காயத்தை மெலிதாக நறுக்கி, எண்ணெயில் வறுத்துச்சேர்த்துக் கலந்தால், சுவை அதிகமாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

பிரியாணி மசாலா தயாரிக்கும் முறை...

தேவையானவை: பிரியாணி இலை - சிறியது 2, பட்டை - 2 சிறிய துண்டு, அன்னாசிப்பூ - ஒன்று (சிறியது), தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, மராட்டி மொக்கு - ஒன்று (சிறியது), கிராம்பு - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 கப் அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் இந்த மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

கோதுமை மாவில் செய்யும் அல்வா பிசுபிசுப்பு இல்லாமல் செய்வது எப்படி?

அடிகனமான வாணலியில் நெய்யை ஊற்றி கோதுமை மாவை அதில் சேர்த்து வறுத்து தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் நீர் சேர்த்தால்தான் பிசுபிசுப்பு இல்லாமல் மாவு நன்றாக வெந்துவிடும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கலர் பொடி, வறுத்த முந்திரித் துண்டுகள் சேர்க்க வேண்டும். அல்வாவுக்குக் கொதிநீர் சேர்த்ததுமே இடையிடையே நெய் சேர்க்க வேண்டும். கோதுமை மாவு அல்வா தயார்.

உடனடி பால் கோவா... வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது?

தேவையானவை: பால் - 3 கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்துக் கைவிடாமல் கிளறி, கைகளால் உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும். பால் கோவா தயார். இனிப்புகள் செய்யவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொங்கல் குழம்பு செய்வதற்குத் தேவையான பொடியை எப்படித் தயாரிப்பது? என்னென்ன பொருள்கள் பொடிக்குத் தேவை?

பொங்கல் குழம்பு, பொங்கல் பண்டிகை யின் முக்கியமான உணவு. இதைப் பொங்கலுக்குத் தொட்டுச் சாப்பிடுவது வழக்கம்.

பொடிக்குத் தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப் (அ) 5 டேபிள்ஸ்பூன் (விருப்பத்துக்கேற்ப).

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த் துருவல் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் வறுத்து (தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்தும் வறுக்கலாம்) இறுதியில் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து நீர்விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் குழம்பில் சேர்க்கலாம் (2 கப் காய்கறிகள் நறுக்கி செய்யும் குழம்புக்கு மேற்கண்ட அளவுகள் பொருந்தும்). காய்கறிகளின் அளவுக்கேற்ப பொடி செய்வதற்கு வறுக்கும் பொருள்களின் அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.

பொங்கலின் பிரதான காயான பறங்கிக்காயில் பால் கூட்டு எப்படிச் செய்வது?

தேவையானவை: தோல் சீவி நீளவாக்கில் (அ) பொடியாக நறுக்கிய பறங்கிக்காய் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பால் - கால் கப், துருவிய வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

செய்முறை: பறங்கிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து அதில் சேர்க்கவும். பிறகு வெல்லம் சேர்த்து, பால் சேர்த்து ஒரு கொதிவந்ததும் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அதில் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

குறிப்பு: பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் அன்று இந்த பறங்கிக்காய் பால் கூட்டு செய்து படைப்பர்.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

போகிப் பண்டிகை அன்று செய்து படைக்கும் போளியின் மேல் மாவு மென்மையாக வர என்ன செய்ய வேண்டும்?

போளியின் மேல் மாவான மைதா மாவுடன், 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு பூரணம் சேர்த்து போளி தயாரிக்கலாம் (ஒரு கப் மைதா மாவுக்கு 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கலாம்).

வெங்காயம் சேர்க்காமல் பொங்கல் அன்று வடை தயாரிப்பது எப்படி?

தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், பொடியாக அரிந்த அரைக்கீரை (அ) முளைக்கீரை - அரை கப், பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் நீர்விட்டு ஊறவைத்து நீரை வடிகட்டி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுதுடன் அனைத்துப் பொருள்களையும் கலந்து வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சமையல் சந்தேகங்கள்:
பொங்கலோ பொங்கல்!

பொங்கலின் சுவையைக் கூட்ட டிப்ஸ் வேண்டுமே...

எந்தப் பொங்கலாக இருந்தாலும் (இனிப்பு, காரம், சிறுதானியம்) வெறும் வாணலியில் வறுத்து, பிறகு பொங்கல் தயாரிக்க வேண்டும். வெண்ணெயை உருக்கி நெய்யாக்கி ஃபிரெஷ்ஷான நெய்யால் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்தால் சுவை கூடும். காரப்பொங்கலாக இருந்தால் (ஏற்கெனவே சுட்ட எண்ணெய் வேண்டாம்) ஃபிரெஷ்ஷான எண்ணெயில் தாளித்தால் சுவையும் ஆரோக்கியமும் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு