Published:Updated:

சமையல் சந்தேகங்கள்: மூங்கில் குருத்திலே புதுமையான சுவை!

பருப்புப் பாயசம்
பிரீமியம் ஸ்டோரி
பருப்புப் பாயசம்

ரேவதி சண்முகம்

சமையல் சந்தேகங்கள்: மூங்கில் குருத்திலே புதுமையான சுவை!

ரேவதி சண்முகம்

Published:Updated:
பருப்புப் பாயசம்
பிரீமியம் ஸ்டோரி
பருப்புப் பாயசம்

மையல் என்பதை செய்து முடிக்கவேண்டிய வேலை என்றே பலரும் அணுகுகிறார்கள். ஆனால், அது ஓர் அற்புதமான கலை. அந்தக் கலையில் ஆர்வத்துடன் ஈடுபடும்போது, செய்து பரிமாறும் உணவுகள் சுவையில் அசத்துவதுடன், சாப்பிடுபவர்களின் பாராட்டுகளையும் அள்ளித்தரும். அதேநேரம், என்னதான் சமையல் திறமையும் அனுபவமும் இருந்தாலும், சில வேளைகளில் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமைவதில்லை.

சமையல் சந்தேகங்கள்: மூங்கில் குருத்திலே புதுமையான சுவை!
 ரேவதி சண்முகம்
ரேவதி சண்முகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமைக்கும் முறைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன. வழக்கமான உணவுகளுடன், உணவகங்களில் வாங்கும் உணவுப் பொருள்களையும் வீட்டிலேயே செய்யும் ஆர்வம் இருந்தாலும், `அது சரியாக வருமா?’ என்ற தயக்கம் சிலருக்கு இருக்கிறது. அவ்வாறு செய்யும்போது சில சிரமங்களையும் சந்திக்கிறார்கள். சமையல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், சமையலின் தரத்தை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் இங்கே வழங்குகிறார் சமையற்கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹோட்டல் ஸ்டைலில் பனீர் பட்டர் மசாலா செய்ய முயற்சி செய்தேன். யூடியூப் பார்த்து, அவர்கள் சொன்னபடி சரியாகத்தான் செய்தேன். ஆனால், சமைத்து முடித்த அரை மணி நேரத்தில் பனீர் பட்டர் மசாலா பசைபோல மாறிவிட்டது. ருசி என்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், பசைபோல இருந்ததால் சாப்பிடப் பிடிக்கவில்லை. எந்த இடத்தில் சொதப்பினேன் என்றே தெரியவில்லை...

பனீர் பட்டர் மசாலா
பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா செய்யும்போது நாம் சேர்க்கும் பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா, சோள மாவு போன்றவை பசைபோல மாறக்கூடிய தன்மையுடையவை. இவற்றில் ஏதாவது ஒன்றை அதிக அளவில் சேர்த்தோம் என்றால், பனீர் பட்டர் மசாலா பசைபோல மாற வாய்ப்புள்ளது. எனவே, நாம் சேர்க்கும் பொருள்களின் சரியான அளவை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக திருமணமான பெண் நான். கீரை மற்றும் காய்கறிகளை எப்படிச் சமைப்பது என்பதிலேயே எனக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் இருக்கின்றன. கீரையை குக்கரில் வேகவைக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். `கலர் மாறிவிடும்; கீரையில் தெளிக்கப்பட்ட ரசாயனங்கள் ஆவியாகாது’ என இதற்குக் காரணமும் சொல்கிறார்கள். திறந்துவைத்து சமைத்தால் சத்து போய்விடும் என்கிறார்கள் சிலர். காய்கறிகள் சமைப்பதிலும் எனக்கு இதே சந்தேகம்தான். குக்கரில் என்னென்ன சமைக்கலாம், என்னென்ன சமைக்கக் கூடாது? தெளிவாக்குங்களேன்...

கீரை
கீரை

கீரையைத் தண்ணீரில் நன்றாக அலசி கல் உப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரில் ஒரு கட்டு கீரைக்கு அரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒன்று அல்லது இரண்டு விசில் வரும் வரை வைத்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொண்டு அதைப் பொரியலாகவோ, கூட்டாகவோ செய்யலாம். இதுபோல அனைத்துவகையான காய்கறிகளையும் குக்கரில் வேக வைக்கலாம். இதனால் சத்துகள் போகும் என்பதெல்லாம் இல்லை. ஒருவேளை காய்கறிகளை வேகவைக்க பயன்படுத்திய நீர் மீதம் இருந்தால், அதையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எளிதில் வெந்துவிடும் வாழைக்காய், பறங்கிக்காய், சேனைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் குக்கரில் வேகவைக்கும்போது அதிக கவனம் தேவை. அதிக நேரம் வேக வைக்கும்போது இவை குழைந்து போக வாய்ப்புள்ளது.

சீரக சம்பாவில் பிரியாணி செய்தால் சூப்பராக வருகிறது. ஆனால், பாஸ்மதி அரிசியில் செய்தால், வெஜ் பிரியாணியில் அரிசி வாசனைதான் தூக்கலாக இருக்கிறது. மசாலாவும் அரிசியில் ஒட்டுவதில்லை. என்ன செய்வது?

 பிரியாணி
பிரியாணி

பிரியாணியில் அரிசி வாசனை வருவதைத் தவிர்க்க நல்ல தரமான அரிசியாகப் பார்த்து வாங்க வேண்டும். மேலும் அரிசியை உலர் சாதமாக வடித்து மசாலாவுடன் கிளறி பிரியாணி செய்தாலும் சிறிது நேரமாவது தம் பிடித்து மசாலா சாதத்துடன் சேர்வதற்கான நேரத்தைத் தர வேண்டும்.

நான் தோசை வார்த்தால், ஹோட்டல்களில் இருப்பதைப் போல பொன்னிறத்தில் வருவதில்லை. தோசைக்கல்லில் இருந்து தட்டுக்கு வருவதற்குள் மொறுமொறுப்பும் போய்விடுகிறது. ருசி, லுக், மொறுமொறு என அச்சு அசல் ஹோட்டல் தோசை எப்படி செய்வது?

நான் தோசை வார்த்தால்
நான் தோசை வார்த்தால்

2 கப் புழுங்கலரிசி, ஒரு கப் பச்சரிசி, கால் கப் கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு, அரை கப் உளுந்து மேலும் 2 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து அரைத்து, புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தோசை ஊற்றப்போகும் நேரத்தில் சிறிதளவு சர்க்கரை, கடலை மாவைச் சேர்த்து தோசை மாவுடன் கிளறி தோசை வார்த்து மிதமான சூட்டில் நிதானமாக வேகவைக்க வேண்டும். இந்த முறையில் தோசை சுடும்போது, அது ஹோட்டல்களில் இருப்பதைப் போலவே பொன்னிறமாகவும் அதிக மொறுமொறுப்புடனும் இருக்கும்.

எங்கு பார்த்தாலும் கோதுமை பரோட்டாவாக இருக்கிறது. வெறும் கோதுமை மாவில் பரோட்டா செய்ய முடியுமா? மைதா மாவு கலந்தால்தான் செய்ய முடியுமென்றால் எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும்?

கோதுமை பரோட்டா
கோதுமை பரோட்டா

கோதுமை பரோட்டா செய்ய மைதா மாவு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பூரி, சப்பாத்திக்குச் செய்வது போல கோதுமை மாவை நன்றாகப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு விசிறி மடிப்பு அல்லது புடவை மடிப்பு போல மடித்துக்கொண்டு பரோட்டா செய்யும்போது மைதா பரோட்டா போலவே அடுக்குகளும் வரும்.

வீட்டிலேயே டோனட் செய்ய முடியுமா?

டோனட்
டோனட்

தாராளமாகச் செய்ய முடியும்.

டோனட் செய்யத் தேவையானவை: 2 கப் மைதா மாவு, கால் கப் பால், 2 டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் ஈஸ்ட், அரை டீஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரை, நெய் சிறிதளவு.

செய்முறை: முதலில் சர்க்கரையையும் ஈஸ்ட்டையும் வெதுவெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனுடன் தயிரை அடித்துக் கலந்துகொண்டு கொஞ்சம் நேரம் மூடி வைத்தால் நொதித்துக்கொண்டு பொங்கி வரும். இதை மைதா மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் வெதுவெதுப்பான இடத்தில் மூடி வைத்தால் மாவு நொதித்து அதன் அளவு இரண்டு மடங்காகும். இதை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பிசைந்துக்கொண்டு டோனட் வடிவில் கட் செய்து, சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொரித் தெடுத்தால் டோனட் ரெடி.

லசாக்னா ஷீட் (lasagna sheet) வைத்து என்னென்ன செய்யலாம்? இந்த ஷீட்டை வீட்டிலேயே செய்ய முடியுமா?

லசாக்னா ஷீட்
லசாக்னா ஷீட்

லசாக்னா ஷீட் வைத்து பெரும்பாலும் `லசாக்னா’தான் செய்ய முடியும். லசாக்னா ஷீட்டை அதற்கான இயந்திரங்களைப் பயன்படுத்தி நேர்த்தியாகச் செய்வது போல வீட்டில் செய்ய முடியாவிட்டாலும் ஓரளவு அதே சுவையில் செய்யலாம்.

மைதா மாவைச் சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்துக்கொண்டு சிறு சிறு சப்பாத்தி வடிவில் எடுத்துக்கொண்டு கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் போட்டால் அது நன்றாக வெந்தவுடன் மேலே வரும். இதை எடுத்து லசாக்னா செய்யலாம்.

பருப்புப் பாயசம் செய்யும்போதெல்லாம், வெல்லத் தைப் போட்டவுடன் பாயசத்தில் இருக்கிற பால் திரிந்துவிடுகிறது. என்ன செய்வது?

பருப்புப் பாயசம்
பருப்புப் பாயசம்

பருப்பை நன்றாக வேகவைத்துக்கொண்டு அதில், தண்ணீரில் நன்றாகக் கரைத்த வெல்லத்தை ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதி வந்தவுடன் இறக்கிய பிறகு, அதில் தேங்காய்ப்பால் அல்லது காய்ச்சிய பசும்பாலைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பால் திரிந்து போகாது.

ரசமலாய் செய்தபோது, சிலது சர்க்கரைப் பாகில் ஊறி மெத்தென்று இருந்தது. சிலதோ சர்க்கரைப்பாகை உறிஞ்சாமல் கெட்டியாக இருந்தது. ஏன்?

ரசமலாய்
ரசமலாய்

நாம் எடுத்துக்கொள்ளும் பாலைப் பொறுத்தே ரசமலாய் ஊறும் விதம் இருக்கிறது. மேலும், தண்ணீர் நிறைய விட்டு சர்க்கரையை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். திக்கான பசும்பாலாக இருந்தால் ரசமலாய் நன்றாக ஊறி அதிக ருசியாக இருக்கும்.

மூங்கில் குருத்து ரெசிப்பி வீடியோக்கள் நிறைய பார்க்கிறேன். இது எங்கு கிடைக்கும்? மூங்கில் குருத்தில் செய்கிற சிம்பிள் ரெசிப்பி ஏதாவது சொல்லிக்கொடுங்களேன்.

மூங்கில் குருத்து ரெசிப்பி
மூங்கில் குருத்து ரெசிப்பி

மூங்கில் குருத்துகள் சூப்பர் மார்க்கெட்டுகளில் டின்களில் அடைத்து விற்பனை செய்யப் படுகின்றன. அவற்றை வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தலாம். எளிதாகச் செய்யக்கூடிய கொங்கணி ‘மூங்கில் குருத்து ரெசிப்பி’ ஒன்று உள்ளது. ஒரு கப் பச்சரிசி, முக்கால் கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, காரத்துக்கு ஏற்ப காய்ந்த மிளகாய், 3 மூங்கில் குருத்து, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியை ஊறவைத்து, மூங்கில் குருத்து, புளி, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி வேகவைத்து பரிமாறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism