Published:Updated:

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

எஸ்.ராஜகுமாரி

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

எஸ்.ராஜகுமாரி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

லகாரங்கள் செய்வதற்கான மாவு தயாரிப்பு, ஸ்பைஸி உணவுகளைச் சமைக்க உதவும் மசாலாக்கள் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் இல்லத்தரசிகளுக்குப் பல சந்தேகங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சில சந்தேகங்களுக்குத் தனது ரெசிப்பிகளின் வழியே தீர்வு வழங்கியிருக்கிறார் போரூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!
சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரே மாவை வைத்து இனிப்பு, காரம் இரண்டும் செய்ய முடியுமா?

நிச்சயம் முடியும். வெந்தய தோசை, இனிப்புக் குழிப்பணியாரம், ஆப்பம் ஆகிய மூன்றையும் ஒரே மாவில் செய்ய முடியும்.

வெந்தய தோசை

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 4 கப்

பச்சரிசி - 2 கப்

வெள்ளை குண்டு முழு உளுத்தம்பருப்பு -

கால் கப்

வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்

ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு களைந்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் தேவையான தண்ணீர்விட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். உப்பு சேர்க்க வேண்டாம். எட்டு மணி நேரம் கழிந்து மாவைப் பாதியாகப் பிரிக்கவும். மாவின் ஒரு பாதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பிறகு மாவை தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி அதன் ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். சட்னி, வடகறி, சாம்பாருடன் இந்த வெந்தய தோசையைப் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனிப்புக் குழிப்பணியாரம்

தேவையானவை:

துருவிய வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 5 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

வெந்தய தோசை செய்ததுபோக மீதமுள்ள பாதி அளவு மாவில் துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள் மற்றும் துருவிய தேங்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் விட்டுக் கலந்துகொள்ளலாம். பிறகு பணியாரக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். பின்னர் குழிகளில் மாவை ஊற்றி பணியாரங்களாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: பணியாரக் குழிகளில் எண்ணெய்க்குப் பதில் விருப்பப்பட்டால் சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம், இந்த இனிப்புக் குழிப்பணியாரத்துக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம்

குழிப்பணியாரம் வேண்டாமென்றால் வெந்தய தோசை செய்ததுபோக மீதமிருக்கும் பாதியளவு மாவைப் பயன்படுத்தி ஆப்பம் கூடச் செய்யலாம்.

ஆப்பம்

தேவையானவை:

கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கப்

துருவிய வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

பாதியளவு மாவுடன் ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்க்கவும். இத்துடன் சிறிதளவு நீர்விட்டுக் கலந்துகொள்ளவும். தவாவில் எண்ணெய் தடவிச் சூடாக்கி கலந்துவைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி அளவுக்கு எடுத்து தவாவில் ஊற்றி மூடி வைக்கவும். ஆப்பம் வெந்ததும் அப்படியே எடுக்கவும். திருப்பிப் போடத் தேவையில்லை. ஆப்பத்தின் மேல் தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றிச் சுவைக்கவும்.

தேன் குழல், இனிப்புச் சீடை இரண்டும் ஒரே மாவில் செய்ய முடியுமா? மாவு மெஷினில் இதற்கான மாவை அரைத்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது உபயோகிக்க முடியுமா?

முடியும். ஒரே ஒரு மாவை அரைத்து வைத்துக்கொண்டு தேன்குழல் அல்லது இனிப்பு மற்றும் காரச்சீடை என்று பலவகை பலகாரங்களைச் செய்யலாம்.

மாவு அரைக்கத் தேவையானவை:

பச்சரிசி - ஒரு கிலோ

முழு வெள்ளை உளுத்தம்பருப்பு,

பொட்டுக்கடலை - தலா அரை கப்

செய்முறை:

பச்சரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை ஒரு துணியில் பரப்பி நிழலில் உலரவிடவும். அரிசி முக்கால் பதம் உலர்ந்ததும் இதனுடன் பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து மாவு மெஷினில் கொடுத்து மைய அரைக்கவும்.

மாவை அரைத்து வந்ததும் வெறும் வாணலியில் அரைத்த மாவைச் சேர்த்து வறுக்கவும். வறுபடும் மாவைச் சிறிதளவு எடுத்து நீட்டமாகக் கோடு போல் இழுத்தால் மாவு பிசிறு இல்லாமல் கோடு போட வந்தால் அதுவே சரியான பதம்.

இப்போது மாவைக் கீழே இறக்கி பேப்பரில் கொட்டி ஆறவிடவும். பின்னர் மாவைச் சலித்து டப்பாவில் எடுத்துவைக்கவும். இந்த மாவைக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

தேன்குழல்

தேவையானவை:

அரைத்துவைத்திருக்கும் மாவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

எள் அல்லது சீரகம் அல்லது ஓமம் -

2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெயைத் தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் நன்கு கலந்துகொள்ளவும். இத்துடன் தேவையான தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இதைத் தேன்குழல் அச்சிலிட்டுப் பிழிந்து, தேன்குழல்களாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேன்குழல் வேண்டாமென்றால் அரைத்து வைத்துள்ள மாவில் பாதியை இனிப்புச்சீடை செய்யவும், மீதியை காரச்சீடை செய்யவும் பயன்படுத்தலாம்.

இனிப்புச்சீடை

தேவையானவை:

அரைத்துவைத்திருக்கும் மாவில் பாதி அளவு

துருவிய வெல்லம் - 2 கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - அரை கப்

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு அதில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பின்னர் மாவைச் சேர்த்துக் கிளறவும். மாவு சிறிதளவு வெந்ததும் கீழே இறக்கி மாவை சிறிய சீடைகளாக உருட்டவும்.

ஒரு பேப்பர் அல்லது துணியில் உருட்டிய சீடைகளைப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து எண்ணெயை காயவைத்து சீடைகளைப் பொரித்தெடுக்கவும். இந்தச் சீடை வெடிக்கவே வெடிக்காது.

காரச்சீடை

தேவையானவை:

அரைத்துவைத்திருக்கும் மாவில் பாதி அளவு

கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் -

ஒரு டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

சிறிய தேங்காய்க் கீற்றுகள் - 8 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

மாவுடன் தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். தண்ணீர் இரண்டு கொதிவந்ததும் மாவுக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறவும். மாவு பாதியளவு வெந்ததும் கீழே இறக்கி அவற்றை சீடைகளாக உருட்டி பேப்பர் அல்லது துணியில் 20 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருட்டிய சீடைகளைப் பொரித்தெடுக்கவும். காரச்சீடை தயார்.

உளுந்து கொழுக்கட்டை, உளுந்து சாதம், உளுந்து சப்பாத்தி மூன்றையும் ஒரே உளுந்து மசாலாவை வைத்துச் செய்ய முடியுமா? முடியும்...

உளுந்து மசாலாவுக்குத் தேவையானவை:

முழு வெள்ளை உளுந்து – 2 கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்

காய்ந்த மிளகாய் – 4

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

உளுத்தம்பருப்புடன் நீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும். பிறகு இத்துடன் அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும். இதுதான் உளுந்து மசாலா.

இந்த உளுந்து மசாலாவை வைத்து உளுந்து கொழுக்கட்டை, உளுந்து சாதம், உளுந்து சப்பாத்தி ஆகியவற்றை செய்ய முடியும்.

உளுந்து கொழுக்கட்டை

தேவையானவை:

தண்ணீர் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கொழுக்கட்டை மாவு - ஒரு கப்

செய்துவைத்துள்ள உளுந்து மசாலா –தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை :

வாணலியில் அரை கப் தண்ணீர்விட்டு அதனுடன் சிறிதளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஒரு கப் கொழுக்கட்டை மாவைச் சேர்த்து கிளறவும். மாவு வெந்ததும் கீழே இறக்கி சொப்புகளாக செய்துகொள்ளவும். இவற்றின் உள்ளே தேவையான அளவு உளுந்து மசாலாவை வைத்து மூடவும். பின்னர் இட்லிப்பானையில் ஆவியில் வேகவைத்து இறக்கவும். சுவையான உளுந்து கொழுக்கட்டை தயார்.

உளுந்து சாதம்

தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் - ஒன்றரை கப்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

செய்துவைத்துள்ள உளுந்து மசாலா - தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி சாதத்தை சேர்க்கவும். இத்துடன் தேவையான உளுந்து மசாலாவைச் சேர்த்து சாதாமும், மசாலாவும் ஒன்றுடன் ஒன்று சேரும்வரை நன்கு புரட்டவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: இந்த உளுந்து சாதத்தை வெங்காயத் தயிர்ப்பச்சடி அல்லது கார சிப்ஸுடன் சுவைக்கவும்.

உளுந்து சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

செய்துவைத்துள்ள உளுந்து மசாலா - தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய சப்பாத்திகளாக இட்டு நடுவில் சிறிதளவு உளுந்து மசாலாவை வைத்து மூடி மறுபடியும் அவற்றை சப்பாத்திகளாக கவனமுடன் தேய்க்கவும். பின்னர் இவற்றை தவாவில் எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இந்த சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர்ப்பச்சடி, குருமாவுடன் சேர்த்துச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த மசாலாவை வைத்து குருமா, மசாலா கறி, புலாவ் செய்ய முடியுமா?

முடியும்.

கொத்தமல்லி, புதினா மசாலாவுக்குத் தேவையானவை:

சுத்தம் செய்து நறுக்கிய புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கப்

பச்சை மிளகாய் – 4

தக்காளி – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

தேங்காய்த் துருவல் - அரை கப்

நறுக்கிய முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள்- ஒரு டீஸ்பூன்

செய்முறை:

தேவையான பொருள்கள் அனைத்தையும் தண்ணீர் விட்டுக் கெட்டியாக மைய அரைக்கவும். கொத்தமல்லி, புதினா மசாலா தயார்.

இதைவைத்து டபுள் பீன்ஸ் அல்லது காராமணி குருமா, வெஜ் பிரியாணி மற்றும், வாழைக்காய் மசாலா கறி ஆகியவற்றைச் செய்யலாம்.

டபுள் பீன்ஸ் அல்லது காராமணி குருமா

தேவையானவை:

டபுள் பீன்ஸ் அல்லது வெள்ளை காராமணி – அரை கப்

உப்பு - தேவைக்கேற்ப

நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று

நறுக்கிய பூண்டு பற்கள் – 4

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

செய்துவைத்துள்ள புதினா மசாலா - தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

டபுள் பீன்ஸ் அல்லது காராமணியை ஆறு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் தேவையான உப்பு மற்றும் வேகவைத்த காராமணியைச் சேர்த்து அரை கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். இரண்டு கொதி வந்தவுடன் நாம் தயாரித்து வைத்துள்ள புதினா விழுது மற்றும் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சப்பாத்தி, பூரி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது இந்தக் குருமா.

வெஜ் பிரியாணி

தேவையானவை:

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

உப்பு - தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம்- ஒன்று

பூண்டு பற்கள் – நான்கு

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், நூல்கோல், உருளைக்கிழங்கு- மொத்தமாக ஒரு கப்

தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பிரெட் துண்டுகள் - சிறிதளவு

செய்துவைத்துள்ள புதினா மசாலா- தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், பூண்டு, அனைத்துக் காய்கறிகள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இத்துடன் அரிசியையும் சேர்த்து வதக்கி கூடவே தயிரையும் சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் ஒன்றரை கப் தண்ணீர், நாம் தயாரித்த புதினா விழுதையும் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடவும். பின்னர் குக்கரில் வெயிட் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பின்னர் குக்கரைத் திறந்து நெய்யில் பிரெட் துண்டுகளை வறுத்து இதில் சேர்க்கவும்.

வாழைக்காய் மசாலா கறி

தேவையானவை:

வாழைக்காய் - இரண்டு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - நான்கு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

தயாரித்துவைத்துள்ள புதினா மசாலா - தேவையான அளவு

சமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை!

செய்முறை:

வாழைக்காயை தோல்சீவி தடிமனான துண்டுகளாக நறுக்கி தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து பாதியளவு வேகவைக்கவும். வெந்த வாழைக்காயில் நாம் தயாரித்து வைத்துள்ள புதினா மசாலாவைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையைத் தாளிக்கவும். இதில் கலந்துவைத்துள்ள மசாலா வாழைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காய் நன்கு வெந்து மசாலாவும் காயும் ஒன்றாகச் சேர்ந்ததும் இறக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism